Wednesday, July 6, 2005

அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்.

வெளிய போனா ஒரே குப்பை, சகதி, ஒரே கிருமி கன்றாவியா இருக்குன்னு வூட்டுகுள்ளாரயே உக்காந்துடறோம், ஆனா அப்பவும் முடியுதுங்களா?? ஜன்னல் வழியா, கதவு வழியா, நம்ம வூட்டு அசிங்கம் வெளிய போற ஜலதாரி வழியான்னு, பல வழியில எல்லாம் அசிங்கமும் உள்ளயே வந்திருது, சரி ஜன்னலையும் கதவையும் சாத்தி வச்சிரலாம்னு நினைச்சா??.. அது எத்தனை நாளைக்கு, ஃபேன் காத்தும், ட்யூப்லைட் வெளிச்சமும் பத்தாது, இயற்க்கையான காத்தும், வெளிச்சமும் வேனும்னு மனசும் உடம்பும் பரபரக்குதுங்களே!

அதுக்கு என்ன செய்யறது?? வாழ பழகிக்க வேண்டியதுதான், குப்பைய பார்த்தா நம்ம பாட்டுக்கு உடனே சங்கடப்பட்டு, அருவருத்துப்போய் அது மேல காறித்துப்பி அந்த இடத்த மறுபடியும் அசிங்கப்படுத்தாம, என்ன நாத்தம்'?ன்னு பொருமலோட சொல்லிட்டு டக்குன்னு காறிதுப்புவாங்க பாருங்க.. இப்படி ஒவ்வொருத்தனு துப்பிதுப்பி தான்டா இத்தன நாத்தம்'ன்னு அப்படியே அந்நியன் ஸ்டைல்ல பாயலாம்னு கூட தொணுது.. கருட புராணம் முழுசா படிச்சுபுட்டு அதை செய்யவோம்', .. எங்க விட்டேன்.. ஆங்!! மறுபடியும் அசிங்கப்படுத்தாம.. ஒதுங்கி போயிர வேண்டியதுதான்.. ஆரம்பத்துல கஷ்டம் தான், ஆனா கொஞ்சம் கொஞ்சமா நாமளும் பழகிடுவோம்.. எப்படின்னா?? இந்த எக்களக்ஸ் தெரியும்ங்களா??
அதாங்க எக்களக்ஸ் மாவீரன்னு முன்ன தூர்தர்ஷன்ல விளம்பரம் வருமே, பூச்சுகொல்லி மருந்து, செடிகளுக்கு அடிக்கிற மருந்துங்க, நீங்க பாட்டுக்கு வயத்துல இருக்கிற பூச்சிக்கெல்லாம், நான் சொன்னேன்னு எக்களக்ஸ் குடிச்சராதீங்க. இதை குடிச்சவனும் ஒருத்தன் இருக்கான், அது வேற கதை.. நம்ம கதைக்கு வருவோம்.. ஆரம்பத்துல எக்களக்ஸ் வந்தப்போ தென்னை மரத்துல வண்டுப்பூச்சிய தடுக்க அதத்தான் ஊத்துவோம், யாருங்க அது வண்டுபூச்சுயோட பயாலஜிக்கல் நேம், ஜியோகரபிகள் ப்ரபர்ட்டியெல்லாம் கேக்கிறது, அதெல்லாம் யாராவது புரபசர கேளுங்க, நான் வெறும் விவசாயி, ச்சே மறுபடியும் ட்ராக் மாறிட்டனா..??
அந்த வண்டுபூச்சிய கொல்றதுக்காக ஒரு போசி எக்களக்ஸ ஒரு பக்கெட் தண்ணியில கலந்து, வாசம் படாம இருக்க நம்மாளுக மூஞ்சியில ஈரலதுண்டு கட்டிகிட்டு மரத்துல ஏறி ஊத்துவாங்க.. அந்த வாசம் பட்டஉடனே, மரத்து மேல இருந்து குண்டு குண்டா வண்டு கீழ விழுகும்.. அதெல்லாம் முன்னே, ப்ளாஷ்பேக்.. இப்பவெல்லாம் ஒரு போசி எக்களக்ஸும் ஒரு பக்கெட் தண்ணியும் கலக்கி வச்சுகிட்டு, காய் போடும் போது கீழ விழுந்த வண்டை எடுத்து அதுக்குள்ளார போட்டா.. சும்மா குற்றாலீசுவரமன் மாதிரி கலக்கலா நீந்தி வெளிய வந்திருது.. அந்தளவுக்கு அதுக்கு எதிர்ப்பு சக்திய அதிகம் செஞ்சு வச்சிருக்கோம்.. (ஆனா, அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு 350ml குடிச்சா, நம்மாளுக வயிறு எரிஞ்சு செத்துபோயிட்டு தான் இருக்காங்க). ஆமா இப்ப எதுக்கு மரவண்டை பத்தி பேசுனோம்!.. நாம காத்துல வர்ற தூசி கிருமிய பத்திதான ஆரம்பிச்சோம்.. அதுல எக்களக்ஸ் எங்க வந்துச்சு.. ம்ம்..
