Friday, March 10, 2006

யோசனை

எனக்கு ஒரு சின்ன யோசனைங்க, அதை பத்தி முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி நம்ம வலைப்பதிவு மக்கள்கிட்டயும் ஒரு யோசனை கேக்கலாம்னு நினைச்சுத்தான் இந்த பதிவு. உன் யோசனைக்கும் வலைப்பதிவு மக்களுக்கும் என்னடா சம்பந்தம்னு கேட்டீங்கன்னா? இருக்கு.. இல்லாமையா உங்க கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கேன்.. இல்ல அப்படி உங்களுக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரத்தை உங்ககிட்ட வந்து பேசுற அளவுக்கு நான் என்ன...ம்ம்.. வேண்டாம்.. நானா எதுக்கு வாய குடுத்து மாட்டிகிட்டு.. நான் எப்ப என்னைய பத்தி எதாவது தப்பா சொல்லுவேன், உடனே அதை புடிச்சுக்கலாம்னு இங்க நிறைய பேரு காத்துட்டிருக்காங்கன்னு எனக்கு தெரியும்.இப்பொ என்ன சொல்ல வந்தேன்.. ம்ம், ஞாபகம் வந்திருச்சு, முதல்ல அதை சொல்லிடறனுங்க,

நான் இந்த பதிவு எல்லாம் எழுதறத நிறுத்திடலாம்னு யோசிக்கிறனுங்க. அது ஏன்னா?, எதாவது எழுதனும்னா, எதாவது யோசிக்க வேண்டியிருக்குதுங்க, யோசிச்சா தேவையில்லாம மண்டை சூடாகிபோகுது, அப்புறம் அந்த சூட்டை தணிக்க வேற தனியா யோசிக்க வேண்டியிருக்குதுங்க. சும்மா இப்படி அடிக்கடி யோசிச்சு யோசிச்சு தேவையில்லாம, அதுபாட்டுக்கு அமைதியா, இருக்கிற இடமே தெரியாம தூங்கிட்டிருக்கிற என்னோட மூளைய வேற யோசனைங்கிற பேருல தொந்தரவு செய்ய வேண்டியிதாபோகுதுங்க.

யாருங்க அது, அதெல்லாம் உனக்கு இருக்கான்னு நக்கலா கேக்கிறது, அதெல்லாம் இருக்குதா இல்லையான்னு எல்லாம் என்னால இப்ப யோசிச்சிட்டு இருக்க முடியாதுங்க, அதுனால இப்போதைக்கு இருக்குதுன்னே வச்சுக்குவோம். (சும்மா ஒப்புக்கு சப்பானி மாதிரி, ஒரு பேச்சுக்காவது ஒத்துக்கோங்க அப்பு)

அதுனால இப்போதைக்கு ரொம்ப சீரியஸா, இதை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கறங்க. யாராவது நான் ரொம்ப யோசிச்சு இருக்கிற மூளைய செலவு செஞ்சுட்டு அம்போன்னு நிக்கிறதுக்குள்ளார, எனக்கு பதிலா நீங்க யோசிச்சு, எனக்கு ஒரு நல்ல யோசனை சொல்லிவீங்களாம்..எதை பத்தியா??.. அதைபத்தி தாங்க இவ்ளோ நேரமா பேசிட்டிருக்கேன்.. மறுபடியும் எல்லாம் சொல்ல முடியாதுங்க.. நீங்களே யோச்சிச்சு அது என்னான்னு தெரிஞ்சுகிட்டு, அப்புறம் அதை பத்தி யோசிச்சு ஒரு நல்ல யோசனையா சொல்லுவீங்களாம்,யோசிக்காதீங்க.. டக்குன்னு யோசிச்சு சொல்லுங்க, அந்த யோசனையா அடிப்படையா வச்சு தான், நான் மேற்கொண்டு என்னோட யோசனைய தீவரப்படுத்தி.. நல்லா யோசிக்கனும்.
எழுத ஒன்னும் கிடைக்கலைன்னா..எப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க :-(

--
#151

25 comments:

பாலராஜன்கீதா said...

அன்புள்ள கொங்குராசா,

எல்லோருக்கும் தெரிந்த பழைய யோசனை ஒன்று வேண்டும் எனில் என்னுடைய மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.
:-)

balarajangeetha at gmail dot com /
balarajangeetha at yahoo dot com

கொங்கு ராசா said...

வாங்க பாலா.. முதல் தட்வையா கமென்ட்;டியிருக்கீங்க.. வருக.

