Friday, March 17, 2006

ஓர் இரவுதலைக்குமேல வேகமா ஓடுற ஃபேன் சத்தம், அந்த காத்துல படபடக்கிற இந்த வார விகடன், பக்கத்துல போத்தி தூங்கிற சகா'வோட ச்சின்ன குறட்டை, எங்கயோ தூரத்துல போற ரயில்வண்டி, படுக்கும்போது (வழக்கம்போல) அணைக்க மறந்த எப்எம்'ல கேக்கிற மெல்லிய ப்ரியா கணபதி, கண்ணாடி ஜன்னல் வழியா மின்னுற நியான் லைட்டு..

இதுல எது மேல, என் தூக்கம் கெட்டதுக்கான பழிய போடலாம்னு யோசிச்சிட்டிருக்கேன். ஆனா, எனக்கு மட்டும் தாங்க தெரியும்...

அது கண்டிப்பா வீண் பழியாத்தான் இருக்கும்னு.. ;-)

--
#154

19 comments:

ILA(a)இளா said...

இது முதல் பதிவு தான், சாப்பிட பிடிக்கலைன்னு அடுத்த பதிவும் வரும், அப்புறமா சொல்றேன் பழி யார் மேலைன்னு.
"திங்கள் என்பது பெண்ணாக, செவ்வாய் கோவைப்(பொள்ளாச்சி) பழமாக" அப்படின்னு ஸ்PB, காதலனில் பாடினதுதான் ஞாபகத்துக்கு வருது.

பாலும் கசந்ததடி! படுக்கையும் நொந்ததடி! ராசாவுக்கு ...... வந்ததடி...

டி ராஜ்/ DRaj said...

I wonder which ammani is the actual reason for that sleepless night ;)

கொங்கு ராசா said...

ஏங்க இளா, தூக்கம் வரலைன்னா, அதுக்கு இது ஒண்னு தான் காரணமா இருக்குமா என்ன.. என்னமோ போங்க.. ;-)

கொங்கு ராசா said...

ராஜ்.. நீங்களும் அதே மாதிரியா யோசிக்கனும்.. ?

கைப்புள்ள said...

சரிங்க நான் வேற மாதிரி யோசிக்கிறேன்...நீங்க காலையில சீக்கிரம் போயி தண்ணி புடிக்கணும். சரியா?

கொங்கு ராசா said...

கைபுள்ள.. உங்களோட ஒரு தமாசுங்க..

சம்மட்டி said...

எதோ புதுக்கவிதை எழுதப் போறமாதிரி கனவு கண்டுட்டு, திடீர்னு முழிச்சி எழுதியிரிக்கிங்க, சரியா ?

Anonymous said...

அதெல்லாம் இல்லை மக்களே... ராசா!!! night சாப்பிட்ட கொத்து பரோட்டா பண்ற வேலை இது.. எப்படி!!! correct-a கண்டு பிடிச்சேனா?????

Agent 8860336 ஞான்ஸ் said...

மயிலிறகால் மெல்ல வருடுவது போல் எழுத எங்கள் 'தல' கொங்கு நாட்டு சிங்கத்துனால மட்டுந்தான் முடியும்!

ஏகாந்தம் விரும்பும் எங்கள் 'தல' விரைவில் 'துணை' சேர வாழ்த்துக்கள்!!

;-)

கொங்கு ராசா said...

சம்மட்டி> :-).. நான் கவிதை எழுதற மாதிரி வேறயாராவது கனவு கண்டா.. அவுங்க தூக்கம் கெட்டுபோகும்னு சொல்லுங்க.. அதுல ஒரு நியாயம் இருக்கு,,

அனானி (எ) தீ**>> ;-) (என்னத்த சொல்றது?)

ஞான்ஸ்>> //விரைவில் 'துணை' சேர// கையில சிக்குற அன்னைக்கு இருக்கு உங்களுக்கு..

சுதர்சன்.கோபால் said...

ஆங்.நான் கண்டுபுடிச்சிட்டேன் காரணத்த.சரக்க,கிரக்க மாத்தி சாப்பிட்டீங்களோ என்னவோ??

அனுசுயா said...

ஆகா வந்திருச்சா ?....?

தாணு said...

கண்டிப்பா கனவில் வந்தவங்களுக்கு சேதி சொல்லணும்!

Malathi said...

Enna Rasa.. Kavithai thane elutha try panninga.. athukula eppadiya...

Ennamo ellam thala keela nadakuthu... First thookam varathu, appuram thane kavithai ellam eluthuvanga.... ;-)

Karthik Jayanth said...

அண்ணா வோட ஓர் இரவுன்னு நினைத்து வந்தா, நம்ம அண்ணனோட ஓர் இரவு..

கைப்புள்ள said...

//கைபுள்ள.. உங்களோட ஒரு தமாசுங்க..//

பின்னே...கொசு கடி தாங்கலியோ?
:)-

கொங்கு ராசா said...

சும்மாங்காட்டியும் நான் எதாவது எழுதி வைக்க, உடனே எல்லாரும் கருத்து பொட்டி பக்கம் வந்து நான் எதோ காதல் வலையில சிக்கிட்ட மாதிரியெல்லாம் எபக்ட் குடுத்து அதையும் இதையும் சொல்றீங்க, அதுனால நானே ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டியிருக்கு..

"இப்போதைக்கு நம்ம ஃப்ரீ தான்".
(நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ண்ங்கப்பா!)

எல்லாரும் சேர்ந்து நமக்கு இல்லாத ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கிடாதீங்க.
அப்புறம் யாருக்காவது அப்படி ஒரு அயிப்பராயம் இருந்து, உங்க கருத்தெல்லாம் பார்த்து அது கெட்டுபோச்சுன்னா??.. அதை கெடுத்த பாவம் உங்களுக்கு வேண்டாம் அதுக்கு தான் சொல்றேன்.. ;-)

அனுசுயா said...

/ஆகா வந்திருச்சா ?....? - கொசு /
அப்டீனு ‍எழுத நெனச்சேனுங்க அது பாதியில publish ஆயிடுச்சு.மத்தபடி வேறு எதுவும் யாரும் நெனைக்கலீங்க.... :)

கைப்புள்ள said...

//"இப்போதைக்கு நம்ம ஃப்ரீ தான்".
(நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ண்ங்கப்பா!)//

ஓஹோ! அப்பிடி போவுதா மேட்டரு?முன்னாடியே சொல்லிருந்தீங்கன்னா...பாவம் அந்த தண்ணியையும் கொசுவையும் வம்புக்கிழுத்திருக்க மாட்டேன்.

மேல இருக்கறத படிச்சுட்டு எத்தினி அப்ளிகேஷன் வந்துச்சு ராசா? நடத்துங்க...நடத்துங்க.

பயலுக எல்லாம் ஓரமா நின்னு வேடிக்கை பாருங்கப்பா