Monday, March 6, 2006

மழைநேரம்

கம்பி ஜன்னல் வழியா வெளிய பெய்யிற மழைய பார்த்துகிட்டு நின்னுருக்கீங்களா?.. அது ஒரு, என்னன்னு சொல்றது... அருமையான விஷயம்ங்க..




கூட யாருமே இல்லாம, நம்ம மட்டும் வீட்டுல தனியா இருக்கற ஒரு சாயங்காலத்துல, எதிர்பார்க்கம திடீர்னு சட சடன்னு அடிச்சு கொட்டுற மழைய, சன்னமா ஆடியோ சிஸ்டத்துல குலாம் அலியவோ இல்லை ஜாஹீரையோ போட்டுவிட்டுட்டு, தெரிக்கிற சாரல் நம்ம மேல விழுந்தும் விழுகாத மாதிரி நின்னு, வாசல்ல சாயங்காலம் உதிர்ந்த பவளமல்லிகளுக்கு நடுவால சுழிச்சு ஓடுற மழைதண்ணிய பார்த்துகிட்டே நின்னிருக்கீங்களா.. நான் நின்னிருக்கேன்.. நிறைய தடவை.


நேத்து சாயங்காலம் கூட அப்படித்தாங்க, யாரும் இல்லாம தனியா இருக்கும் போது திடீர்ன்னு மழை பேய்ஞ்சுது, ஆனா என்ன, வாசல்ல பவளமல்லிக்கு பதில்ல பக்கத்து வீட்டு தொட்டி க்ரோட்டன்ஸ், குலாம்அலி கேக்க கரண்ட் இல்ல, அதுக்கு பதிலா மழையிலயும் வேகத்த குறைக்காம போற வண்டிசத்தம்... :-)

சரி, ஒரு சிகரெட்டாவது புடிக்கலாம்னு பார்த்தா அதுவும் காலி.

இருந்தாலும்.. பவளமல்லியும் குலாம்அலியும் இல்லாம, மெழுகுவத்தி வெளிச்சத்துல கூட, மழை அழகாத்தாங்க இருக்குது...



அந்திமழை பொழிகிறது..சும்மா ஒரு ரெபரெண்ஸ்க்கு.. ;-)


[அதாவது, நேத்து சாயங்காலம் எங்க ஊர்ல மழை பேய்ஞ்சது.. அவ்ளோ தான் விஷயம்]

--
#149

12 comments:

கைப்புள்ள said...

ஹை! இது கூட நல்லா தான் இருக்குது ராசா! வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்க ஒரு ரசனை வேணும்.

//[அதாவது, நேத்து சாயங்காலம் எங்க ஊர்ல மழை பேய்ஞ்சது.. அவ்ளோ தான் விஷயம்]//

அத்தோட நீங்க தம் அடிக்கிற பார்ட்டின்னும், நேத்து சாயந்திரம் தம் அடிக்க முடியாம காஞ்சிருக்கீங்கன்னும் தெரிஞ்சிடுச்சே!

Pavals said...

கைப்புள்ள.. காஞ்சிருக்கேன்னு எல்லாம் சொல்ல முடியாது.. எப்பவாது இந்த மாதிரி ஊர்ல இல்லாட்டி இல்ல ரொம்ப நாள் கழிச்சு யாராவது சகா'வ பார்க்கும் போது.. அந்த மாதிரி நேரத்துல அடிக்கிறது உண்டுங்க..;-)

மத்தபடி ஊருகுள்ளார ராசு'ன்னா தங்கம்ங்க.

ஏஜண்ட் NJ said...

மழைக்கால மாலைப்பொழுதில் ஜன்னலோரம் அசைந்தாடும் திரைச்சீலை அருகில் நின்று கல்லபக்கோடா கொறித்துக்கொண்டு இருக்கும்போது, உள்ளூர ஒரு கதகதப்பு ஓடுறப்போ, காதோரம் சில்லென வீசி ரகசியம் பேசும் தென்றல் மாதிரி,

தான் எழுத்தில் வடித்த அனுபவத்தை, படிக்கும் வாசகரும் அனுபவித்து உணரும் வகையில் அற்புதமான மயக்கும் எழுத்து நடை கொண்ட எங்கள் கொங்கு நாட்டுச் சிங்கத்திற்கு இணையேதுமில்லை என்பது வெள்ளிடை மலையெனத் தெளிவு.


