Monday, January 30, 2006

அது ஒரு அழகிய ___ காலம்!

கொடுமை கொடுமையின்னு கோயலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை விரிச்சு போட்டுகிட்டு ஜிங்குங்குன்னு ஆடுச்சான்'ன்னு சொல்லுவாங்க ஊரு நாட்டுல, வர வர அந்த கதையாயிட்டு வருதுங்க, தமிழ்பதிவுக பக்கம் வர்றாதுன்னாலே நிறைய பேரு பயப்படுறாங்க, பயப்படாமா வந்து மட்டும் நம்ம என்னத்த கிழிச்சுபுட்டோம்னெல்லாம் கேள்வி கேக்ககுடாது.

இது எப்படி இருக்குதுன்னா, காட்டுல வேலை செய்யிற ஆளுக வேலைக்கு நடுவால அப்படியே கொஞ்சம் எளப்பாராலாம்னு, ஓரமா இருக்கிற புங்கமரத்தடியால போயி உக்காந்தங்களாம். அட அங்க நாலு நல்ல மனுசங்க இருக்காங்கன்னு இன்னும் நாலு பேரு வந்து உக்காந்தாங்களாம்.. எல்லாரும் வந்து உக்காந்து எதாவது பாட்டு பாடுறது, பழமை பேசுறதுன்னு நேரத்தை உருப்படியா கடத்திட்டு, சுறுசுறுப்பா வேலைய பார்க்க போயிட்டிருந்தாங்க. சரி இது நல்லாயிருக்குதே, நாலு பேரு கூடிபேசுனா, நாலு நல்ல விசயம் சந்திக்கு வருதுன்னு, ஒரு கூட்டம் மரத்துக்கடியால நல்லா காரை திண்ணை கட்டி இன்னும் பத்து பேரு வந்தாலும் உக்காந்து பேச வசதியா ஒரு சவுரியம் செஞ்சாங்க, அதுல அது நொள்ளை இது நொள்ளைன்னு சில பேரு ஆரம்பிச்சாங்க, அது ஒரு பக்கம் இருந்துச்சாம்.. காரை எல்லாம் போட்டு நல்லா சவுரியம் செஞ்சு வச்சதும் கொஞசம் கொஞ்சமா முழுநேரமும் அந்த மரத்தடியில வந்து உக்காந்துக்க ஆரம்ப்பிச்சாங்க சில மைனர்க, அங்க தான் ஆரம்பிச்சது சிக்கல்.. எதோ வேலை வெட்டிக்கு நடுவால நாலு பேரு உக்காந்து சிரிச்சு பேசி சிணுங்கிட்டிருந்த இடம் இப்போ சட்டசபை மாதிரி ஆகிபோச்சுங்க, அங்க தான் அவைகுறிப்பு நீக்கமெல்லாம் செய்யவேண்டியிருக்கும்.

என்னென்னமோ சொல்லனும்னு தோனுது, வேண்டாம் விடுங்க..
'அது ஒரு அழகிய வலைப்பூ காலம்....'!,

--
#138

6 comments:

தகடூர் கோபி(Gopi) said...

//'அது ஒரு அழகிய வலைப்பூ காலம்....'!//

ஹூம்.. பழைய நெனப்பு!...

Anonymous said...

அன்புள்ள ராசா, இதில் சற்றே சிறிய தவறு இருக்கு.எனக்கு தெரிஞ்சி மரத்த நடரதுக்கு முன்னாலயே திண்ணை கட்டியாச்சு.என்னமோ போங்க.:( btw உங்களை சந்திக்க நினைத்தேன் முடியவில்லை.டிசம்பரில் அங்கு தான் இருந்தேன்.
-பேரு வாணாம்பா சாமி

Pavals said...

பேர் சொல்லாதவர்க்கு:: நான் கதையில சொன்னது, கதைக்கக சொன்னதுங்க.. அது மரத்தடி'யவோ இல்லை 'திண்ணை' மாதிரி தளங்களை எந்த வகையிலயும் குறிக்கலைங்க ..
(இப்படி ஒரு டிஸ்க்ளெமியிர் போடலைன்னாலும், யாரும் ராசா வூட்டு முன்னாடி வந்து ஆர்ப்பாட்டம் பண்ண போறதில்லைதான், இருந்தாலும் சொல்லிறது நம்ம கடமைபாருங்க.. நான் என்ன இளக்கியவாதியா என்ன?)

நவீன் ப்ரகாஷ் said...

விடுங்க ராசா
அப்படியோ ஓரமா மண்ண குவிச்சு ஒக்காந்தமா காமெடிபடம் பார்த்தமான்னு ரசிச்சிகிட்டு இருக்கலாம் !

விஜயன் said...

ஆமாம் ராசய்யா. பெரும்பாலான வலைத்தலங்களில் ஆரோக்கியமான விஷயங்கள் அலசப் படுவதை விட ஏச்சுக்களும் பேச்சுக்களும் மலிந்து கிடக்கின்றன. எனக்கும் அதைப் பற்றிய கருத்து உண்டு.

இருந்தாலும் உங்களுடைய பதிவுகள் ஆரோக்கியமானதாகவே உணர்கிறேன்.
விஜயன்
www.vijayanmullai.blogspot.com

Pavals said...

அததாங்க நவீன் ரொம்ப காலமா நான் செஞ்சுகிட்டிருக்கேன்!! ஆனா சும்மா சொல்லகுடாதுங்க,, தமாசுன்னா தமாசு.. நம்ம விவேக்தேவர் கூட தோத்து போயிருவாரு போல இருக்குது..

வாங்க விஜயன். நன்றி.. சரியாத்தான் சொல்லிட்டிருந்தீங்க.. ஆனா கடைசியா ஒரு வரி தட்டுனீங்க பாருஙக.. நம்ம பதிவு ஆரோக்கியமா இருக்குன்னு.. இதையும் நான் தமாசாவே எடுத்துக்கிறேன்.. ;-)

என் பதிவு கூட ஆரோக்கியமான பதிவுன்னு பேரு எடுக்கிற அளவுக்குத்தான் இருக்குது தமிழ்பதிவுக நிலமைன்னுக்கூட எடுத்தக்கலாம், :-(