Friday, March 24, 2006

சினிமா சினிமா

நம்ம பதிவு பக்கமா அடிக்கடி வர்றவங்க, சில பேரு நம்ம கிட்ட ஒரு கேள்விய மறக்காம கேட்டு வைக்கறாங்க.. உன் பதிவுல நிறையா சினிமா வாசம் வருது, அதை குறைச்சுக்க கூடாதான்னு? அதெப்படிங்க, தலைநகரத்தை விட்டு ரொம்ப தூரம் தள்ளியிருக்கிற சின்ன ஊர்ல பொறந்து வளர்ந்த ஒரு சராசரி தமிழன் (சராசரின்னா இந்த இலக்கியம் புரட்சி இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட சராசரி) எப்படிங்க சினிமா வாசம் இல்லாம எழுதறது.. நம்மாள சினிமா வாசம் இல்லாம பேசவும் முடியாது, வாழவும் முடியாதுங்க, அது அப்படியே ரத்ததுல கலந்து போன விஷயம்..

ஒவ்வொருத்தரும் தன்னோட வாழ்க்கை குறிப்பை டைரியில எழுதி வைப்பாங்க, இல்ல அவுங்க செஞ்ச வேலைகள்ல பதிச்சு வைப்பாங்க, ஆனா நாங்கெல்லாம் சினிமாவுலயே பதிவு செஞ்சு வச்சவங்க.. அந்தந்த காலகட்டத்து பாட்டு கேட்டா அந்த அந்த காலத்து நினைப்பு வரும்.. அந்த நினைப்பு வரும் போது பாட்டும் ஞாபகம் வரும்.. ;-)

முதல் முதலா சைட்டடிச்சது, முதல் முதலா நம்ம கூட்டத்துல ஒருத்தன் காதல்'ன்னு ஆரம்பிச்சது, அப்புறம் தோல்வி அடைஞ்சது, முதல் முதலா நடுரோட்டுல கையமடிச்சுவிட்டு சவுண்ட் குடுத்ததுன்னு பள்ளிகூட கடைசிகாலத்துக்கு அமரன், தளபதியில ஆரம்பிச்சு, ஜென்டில்மேன், காதலன், பாம்பாய், இந்திரா' காலம்.

எப்பவும் ஒரு கூட்டம் சேர்த்துகிட்டு பேக்கரியிலயே பழிகிடக்கிறது, நட்பு காதல்ன்னு நடு ராத்திரியில ஹாஸ்டல் வராண்டாவுல அலசி ஆராயரது, பழையபுஸ்தக கடையில பாலகுமாரன தேடறது, 'நாலு நால் ஜிம் போன ஆர்ம்ஸ் வந்திடும், ஆனா இதுககெல்லாம் தில் வேனும், அது எந்த ஜிம்முலயும் கிடைக்காதுன்னு' எச்சு பேசிட்டு சுத்துன காலேஜ் ஆரம்பம், அதெல்லாம் முத்து, இந்தியன், குருதிபுனல், ஆசை, வான்மதி, கோயமுத்தூர் மாப்ளே' காலம்.

சும்மா ஒரு வீம்புக்கு பரிட்ச்சைக்கு ஒரு வாரம் முன்னாடி புஸ்தகத்தை எடுத்து வச்சு, அந்த செமஸ்டர்ல காலேஜ் பர்ஸ்ட், யூனிவர்சிடி பிஃப்த்'ன்னு திடீர்ன்னு கலந்துகட்டி அடிச்சு HOD'ல இருந்து ப்ரின்சி வரைக்கும் அசத்துனது, மாவோ, குந்தர்ன்னு உட்டாலக்கடி அடிச்சது, சிவப்பு டீஷர்டா எடுத்து மாட்டிகிட்டது அடுத்தவனுக்கு லெட்டர்எழுதி குடுக்கறது, நல்லா ஸிங்க் ஆகி போயிட்டிருக்கும் போது உள்ள புகுந்து ரியலிட்டி பேசி கட் பண்றதுன்னு காலேஜோட பின் பகுதி.. காதலுக்குமரியாதை, கோகுலத்தில் சீதை, காதல்தேசம், லவ்டுடே'ன்னு வாலி, படையப்பா வரைக்குமான காலம் .

இப்படியே இப்ப வந்த கள்வனின்காதலி, தம்பி வரைக்கும் சொல்லலாம்ங்க.. இப்படித்தாங்க நம்ம ஒவ்வொரு விஷயமும், சினிமாவுல தான் நாங்க கவிதை, காதல், புரட்சி, வாழ்க்கை'ன்னு எல்லாத்தையுமே ரிலேட் பண்ணி பார்க்கிறது.. இதுல சினிமாவ விட்டுடுன்னா.. சான்ஸே இல்லீங்க..

(இதையே ஒவ்வொரு பார்ட்டா பிரிச்சு பிரிச்சு பதிவு போட்டா ஒரு பத்து பதிவு தாங்கும் போல இருக்கே.. நல்ல வாய்ப்பை விட்டுட்டயே ராசா)

---
#159

6 comments:

Anonymous said...

////நல்லா ஸிங்க் ஆகி போயிட்டிருக்கும் போது உள்ள புகுந்து ரியலிட்டி பேசி கட் பண்றதுன்னு //////

:-))))))))))))))))

THYAG

ILA(a)இளா said...

//எப்பவும் ஒரு கூட்டம் சேர்த்துகிட்டு பேக்கரியிலயே பழிகிடக்கிறது, நட்பு காதல்ன்னு நடு ராத்திரியில ஹாஸ்டல் வராண்டாவுல அலசி ஆராயரது, பழையபுஸ்தக கடையில பாலகுமாரன தேடறது//
நம்ம வாழ்க்கை மாதிரியே இருக்கே.

இது உங்கம்மா, எங்கம்மா இல்லம்மா, சினிமா...சினிமா..

வெளிகண்ட நாதர் said...

எல்லாருக்கும் வாழ்க்கையின் பழசு சினிமாவாலே பிணைக்கப்பட்டதுதான், அத மாத்தமுடியாது, 70, 80, 90, களின் இளைஞர் பருவம், அந்தந்த காலகட்ட சினிமாக்களின் கல்வையோட ஒட்டறது. நீங்க சொன்னத வச்சு பார்த்தா,90ன் கலவை மாதிரி தெரியுது, நான் 80ன் கலவை, நம்ம வீட்டுப்பக்கம் வந்தா உங்களுக்கு தெரியும்!

Cipher said...

moththa post-m enakku appadiye porunthuthu ;-)

neighbour said...

eppavamaaa ilamaia kuraiyaama college padikara namma hero kalai vituteenga...

Anonymous said...

Enna Maplai Rassa eppadi irrukinga.. Enperu Sankar ,Nanum Azhagiya Pollachi than.. Velai nimitthama ippa Londonla Kuppai kottitu irruken Pollachi Ninaivugaloda.

Ennai ellarum Thittuvanga ennada etha sonnalum oru Cinmave Exampllla Vechu solrenuu.. Appa ennaku enna solrathunnu theriyathu.. But ippa solluven illa..

Mamssu Manasulla enna irruko appadiye sollite