Tuesday, March 7, 2006

ரசனை


அம்மாவின் அன்பு
குழந்தையின் சிரிப்பு
உழைப்பின் வியர்வை
காலைச் சூரியன்
இரவு விண்மீன்
கோடைகால காற்று
கடலோர அலைகள்
பூவின்மேல் பனித்துளி
காதலியின் முத்தம்


ரசிக்ககூடிய எல்லாம் இருக்கிறது கடற்கரையில்
என்றார்கள் நட்பு வட்டத்தில்.

என்னால் தான் ரசிக்க முடிவதில்லை
பிச்சை கேட்டு சுற்றும் குழந்தைகளுக்கு நடுவில்

---------


நான் மேல எழுதினது பத்தி யாருக்காவது எதாவது கோபமோ/சாபமோ இருந்தா அதை எல்லாம் மாலதி'க்கு சொல்லிடுங்க.. (இங்க பின்னூட்டத்துல சொல்லுங்க், அவுங்க வந்து பார்த்துக்குவாங்க)..எதாவது நல்ல விஷயம் சொல்லனும்னா, அதுவும் இங்கயே சொல்லுங்க.. அதை நான் கேட்டுகிறேன் ;-)


(pic from : http://www.alfarrow.com/index.php)
--
#150

12 comments:

கைப்புள்ள said...

கலக்கிப் புட்டீங்க ராசா!
கடைசி ரெண்டு வரியில என்னமா டச் பண்ணிட்டீங்க?

இதுக்குத் தூண்டுதலா இருந்தா மாலதிக்கும் ஒரு பெரிய 'ஓ' போட்டு வைக்கிறேன்.

என்னங்க கொங்கு ராசா நீங்க சென்னையைப் புடிக்கும்னு சொல்றீங்க? நான் கோயம்புதூர் போனப்ப காலேஜ் சீனியர்ஸ்'மெட்ராஸா நீயு! இருடி உனக்கு இருக்கு'ன்னு பீதியை இல்ல கெளப்பி விட்டிருந்தாங்க?

Pavals said...

வாங்க கைபுள்ள.. நன்னி... நன்னி..

காலேஜ் முடிச்சதும் மூனு வருஷம் நமக்கு எல்லாமா இருந்த ஊருங்க.. அதுனால நமக்கு சென்னை ரொம்ப புடிக்கும்..

மணியன் said...

நல்ல பாட்டு. எழுதியவருக்கு பாராட்டுக்கள்!!

Pavals said...

//எழுதியவருக்கு பாராட்டுக்கள்!!// ஏங்க மணியன்.. நான் என்னமோ சந்தையில யாரோ எழுதினத கொண்டு வந்து நான் எழுதினேன்னு சொன்ன மாதிரியில்ல இருக்கு நீங்க சொல்றது.. அதான் தெளிவா டிஸ்க்ளெமியிர் மாதிரி போட்டிருக்கனே.. பார்த்து பாராட்டுங்க..

ILA (a) இளா said...

ஏரிக் கரையோரமோ, ஆத்தாங் கரையோரமோ போனாதான் உங்களுக்கு பாட்டு வரும்னு நெனச்சேன். மழையை பார்த்தாலும் கவிதை, கடலை பார்த்தாலும் கவிதை. என்னமோ போ ராசு, மழை பெய்ஞ்ச இந்த நேரத்துல வெளியேயும் மழை, உள்ளேயும் மழை.

Pavals said...

வாங்க இளா.. சும்மா விளையாட்டு தான இது.எப்படியோ கவிதைன்னு ஒத்துகிட்ட வரைக்கும் சரி..
//வெளியேயும் மழை, உள்ளேயும் மழை// வூட்டுல ஆள் இல்லேன்னா போதுமே. ;-).ம்ம். நடத்துங்க, நடத்துங்க.. இங்க வேலை பின்னி பெடலெடுக்குது.. :-(

Geetha Sambasivam said...

nalla kapi adichuttu per vangitingala, poramaiyaga irukku.

தகடூர் கோபி(Gopi) said...

// மழையை பார்த்தாலும் கவிதை, கடலை பார்த்தாலும் கவிதை//

ராசாவுக்கு தண்ணிய பாத்தா கவிதை வரும்னு சொல்ல வர்றீங்களா?

நாராயணா.. நாராயணா..

Pavals said...

கீதா >> இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. உலகம் போற போக்குல நாமளும் போயிட வேன்டியதுதான் ;-)

கோபி >> கோபிகிருஷ்ணன் குறும்புங்கிறது இதுதானா..

ஏஜண்ட் NJ said...

********* + *********

//ரசிக்ககூடிய எல்லாம் இருக்கிறது கடற்கரையில் என்றார்கள் நட்பு வட்டத்தில்.

என்னால் தான் ரசிக்க முடிவதில்லை
பிச்சை கேட்டு சுற்றும் குழந்தைகளுக்கு நடுவில்//



வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் எங்கள் 'கொங்கு நாட்டுச் சிங்கம்' என்பதை மீண்டும் மீண்டும் நிலைநாட்டும் எழுத்து இது!

********* + *********

Anonymous said...

Rasa kalakitinga... Seri, adutha topics ready panava, sollunga Rasa! and chennaiya vitutu kudukathatharku nandri!

Kaipulla... nan verum inspiration...

Gnans romba than kondaduringa rasava!

Pavals said...

என்னது அடுத்த லிஸ்ட்டா.. ஹலோ..என்ன விளாட்டு இதுங்கிறேன்.. வேண்டாம்.. அழுதுறுவேன்.. அழுது..!

ஞான்ஸ் இவுங்க சொல்றதெல்லாம் கண்டுகிறாதீங்க. ;-)