![](http://photos1.blogger.com/blogger/4821/449/320/next1.jpg)
கிணத்துமேட்டுல வண்டிப்பாதைய பார்த்துட்டு உக்காந்திருக்கேன்,
ரொம்ப நேரமா,
யாருமே அந்த பக்கம் வரவும் இல்லை,
என்னை கவனிக்கவும் இல்லை...
அமைதியா யோசிக்கலாம்..
ஈரமான காத்து,
சுத்தமா, அமைதியா... என் மனசு மாதிரி இல்லாம...
கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்து யோசிக்கனும்...
சில்வண்டு சத்தம் மட்டும் தான் கேக்குது,
இருட்டிருச்சு,
ரொம்ப நேரமா யோசிச்சுட்டே உக்கந்திருக்கேன், எதுக்கோ காத்துட்டு இருக்கேன்.
கழுத்தெல்லாம் ஒரே வலி,
பேசுன வார்த்தைக தலைக்குள்ள பாரமா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டு வீட்டுக்கு போயிடனும்..
எங்கயோ தூரத்துல டி.எம்.எஸ் குரல்,
என்ன பாட்டுன்னு தெரியல,
நடுராத்திரி ஆயிடுச்சு போல,
மழை துளிக்க ஆரம்பிச்சிருக்கு,
இன்னும் உக்காந்திருக்கேன்..
வீட்டுக்கு போயிட்டேன், நழைஞ்சுகிட்டே..
அம்மா கதவை திறந்துவிட்டுட்டு பார்க்கிறாங்க.
அதே பார்வை,
நான் எப்பவாது எதாவது தப்பா செஞ்சாலோ,
இல்லை
ஜாஸ்த்தியா பேசுனாலோ பார்க்கிற பார்வை..
இப்போ,
நான் எதையும் கண்டுக்க மாட்டேன்,
என்ன வேனும்னாலும் சொல்லுங்க,
இல்லை மறுபடியும் சண்டை புடிங்க..
இன்னைக்கு ராத்திரி தெளிவா இருக்கேன்,
உங்கள பார்த்து அமைதியா சிரிக்க முடியும்,
நான் ஜெயிச்சுட்டேன்..
இந்த சண்டை என்னை ஒன்னும் செய்யாது..
எத்தனை தடவை தான் செய்யாத தப்புக்கு போராடறது...
ம்..
ஒரு பிரச்சனை முடிஞ்சுது.. அடுத்தது??
--
#109
9 comments:
என்ன ராசா, வீண் பழி போடாதீங்கன்னு பேசுனதால, இந்த பதிவா ???
ஏனுங்க,
என்னாச்சிங்க உங்களுக்கு..
பொள்ளாச்சியில வெயிலு ஏதும் ஜாஸ்தியாயிடுச்சா (மழை தூறினதா இல்ல சொன்னாங்க)
enakkum intha anubhavam undu. pala murai
Antha parvai exactly en ammavum appadithan
hmmm..romba azhaga aarambicheenga...unga vedhanai andha azhaga azhichiduchu...:(
சிறிது காலம் அமைதிக் காத்தது, அந்தப் பார்வையை மிக சுலபமாக ஏற்றுக் கொள்ள வழி வகுத்ததோ! வாழ்க, அமைதிக் கொண்டு வாழ்வதின் நன்மை சொன்னதற்காக.
thalivaa...
kitta vaanga...enakku mattum kaathula sollidinga...
ennathaan solla vareenga:-)
kongu raasaa..........
பொறுமையா படிச்ச எல்லாருக்கும், படிச்ச்புட்டு கமெண்ட் போட்ட நல்லவங்களுக்கும் நன்றி..
சும்மா.. ஒரு விளையாட்டுக்கு, யாருக்கும் புரியாம எழுத முடியுதான்னு முயற்ச்சி செஞ்சேன்.. எனக்கே புரியலை.. ஆனா வெங்கி மட்டும் ஒரு அர்த்தம் கண்டு புடிச்சிருக்காரு.. நன்றிங்க.. நம்ம லெவலுக்கு அவர் மட்டும் தான் இருக்கார் போல.. (இது போல புரியாமல், கதையுமில்லாம, கவிதையுமில்லாம, இனிமேல் நிறைய எழுதனும்.. அப்பத்தான்.. ஒரு அறிவுஜீவி எபக்ட் கிடைக்கும் ;-)
Enakku Venky sonadhum pureela neenga pesuradhum pureela. Ennavo yaarodayo sanda pottuttu ore upsetla irukeengannu nenechen. Illeengala?
!@#$%^&*()_+|]}{{[Pஒபொஇஉய்ட்ரெஃஃQஅஆசா அஐச்ட்fக்ழ் அழ் '":;"'ல்;/?.,.ம்] ]}\;:[{??..,
இப்படிக்கு - பத்ம ப்ரியா
Post a Comment