Friday, March 24, 2006

நாலும் ஒண்ணும்..!

நாங்க நாலு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது..
எங்க வேணா எப்ப வேணா போவோம்..

இப்படித்தாங்க சொல்லிகிட்டு திரிஞ்சோம், பல நாளா.. போன வருஷம் வரைக்கும்..

இப்ப, இன்னைக்கு காலையில வரைக்கும் கூட, அதை கொஞ்சம் மாத்தி..

(இன்னும்)
நாங்க ரெண்டு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது
எங்க வேணா எப்ப வேணா போவோம்..'
ன்னு தெம்பாத்தாங்க இருந்தோம்.

மதியம் தான் பாக்கெட்டுல இருந்த செல்போன் 'ஆசை நூறு வகை'ன்னு ரிங்குச்சு, அந்த தைரியசாலியில இன்னொருத்தன்,
"மாப்ள! அடுத்த வெள்ளிகிழமை, கீரனூர் குலதெய்வங்கோயில்ல வச்சு, ..எதோ சும்மா ஒரு ஃபார்மாலிட்டிங்கிறாங்க.. யுகாதி'யோட ஒரு நாள் லீவு போட்டா சரியா இருக்கும்னு நினைக்கிறேன், வேற ஒரு கமிட்மென்ட்டும் வச்சுக்காத".

அடுத்த பத்து நிமிஷத்துல மறுபடியும் 'ஆசை நூறு வகை'
இப்ப முன்னமே மாட்டிகிட்ட ரெண்டும்..
'பங்கு..! சேதி வந்துதா..?'..என்ன ஒரே சந்தோஷம்..? எல்லாம் 'தான் பெற்ற இன்பம்.....
' வந்துச்சு வந்துச்சு.. ' ..
'ஒவ்வொரு வாட்டியும் நீ தப்பிக்கற.. இருக்குடி உனக்கு..'

அடப்போங்கடா.. நாங்கெல்லாம் யாரு..இனிமேல்..

நான் ஒருத்தன் தான்..
ம்ம்.. எனக்கும் பயமாத்தாங்க இருக்குது.
. :-( ..---
#160


18 comments:

கைப்புள்ள said...

//நான் ஒருத்தன் தான்..
ம்ம்.. எனக்கும் பயமாத்தாங்க இருக்குது.. :-( //

அப்ப ராசாங்குற ஆட்டையும் குளிப்பாட்டி ஆவுதுன்னு சொல்லுங்க

சிவகுமார் said...

கவலைப்படாதீங்க ராசா. நான் இருக்கேன். இனி நாம இரண்டு பேர். என்ன வேணா எழுதுவோம். எப்ப வேணா எழுதுவோம்.

கொங்கு ராசா said...

//குளிப்பாட்டி ஆவுதுன்ன// இன்னும் அந்தளவுக்கு போலைங்க... ஆனா அருவா ரெடியாகுதுங்க.. அதான்..

கொங்கு ராசா said...

//நான் இருக்கேன// விஜயன்... வாங்க.. உங்கள் ஆளுக இருக்கிற தைரியத்துல தான் நானும் இப்போ..
கண்டிப்பா..
என்ன வேணா எழுதுவோம். எப்ப வேணா எழுதுவோம். ;-)

கைப்புள்ள said...

//ஆனா அருவா ரெடியாகுதுங்க.. அதான்...//

அருவாக்கெல்லாம் ஆடு பயப்படலாமா? பிரியாணில கொதிக்கிற வரைக்கும் ஆடு தான் பாட்டுக்கு 'மே மே'ன்னுக்குட்டு ஜாலியா இருக்க வேண்டியது தானே? ஆனா கொதிக்கிறதுக்குக் கொஞ்சம் முன்னாடி நமக்கும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க.
:)-

கொங்கு ராசா said...

//ஜாலியா இருக்க வேண்டியது தானே?// அதைத்தான இப்போ செஞ்சுகிட்டு இருக்கோம். ஜாலிக்கு என்னைக்குங்க குறை வச்சிருக்கோம்..

//முன்னாடி நமக்கும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க.//
ம்ம்.. பார்ப்போம், டை கட்டிகிட்டு சென்னை வந்ததும் கதை எப்படி போகுதுன்னு..
நான் முந்திட்டா நேக்கு.. நீ முந்திட்டா நோக்கு.. ;-)

கைப்புள்ள said...

//நான் முந்திட்டா நேக்கு.. நீ முந்திட்டா நோக்கு.. ;-)//

:))))-

நன்மனம் said...

ராசா, கைபு "மே மே" சொல்லரது மே மாசத்தையா:-))))) ஸ்ரீதர்

கொங்கு ராசா said...

வாங்க நன்மனம் ஸ்ரீதர்.. வாங்க.. ;-)

சுதர்சன்.கோபால் said...

ராசா கல்யாண வைபோகமே....
கொங்கு ராசா கல்யாண வைபோகமே....

அப்படின்னு கோரசாப் பாட இன்னும் இத்தனை நாள் ஆகும்???

மணியன் said...

இரண்டிலிருந்து ஒன்றானது இன்று;
ஒன்றிலிருந்து இரண்டாவது என்று ?

Karthik Jayanth said...

கொங்கு சிங்கமே ராசா

இப்படித்தான் கடைசியா பெங்களூர் ல இருந்த வரைக்கும் கூட இதே வசனம்தான்

நாங்க நாலு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது..
எங்க வேணா எப்ப வேணா போவோம்..


இப்ப இங்க வந்து அது தேஞ்சி

நாங்க ரெண்டு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது
எங்க வேணா எப்ப வேணா போவோம்

இப்படி ஆகிடுச்சி.. கூட இருக்குற அந்த ஒருத்தனை பத்தி எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல..

எனக்கும் பயமாத்தாங்க இருக்குது.. :-(

ILA(a)இளா said...

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிடா வெட்டுற மேட்டர்தானா நமக்கு கிடைக்கும்?
//நாங்க நாலு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது..
எங்க வேணா எப்ப வேணா போவோம்..//
ஏற்கனவே இந்த சீனை லொள்ளுசபாவில காட்டிட்டாங்க, ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்.

கொங்கு ராசா said...

//எனக்கும் பயமாத்தாங்க இருக்குது.. :-( // மொத்த malekind'ம் பயந்து போய் தான் கிடக்குது போல..

Uma said...

:)

அனுசுயா said...

//மொத்த malekind'ம் பயந்து போய் தான் கிடக்குது போல//

நிஜமாவா..... ? :)

neighbour said...

valkaila adutha kattathuku munnerapooreanu sollungaaa...

raaajaavin paarvaai raaniyin pakkam...

ILA(a)இளா said...

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.