அது என்னங்க அப்படி எல்லாருக்கும் தெரிஞ்ச யோசனை.. மயிலு அடிச்சு விட்டிருக்கேன். பார்த்து சொல்லுங்க.

யாத்திரீகன் said...

எத்தனை பேருய்யா இப்படி கெளம்பியிருக்கீக... ? உதா: டுபுக்கு ;-)

ராசா.... சின்ன விசயமானலும் ரசிச்சு ஒங்கூரு பேச்சு வழக்குல எழுதுறீகலே.. அதக்காவது எழுதுறத நிப்பாட்டாதீய...

கொங்கு ராசா said...

யாத்ரீகன்.. இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம்ங்க.. ;-)

ஆனாலும், நான் எத்த்தனை பெரிய பெரிய விஷயம் எல்லாம் எழுதறேன்.. நீங்க இப்படி சின்ன விசயம்னு சொல்லீட்டீங்களே :-(

Anonymous said...

ஏணுங்ணா... இந்த மாரி குண்டப்போடறீங்க........
ரோசனை வர்ரப்ப பதிவப்போடுங்! பதிவப்போடணுமேண்ணு அதுக்காக ரோசிக்காதீங்!

ஐய்யோ! இல்லீங்! அடிக்காதீங்!

////எழுதுறத நிப்பாட்டாதீய///// நானும் அதே அதே!

தியாக்

Malathi said...

Hello enna Rasa nenga... Seri nanum Sahanavum, ungala kavithai eluthu, Thought provoking post podunganu ellam keka matom...

Pls dont stop writing.. Ideas venumna, nanga tharom....

கொங்கு ராசா said...

தியாக் >> உங்க ரோசனைய பரிசீலிக்கலாமான்னு யோசிக்கிறேன்
(இதெல்லாம் எனக்கே ஓவராத்தான் தெரியுது)

மாலதி >> ஓஹோ.. நீங்களும் சஹானா'வும் கூட்டுக்காரங்க தானா??..
எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க..

Malathi said...

Rasa: Kootukarangalum ella, Poriyalkarangalum ella.... Thiyag sonna mathiri... Olunga rosanai varapo post podunga.. seriya...

(இதெல்லாம் எனக்கே ஓவராத்தான் தெரியுது)-- Theriyuthu la.. appuram enna...

Agent 8860336 ஞான்ஸ் said...

//இந்த பதிவு எல்லாம் எழுதறத நிறுத்திடலாம்னு யோசிக்கிறனுங்க.//- ராசா.


பொதுவா இந்த அரசியல் கட்சி கூட்டங்கள்-ல தான் தலைவர் கேப்பாரு,
"நா இன்னும் தலைவராவே நீடிக்கனுமான்னு"
அதுக்கு கூட்டத்தில பலத்த குரல்ல பதில் வரும்,
" ஆமா, நீங்க தான் தலைவர்" அப்டீன்னு.

இதுக்குப் பேரு "பல்ஸ் பாக்குறது"-ம்பாங்க!

அந்தமாரி நீங்களும் செய்றீங்கன்னு நா சொல்லல, எதிரிக் கட்சி பாசறையில் பேசிக்கறாங்க!


151-க்கு வாழ்த்துக்கள் தல, இன்னும் நெறய எழுதுங்க, இப்ப நானெல்லாம் எழுதலீங்களா? ;-)

கொங்கு ராசா said...

ஞான்ஸ்.. சோக்கா வச்சீங்களே ஆப்பு.. ம்ம்.. சும்மாவா சொன்னாங்க.. உள்குத்து திலகம்'ன்னு உங்கள?.. ;-)

வாழ்த்துக்கு நன்றி.. அப்புறம், யாரு அந்த எதிரிகட்சிக்காரங்கன்னு சொல்லுங்க.. ஒரு நல்ல ஆட்டோவா பேசிடுவோம்..

Agent 8860336 ஞான்ஸ் said...

"மாலதி நீங்களும் சஹானா'வும் கூட்டுக்காரங்க தானா?" அப்டீன்னு நீங்களே கேட்ருக்கீங்க தல,

இந்த எனது பதில், உங்களது "எதிரிக் கட்சியினர் யார்?" என்ற கேள்விக்கானது அல்ல! அல்ல! அல்ல!!

;-)

கொங்கு ராசா said...

ஞான்ஸு, எதோ,எப்பயாவது இப்படி நடக்குது.. அது உங்களுக்கு பொறுக்காதே.. நான் உங்க பிரண்ட் தான.. விட்ருங்களேன்.. மீ பாவம்.. ;-)

meena said...