ரொம்ப குளுருதா தல!
;-)

Pavals said...

ஞான்ஸ்.. நம்ம பதிவை விட நீங்க எழுதியிருக்கிற கமென்ட் தான் டாப்'

நீங்க நம்ம பக்கம் வந்தலே குளிரு தான.. இங்க வெறும் மழை தான்.. ஆனா நீங்க ஆலங்கட்டு மழை இல்ல கொண்டு வர்ரீங்க.. ;-)

Anonymous said...

ரொம்ப இலக்கியதரமா இருக்குதுங்க.

பயலுக்கு கல்யாணம் ஆன தெளிஞ்சிடும் :-)))

Pavals said...

//அனானி//எத்தனை பேரு இப்படி நம்மள கவுத்தறதுல குறியா இருக்கரீங்க.. ஒருத்தம் சந்தோஷமா இருந்தா உங்களுக்கெல்லாம் ஆகாதே ;-)

neighbour said...

mazai penchudhunaa enaku oru keta palakam.. udana nenaiyaa aarambichiruvaen...

atleast kaiyaavadhu nenaichuruvaen... avalavu aasai...

கைப்புள்ள said...

//மத்தபடி ஊருகுள்ளார ராசு'ன்னா தங்கம்ங்க.//

அப்ப கொங்கு நாட்டுத் தங்கம்னு சொல்லுங்க

Anonymous said...

Ada! Parunga, nenga kavithai elutha try pananumne Mazhalai peitha mathiri iruku.... Analum, enga singara chennaila oru naal than mazhalai vanthuchu.....Rasaoda 'Eluthu Nadai' pathavathu, enoru tharava mazhalai vantha nalla than irukum

Pavals said...

கைபுள்ள>> ;-)

மாலதி >> கவிதை எழுத ட்ரை பண்ணினனா?..என்னங்க சொல்றீங்க..எப்ப நடந்துச்சு அது.?

நம்ம எழுத்துக்கு மழை வந்துதுன்னா சந்தோஷம் தான்.. இப்போதைக்கு நீங்க shoutboxல இருந்து commentboxக்கு வந்திருக்கீங்க. அதுவும் சந்தோஷம் தான்..

ஒரு நாள் தான் மழை வந்துச்சுன்னு அலுத்துக்கரீங்க. போன வாரம் அடிச்ச வெய்யிலுக்கு, இப்போ இந்த மழை கொஞ்சம் ஆறுதல் குடுத்திருக்கில்ல.. அதுக்கு சந்தோஷப்படுங்க..

Anonymous said...

Seri, kandippa santhosa padanum than... Kelunga Rasa, Got some topics which u can think over..

Ammavin Anbu,
Kulandhaiyin Siripu,
Ulaipin Veyarvai,
Kalai Sooriyan,
Iravu Vinmeen,
Kodaikala Katru,
Kadalora Alaigal,
Poovinmel Panithuli,
Kadhaliyin Mutham...

Aahaaaa... Nane kavithai eluthalam pola!

Enga papom, eni varum blogs! ;)

Pavals said...

ஏனுங்க மாலதி.. நீங்க யாரு பெத்த புள்ளையோ என்னவோ.. நல்லாயிருப்பீங்க..எதுக்கு இப்படி வம்படியா எப்படியாவது நான் கவித எழுதி அசிங்கப்படனும்னு ஆசைப்படுறீங்கன்னு தெரியலை..

தலைப்பு எல்லாம் அழகா இருக்கு.. பேசாம நீங்க கவிதை எழுதிடுங்க.. நான் வந்து நல்லதா நாலு கமெண்ட் போடுறேன்.. அதை விட்டுட்டு.ஏங்க இப்படி..

இருந்தாலும் உங்க அன்புக்கு கட்டுபட்டு.. அதுவும் என்னோட ஃபேவரிட் சென்னையில இருந்து கேக்கரீங்கன்னு,, இன்னைக்கு ஒரு கவிதை எழுதத்தான் போறேன்.. அப்புறம் உங்க விருப்பம்..