Thursday, January 12, 2006

பொங்கல்


ஊதக் காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்ப கூளம் பத்த வச்சுக் காயலாம்..
தை பொறாக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப்பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம்
பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிர நாள்தான் டோய்..

சும்மா இந்த மாதிரி தலைவர் பாட்டு பாடிகிட்டு, கண்டதையும் போட்டு கொளுத்தி, காத்தை கெடுக்காம, சும்மா ஒரு சாங்கியத்துக்கு வேணுமின்னா ஒரு கற்பூரத்த கொளுத்தி வச்சு, எல்லாரும் ஒழுங்கா, அமைதியா 'போகி' கொண்டாடுங்க சாமிகளா..

நமக்கு பொங்கலுக்கு நிறையா வேலை கிடக்குதுங்க, பட்டி தெப்பகுளம் கட்டனும், கலர் பேப்பர் ஒட்டனும்,.. ஊருபட்ட வேலை இருக்குங்க.. எல்லம் ஒழுங்கா முடிச்சு, பொங்கல் வச்சு, அப்புறம் மாட்டையையன் கோயில் போயி, போறவழி, வர்றவழியெல்லாம் நம்மாளுக செய்யிற வம்புகளையெல்லாம் பொறுத்துகிட்டு, இவனுகள பத்திரமா கூட்டிட்டு வந்து (நானா?.. நான் நல்ல பையன்ங்க..!!).. பெண்டு நிமிர்ந்துரும் நமக்கு..

இங்க சும்மா சடைஞ்சுகிட்டாலும், நிஜத்துல ரொம்ப ஆசையா எல்லாத்தையும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஆயிரம் வேலை வந்தாலும், வருஷத்துல ஒரு நா தானுங்க, இந்தா ஆட்டமெல்லாம்.. ஆடும் போதே ஆடிறனும்.. என்ன நாஞ்சொல்றது.?

பானையில பொங்கல் வைக்கிறவங்க, செப்பு பாத்திரத்துல வைக்கிறவங்க, குக்கர்ல வச்சு படைக்கிறவங்க, எதுவுமே வைக்காம கோயில்ல போயி சக்கர பொங்கல் வாங்கி சாப்பிடுறவங்க, இது எதும் இல்லாம வீட்டுல உக்காந்து சன் டீ.வி'யில ஐக்கியமாயிடுறவங்க, இதுவே ஊர்ல இருந்திருந்தான்னு வெளியூர்ல, வெளிநாட்டுல உக்காந்துட்டு பெருமூச்சு விடுறவங்க...
எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..


--#133

10 comments:

PKS said...

//ஆடும் போதே ஆடிறனும்.. என்ன நாஞ்சொல்றது.? //

Adichi Addunga. Edum problemnaa Delhi-la Paarthukalaam. :-))

Pongal Vaazhlthukal.

Anbudan, PK Sivakumar

SnackDragon said...

//வேணுமின்னா ஒரு கற்பூரத்த கொளுத்தி வச்சு,//
மிகவும் சரி.
நீங்கள்தான் பொங்கல் வாழ்த்து முதல் பதிவு போட்டிருக்கீங்க.
ரொம்ப நல்லா கொண்டாடுங்க. (மாட்டுப் பொங்கல்) வாழ்த்துக்கள்.

Anonymous said...

//இதுவே ஊர்ல இருந்திருந்தான்னு வெளியூர்ல, வெளிநாட்டுல உக்காந்துட்டு பெருமூச்சு விடுறவங்க...//
நான் இந்த வகைங்க ஹ்ம்ம்

//எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

Karthik Jayanth said...

"இதுவே ஊர்ல இருந்திருந்தான்னு வெளியூர்ல, வெளிநாட்டுல உக்காந்துட்டு பெருமூச்சு விடுறவங்க.."
ஊம் என்னத சொல்ல ..

"எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"
உங்களுக்கும் இனிய பொங்கல் greetings

Anonymous said...

//பட்டி தெப்பகுளம் கட்டனும், கலர் பேப்பர் ஒட்டனும்,.//

ஆஹா ஊர் நெனப்பு வந்துருச்சே

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சுகந்தி

அனுசுயா said...

பொங்கல் என்றால் தற்போது நினைவுக்கு வருவது ‍டி.வியில் என்ன புது படம். எந்த நடிகை பேட்டி என்ற நினைவுதான். இந்த பொங்கலையாவது டி.வியில் இருந்து திரும்பி பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Pavals said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கு நன்றி..

PKS.. டெல்லியா??.. ஆகா, தேரை இழுத்து தெருவில விடுறதுங்கிறது இதுதானா ;-)

Anonymous said...

Pongal VaazhthukkaL Raasaa.

Unknown said...

கொங்கு ராசரே,
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

Pavals said...

நன்றி உமா, கல்வெட்டு (எ) பலூன் மாமா.. பொங்கல் அழகா எங்கம்மாவுக்கு சந்தோஷத்தை தர்றா மாதிரி கிழக்கு பக்கமே பொங்கிவிழுந்துருச்சு. ;-)