Thursday, March 23, 2006

தலைப்பில்லாம ஒரு பதிவு

என்னோட போன பதிவு.. "அதுக்கு பேரு பதிவா.. ஒரு சினிமாக்காரி படத்தை போட்டு ரெண்டு வரி பாட்டு போட்டுட்டா அதெல்லாம் பதிவா"ன்னு இப்ப சண்டைக்கு வராதீங்க, எதோ போட்டாச்சு, நாலு பேரு பார்த்து நாலு வார்த்தையும் சொல்லியாச்சு, இப்போ வந்து அதெல்லாம் ஒரு பதிவா.. அப்படி இப்படின்னு சண்டை புடிச்சுகிட்டு, சின்னபுள்ளத்தனமாயில்ல இருக்கு.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. சரி. அதெல்லாம் அப்புறம் வெச்சுகலாம், இப்ப நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்..

இதை நான் இங்க எழுத காரணம், போன பதிவுக்கு வந்த பின்னுட்டங்க மட்டுமில்லைங்க, ரொம்ப காலமா நாம் எல்லோரும் கேட்டு, பேசிட்டு வர்ற விஷயம்தான். போட்டோவிலயோ இல்ல ஸ்க்ரீன்லயோ ஒரு நடிகரோ இல்லை ஒரு நடிகையோ அழகா இல்ல புடிச்ச மாதிரி இருந்தா, உடனே.. இதெல்லாம் மேக்கப்பு, நேர்ல இப்படி இல்லை'ங்கிறது... சினிமாவுல ஒருத்தன் சண்டை போட்டா உடனே இதெல்லாம் டூப், நிஜத்துல இவனால ஒன்னும் முடியாதுன்னு ஆரம்பிச்சு, இவுங்க பாத்த எல்லா ஷூட்டிங் கதையும் அவுத்து விடுறது. அது சினிமாங்க, அந்தளவுல அவுங்க எப்படி இருக்காங்கன்னு பாருங்க, அவ்ளோ தான், நீங்க ஏன் அந்த தனிமனுஷன பார்க்கரீங்க.. இந்த மாதிரி ஆரம்பிக்கறது தான் இந்த 'தனிமனித' வழிபாடு எல்லாமே. ஒருத்தன் நல்லா கதையெழுதினா போதும் அவர் தான் என்னோட ரோல்மாடல்'ன்னு பெருமையா சொல்லிக்க ஆரம்பிக்கறது, இவுங்க எல்லாரும் சேர்ந்து கேமிரா பார்த்து பேசறவங்களை எல்லாம் 'தலைவா'ன்னு கூப்பிடற ஆளுகல பாமரர்கள்'ன்னு மேதாவித்தனமா சொல்றது. அப்புறம் கதஎழுதறவரோட நிஜ முகத்தை தேடித்தேடி போக வேண்டியது, அப்புறம் அவுங்க மேல சாணியடிக்க வேண்டியது.. இல்லைன்னா, உள்ளுகுள்ளார புழுங்கிட்டு அப்புறம் வெளிய, அவரு சொன்னதுல என்னங்க தப்புன்னு ஜல்லியடிக்க வேண்டியது (வலைபதிவு எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷமாக போகுது, இப்பத்தான் இந்த 'ஜல்லி'ங்கிற வார்த்தைய எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.. அப்போ நானும் இனிமேல் இந்த சீரியஸ் பதிவாளர்கள் கூட்டத்துல இணைஞ்சிரலாம்). சினிமாவுல அழகா இருந்தா, ரெண்டு தடவை படத்துக்கு போய் பாருங்க, இல்லாட்டி கிரகம் தொலையுது, இங்க எவன் தப்பு செய்யலைன்னு ஒரு சாக்கு சொல்லிட்டு திருட்டு சி.டி எடுத்து, ஒரு காப்பி போட்டு வச்சுகிட்டு உங்களுக்கு 'தேவை'ப்படுறப்பவெல்லாம் பாருங்க. எழுத்து நல்லாயிருந்தாலும் அதே மாதிரித்தான், பேச்சு நல்லாயிருந்தாலும் அதே மாதிரித்தான்.. அதை விட்டுட்டு எதுக்கெடுத்தாலும் எதுக்குங்க பணத்துக்கும், அங்கீகாரத்துக்கும், புகழுக்கும் வேண்டி தன் திறமைய காட்டிகிட்டு இருக்கிற மனுஷன தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடரீங்க. அவன் திறமைய மட்டும் தூக்கி வச்சுகிட்டு ஆடலாம் அது தப்பில்லை. இப்படி சினிமா நடிகைன்னு ஆரம்பிச்சு, இசையமைப்பாளர்கள், எழுத்தாளர், அரசியல்வாதின்னு எல்லா இடத்துலயும் எதுக்கு நம்ம இப்படி போறோம்னோ தெரியலைங்க..
நாமளும் கமல் படம் பார்க்க போய், தியேட்டர்ல சவுண்ட் விட்டவன் சட்டைய கிழிச்சுட்டு அடிவாங்கின ஆசாமி தான்.. இன்னும் அதுல நிறையா மிச்சம் இருக்கு. இருந்தாலும் சொல்லனும்னு தோனுச்சுங்க சொல்லிட்டேன்...
சொல்லி மட்டும் என்னங்க.. உருவவழிபாடு வேண்டாம்னு ஊர்ஊரா சிலைய உடைச்ச பெரியாருக்கு, அவரோட வழிவ்ந்தவங்கன்னு சொல்லிகிட்டு ஊருஊருக்கு அவருக்கு சிலைவச்சு அதுக்கு மாலைபோட்டு, கையெடுத்து கும்பிடற மாதிரி கேமிராவுக்கு போஸ் குடுக்கறவங்க தானே நம்ம..

