Thursday, January 12, 2006

தேசிய இளைஞர் தினம்.



தேசிய இளைஞர் தினம். ஜனவரி 12, விவேகானந்தர் பிறந்தநாள்.

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்

  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா

  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.


--விவேகானந்தர்

---
#132

3 comments:

அனுசுயா said...

இளைஞர் தினத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

ஏஜண்ட் NJ said...

மீண்டும் மீண்டும் தனது தனித்தன்மையை இப்படி உபயோகமான தகவல் அடங்கிய பதிவுகள் மூலம் நிரூபித்து தமிழ் வலைப்பதிவுகளின் ராசாவாக விளங்கும் எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம் வாழ்க! வாழ்க!!

Karthik Jayanth said...

Raasa ,

inga innakki than 12. naanum ennoda blog la vivenkananda Quotes porukken, if u have time do visit and drop u r comments.