அட ராசாஆஆஆஆஆஆ!

என்னமோ இன்னைக்கித்தேன் அரியோம்னு பதிவ படிக்கலாமேன்னு வந்தா...

ஏ.........ன்?


என்னமோ ரோசனை பண்ணாம எழுதுப்பா :)

இளவஞ்சி said...

ராசா!

நீங்க எழுதறதெல்லாம் நேரா இதயத்துல இருந்து தானே வருது!! அப்பறம் அங்க மூளைக்கு என்ன வேலை?

தமாசு பண்ணாதீக்க ராசா! அப்டீப்டி ரோசன பண்ணி நம்மூரு மெஜாரிடிய கொறச்சுபுடாதீகப்பு...

சுந்தர் ராம்ஸ் said...

இன்னும் எழுதுங்க ராசா... அதப்பாத்தாவது எங்களுக்கும் (சரி, சரி, எனக்கும்) ஏதாவது எழுத வருதானு பாக்கலாம்.

ILA(a)இளா said...

ராசா, நீங்க உலகத்துல உருப்படியா பாக்குர வேலையே 2 தான். ஒண்ணு தோட்டம், இன்னொன்னு வலைப்பதிவு. ஒழுக்கமா ரெண்டு வேலயும் பாருங்க இல்லைன்னா.... நடக்கிறதே வேற.
ரோசன சொன்னா கேட்டுக்கணும்.

Uma said...

ipdi blog-aa moodittu poga porennu sonnavunga ellam (ennayum sethu dhaan) sonna solla kaapaathaama thirumbhi vandhuttom :) Neenga paadu pesaama blogunga.

Malathi said...

ஞான்ஸு: Enna ennai pathi pechu eluthu enga..... ???

யாத்திரீகன் said...

ஆஹா.. நீங்க சின்ன விசயம் மட்டும் எழுதுரீங்கனு சொல்லலை, சின்ன விசயமானாலும்.. அதுல இருக்குற உம் கவனீக்கலீங்களா ? :-(

கொங்கு ராசா said...

வாங்க மீனா வாங்க.!

//அங்க மூளைக்கு என்ன வேலை? // இளவஞ்சி, நீங்க சொல்றதுஞ்சரி தான்.. யோசிக்கறேன் ;-)


ராம்ஸ்> நம்மூர்ல இருந்து இன்னொரு ஆளா.. வாங்க வாங்க..

இளா >> நிறுத்திடலாம்னு எல்லாம் முடிவு இல்லீங்க.. ஒரு யோசனை தான்.. ஹீ..ஹீ..

உமா.. கண்டிப்பா ப்ளாக'த்தான் போறேன், கவலைப்படாதீங்க ;-)

யாத்ரீகன்>. சும்மனாச்சுக்கும் கலாய்க்க சொன்னதுங்க அது. நீங்க எதும் சங்கடப்படாதீங்க..

முகமூடி said...

அதாவது கதையே இல்லாம ஒரு மூணு மணி நேரம் படம் எடுக்கலியா நம்மாளுங்க... அது மாதிரி எழுதணுமான்னு யோசிக்கிறேன்னு சொல்லியே ஒரு பதிவ ஒப்போத்திட்டாரு நம்மாளு.. அந்த டெக்னிக்க தவிர மத்தத எல்லாம் கண்டு பிடிச்சி பேசிகிட்டு இருக்கீக அல்லாரும்...

(இருந்தாலும் பல்ஸ் பாக்குறத கண்டுபிடிச்ச இணைய நாரதரின் செயலுக்கு வாழ்த்து)

கொங்கு ராசா said...

//ஒரு பதிவ ஒப்போத்திட்டாரு நம்மாளு.//

நானே அததானுங்க பதிவுல கடைசியா சின்ன எழுத்துல போட்டிருக்கேன்.. நீங்க டக்'குன்னு புடிச்சிட்டீங்க.. முகமூடி'ன்னா சும்மாவா?

பொன்ஸ்~~Poorna said...

எப்படியோ, எழுதறத நிறுத்தறேன்னு சொல்லியே இத்தன பேர எழுத வச்சிட்டீங்களே ராசா, பெரியாளுதான் நீங்க....

பினாத்தல் சுரேஷ் said...

ம்.. அப்பாலே?

கொங்கு ராசா said...

பூர்ணா>>//பெரியாளுதான் நீங்க....// என்னமோ பெரியவங்க சொல்றீங்க.. சரியாத்தான் இருக்கும் ;-)

சுரேஷ் >> அப்பால என்னங்க.. ரெண்டு பதிவு போட்டாச்சு..