Tuesday, January 17, 2006

கலைந்த சபதம்


நமக்கு ஒரு காலத்துல அஜித்'படம்னா ரொம்ப புடிக்கும்ங்க, ஒரு பக்கம் இளையவரு எதுக்கெடுத்தாலும் அடிக்குரல்ல 'அது ஒரு ஃபீலிங்'குன்னு ஆரம்பிச்சு ஒரே தத்துவமா சொல்லி பின்னி பெடலெடுத்தாருங்களா, அந்த நேரம் நம்ம தல உன்னை நினைத்து, முகவரி, அமர்க்களம், தீனா'ன்னு ஒரு அளவுக்கு உக்காந்து பார்கிறவன வெறுப்பேத்தாம நடிச்சதுல அஜித் படம்னா சட்டுன்னு கூட்டமா கெளம்பி போயிகிட்டிருந்தோம், ஆனா சிட்டிசன்'னு ஒரு படத்தை தேவி தியேட்டர்ல என்னைக்கு முத நாள் முதஷோ பார்த்த்னோ அன்னையில இருந்தே நமக்கு எதோ இந்த சூடு பட்ட பூனை கணக்கா, தல படம் ஓடுற தியேட்டர் பக்கமே தலைவச்சு படுக்கறதில்லீங்க.
அவரும் நம்ம சபதத்தை எப்படியும் கலைச்சுற கூடாதுன்னு, ரெட்'ல ஆரம்பிச்சு, ஆஞ்சநேயா வரைக்கும் உறுதியா இருந்தாரு, ஒரு ரசிகனோட சபதம் கலையகூடாதுன்னு நம்ம தல இவ்ளோ தூரம் மெனக்கெடுறாரேன்னு நானும் சந்தோஷமா இருந்தனுங்க.. ஆனா பாருங்க.. ஒரு சபதம்னு ஒன்னு எடுத்தா, அதை கலைக்கிறதுக்குன்னு யாராவது இருப்பாங்க, விசுவாமித்ரருக்கே ஒரு மேனகை உள்ளார பூந்து தவத்தை கலைச்சுட்டாங்களாம், நம்மெள்ளாம் எம்மாத்திரம், நம்ம சபத்தை கலைக்க 'உதய'ன்னு ஒரு நாதேரிப்பய ரெண்டு வருஷம் கழிச்சு அமேரிக்காவுல இருந்து வந்து சேர்ந்த்தான்.
நான் பாட்டுக்கு பட்டி முடிஞ்சு, வண்டி கட்டிட்டு மால கோயலுக்கு போயிட்டு வந்த சலிப்புல சிவனேன்னு வூட்டுல உக்காந்துட்டு இருந்தேன், 'மாப்ள தல மூனாவது கண்ணை திறந்துகாட்டுறாரம், போலாம் வாடா'ன்னு ஒரே நச்சு பண்ணிட்டிருந்தான், சரி பய ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கான், தல வேற ஜெயிச்சுட்டு பேசறேன்னு பெரிய பேச்செல்லாம் பேசியிருக்குன்னு நானும் போனேன்.. ஆனா பாசக்கார தல, நான் எடுத்த சபத்ததை இப்படி பொசுக்குன்னு சொல்லாம கொள்ளாம கைவிடுவேன்னு நினைக்கலை போல, வழக்கம் போல ஒரே பின்னல் தான்.. செம ஆக்ஷன் படம், உள்ளார போன உடனே, 'ஏண்டா வந்த, ஏண்டா வந்த'ன்னு மூஞ்சி மேலயே உதைக்கிறாரு. ஆள் இளைச்சு ரொம்ப அழகா இருக்காருன்னாங்க, எனக்கென்னவோ சீக்குபுடிச்சு ஒடைஞ்சு போன அடிமாடு மாதிரி இருக்காருன்னு தான் தோணுச்சு.
பக்கத்துலயே நல்லப்பாவுல 'தவமாய் தவமாயிருந்து' ஒட்டிட்டிருக்கு, என்னதான் சேரன் பொசுக்கு பொசுக்குன்னு மூஞ்சிய மூடிட்டு அழுதாலும், இவுனக நெத்தி கண்ணை திறக்கறாருனக, ஓரகண்ணை காட்டுறாருகன்னு போனதுக்கு, நல்ல நாளும் அதுவுமா அங்க போயி உக்காந்திருக்கலாம்..
'வுடு மாப்ள, அடுத்து திருப்பதி'யாம் அதுல திருப்த்யா நடிச்சுருவாரு தல, ஏ.வி.எம் படம், பேரரசு டைரக்ஷன் வேற'ன்னு நம்ம சகா வரும் போது சொன்னான்..'அதான் பயமே'ன்னு நினைச்சுகிட்டேன்.

வரும் போது தியேட்டருக்கு வெளிய நின்னுகிட்டு ஒருத்தரு, படம் எப்படிங்க?ன்னு விசாரிச்சாரு, எனக்கு நேரம்காலம் தெரியாம 'மவுனம் சம்மதம்' படத்துல மம்முட்டி, நாகேஷ பார்த்து கோவமா சொல்லுவாரே 'பரமநாயேசிவம்'ன்னு, அந்த டயலாக்குத்தான் ஞாபகம் வந்துச்சு.

--
#134

4 comments:

அனுசுயா said...

அருமையான விமர்சனம். கோயமுத்தூர் குசும்பு கொஞ்சம் தூக்கல்.

சுதர்சன் said...

//உள்ளார போன உடனே, 'ஏண்டா வந்த, ஏண்டா வந்த'ன்னு மூஞ்சி மேலயே உதைக்கிறாரு.//

:)) LOL

Uma said...

sooper review :)

thanara said...

ஏன் ராசா தல நடிச்ச அட்டகாசம்
நல்லாத்தானே இருந்தது. தல நல்ல
நடிகன் ராசா. தல,க்கு கிடைக்கிற கதையள்,இயக்குனர்கள் சரியில்லை
ராசா.ஆனால் திருப்பதி நல்லா வரும்
எண்டு சொல்லுகினம். பாப்போம் ராசா
தல எப்பிடியெண்டு.