Thursday, March 23, 2006
(வேட்டையாடு) விளையாடு!!
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே
ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே
என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பது வியப்பே
உனை எதும் கேட்கமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேன்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உன்னை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க.. சிரித்தாய்
கதவோரம் நானும் நிற்க.. சிரித்தாய்
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன்
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைதேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம்தோறும் செதுக்கிட வேண்டும்
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீதான் சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே
ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பாதகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
--
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியது : பாம்பே ஜெயஸ்ரீ, உன்னிகிருஷ்ணன்
--
#158
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
எழுதியது யாரோ?
வழக்கம் போல கவுதம் - ஹாரிஸ் கூட்டணிக்கு கைகுடுக்கற கவிதாயினி'தாமரை' (அப்படித்தான் நினைக்கிறேன்).. ஒரு சந்தேகம் இருந்ததுனால தான் பதிவுல போடாம விட்டுட்டேன்
'ஒரு மாலை இளவெயில் நேரம்' இதையெல்லாம் சேர்த்து பாத்தா, தாமரை போலத்தான் இருக்கு!
முதல் தடவை இந்த பாட்டு கேக்கும் போது என்னை அறியாம 'ஒரு மாலை இளவெயில்'ன்னு முனுமுனுக்க ஆரம்பிச்சுட்டேன்.. :-) அதே சாயல் தான், இசையிலயும்.
இராசாவின் மனசிலே ?!
மணியன்>> வாங்கய்யா.. வாங்க.. என்னடா இன்னும் காணமேன்னு பார்த்தேன்.. இனி வரிசையா வந்திருவாங்கப்பா.. ;-)
இதோ வந்துட்ட்ட்ட்ட்டேன்....
ராசாவின் பார்வை ராணியின் பக்கம்.
கண் தேடுதோ சொர்க்கம்.
கை மூடுதே வெட்கம்.
பொன் மாலை மயக்கம்.
unarchivasppatu ezuthunaa maathiri theriyudhungalae raasa.. naan paata sollalae Bloga thaan sonnaen
கமல் நிறைய விளையாட போறார், அது மட்டும் நல்லா தெறியுது
raasa,
its sung by unnimenon, not unnikrishnan.
குறை சொல்றதுன்னு மொதல்ல வந்துருவீங்களேன்றீங்களா? ஆரஞ்சு தமிழன்யா நாங்கள்லாம் (எவ்வளவு நாள் தான் பச்சை தமிழன்னு சொல்றது..)
மிகவும் அருமையான பாடல். ஒரு நல்ல தமிழ் பாடல் கேட்ட திருப்தி. இதை பொறுமையாக தட்டச்சு செயத ராசா அவர்களுக்கு நன்றி.
செல்வகுமார்
//என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே//
இந்த வரிக்கு யாராவது அர்த்தம் சொல்லுங்களேன்.
//என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
இந்த வரிக்கு யாராவது அர்த்தம் சொல்லுங்களேன். //
"என்னை பற்றி நினைத்து நினைத்து, அதன் விளைவாக எனது பிம்பத்தை சுமக்கும் உனது முகம் என்றும் என்னை விட்டு மறையாது"
கேவிஆர்,
இதுதான் பொருளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
செல்வகுமார்
Post a Comment