தனிமனுஷன ரோல் மாடலா எடுத்துகாதீங்க, அவரோட சிந்தனைய, செயல்பாட ரோல்மாடலா எடுத்துக்கோங்கன்னு சொன்னா.. "அவனுக்கு திமிர்ப்பா..எவனையும் மதிக்க மாட்டேங்கிறான்"னு ஒரேஅடியா நம்ம மேல சாணி அடிச்சிடறாங்க.. நாலு பேரு இப்படி சொல்றாங்கன்னு, அதுக்காக..இந்த தெனாவெட்டு, திமிர்எல்லாம் தூக்கிபொட்டுட்டு submissiveஆ இருக்கலாம்னு முயற்ச்சி செஞ்சா. அதுவும் முடியலைங்க.. எல்லாம் கைபுள்ள சொன்ன மாதிரி 'ப்ளட்லயே வந்திருது ', நான்என்னத்தைங்க செய்யறது..

யாருங்க அது "எங்கயோ ஆரம்பிச்சு, என்னத்தயோ சொல்லி,எங்கயோ முடிச்ச மாதிரி இருக்குது..??"ன்னு நக்கலா பார்க்கிறது.. ம்ம். அப்புறம், வேற எப்படிங்க இருக்கும், அப்படியே ஒரே கோர்வையா உங்கள அப்படியே அலாக்கா தூக்கி மேதாவி பீடத்துல உக்கார வைக்கிற மாதிரி எழுத நானென்ன அறிவாளிகள் ஆராதிக்கற 'ஃப்ரொபஷனல்' எழுத்தாளரா இல்ல, கண்மனிகள உயிரையும் குடுக்க தயரா இருக்கிற 'அரசியல்வாதி'யா, இல்ல பாலிபேஷேகம் செய்யிற ரசிகர்கள உணர்ச்சிவசப்பட வச்சு காசு சம்பாதிக்கிற 'சினிமாக்காரனா'? .. நான் சும்மா blogger'ல ஓசியில எழுத எடங்குடுக்க்றாங்கன்னு எழுதற கொங்கு ராசா'ங்க. இப்படித்தான் இருக்கும்.

---
#157

3 comments:

கைப்புள்ள said...

ஏனுங்க ராசா! இந்தப் பதிவுல ரவுசு கம்மியாவும் ரோசம் ஜாஸ்தியாவும் இருக்குற மாதிரி எனக்குப் படுது...ஏன்? இல்லை எனக்கு மட்டும் தான் அப்பிடி படுதா?

Pavals said...

அப்படிங்கரீங்க..? கம்மியோ, ஜாஸ்த்தியோ ரவுசு இருந்தா சரி.. என்ன நாஞ்சொல்றது..

Pavals said...

ராஜ் அதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களா?? அந்த பதிவு எழுதி ஒன்னரை வருஷம் ஆச்சுங்க.. இங்க இருக்குதுங்க..