தெரியலையே.. என்னமோ சொல்ல வந்தேன் என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. ஞாபகம் வந்திருச்சு, அந்த எக்களக்ஸோட தீவிரத்த எதிர்த்து வாழ பழகிட்ட மரவண்டு மாதிரி.. குப்பையும், கிருமியையும் சகிச்சுகிட்டு, அது நம்மள ஒன்னும் பண்ண முடியாத மாதிரி வாழ்ந்திடவேண்டியதுதான்.. அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதானா?'ன்னு அம்மாஞ்சி ஹீரோ அடிபட்டு கிடக்கிற தங்கச்சிய நினைச்சு கத்துற மாதிரி இங்க கத்தாதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. காத்துல வர கிருமிய என்ன செய்வீங்க.. நேரடியா மல்லுக்கு நின்னா, நம்மளும் ஒரு கை பார்க்கலாம்.. கையில சிக்குனாலும், சத்தியமா நானில்லைன்னு சொல்றவன என்ன செய்யறது.. விட்ற வேண்டியத்துதான்.. நம்ம ஆளுக பாதிக்க படறாங்களேன்னா?? சரிதான், நம்ம வூட்டுபுள்ளைக முகம் சுழிக்குதேன்னா?? அதுவும் சரிதான். ஆனா, நாலு எடத்துக்கு போயி பழகனும், நாலு விஷயம் தெரிஞ்சுக்கனும்னா, அப்புறம் இப்படித்தான இருக்கு இன்னையதேதிக்கு.. கிருமியே இல்லாத காத்து எங்கயும் இல்ல.. இமய மலை மேல கூட எதோ காத்து மண்டலம் கெட்டுபோயிருக்காம், நிஜம்மாங்க, இந்த வாரம் அவுட்லுக்ல சொல்றாங்க, நம்மூரெல்லாம் எம்மாத்திரம்..
சும்மா குணா மாதிரி 'அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்'ன்னு சொல்லாம,
வாழபழகிக்க வேண்டியதுதான்..(யப்பா, எப்படியோ டைட்டில் வந்திருச்சு) இது பயந்தாங்கொளித்தன்ம்ன்னா, ஆமா பயந்தாங்கொளித்தனம் தான்.. அவனவன் வாழ்க்கையில எது முக்கியமோ, அதுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியதுதான்.. !!, உனக்கு நிம்மதி முக்கியமா, அதுக்கு அடுத்தவன் சந்தோஷமா இருக்கனுமா வேண்டாமா, அதுவும் அவனவன் கையிலதான்.. அவனவன் நினப்புல தான்..

"I think everybody has brokenness. There's no doubt about that. We live in a fallen world. This is not heaven. Everybody has scars. Everybody is hurting somewhere, I guarantee you that. Everyone has a hidden hurt" - RickWarrenசரி.. இப்போ எதுக்கு இத்தன பழமை பேசிட்டுகிடக்கிற?ன்னு கேட்டீங்கன்னா.. என்னத்த சொலறது போங்க.. இந்த கிரகமே வேண்டாம்னு நாம ஒதுங்கி போனாலும், நம்ம போற பக்கம், வர்ற பக்கம் போயி ஆகாத நாயம் பேசறாங்க, டக்குன்னு சட்டைய புடிச்சு உலுக்கினா, சத்தியமா நானில்லைங்கிறாங்க.. அந்த கடுப்புல எதோ புலம்பிட்டேன், அவ்ளவு தான்.. சத்தியமா இவுங்கெல்லாம் (கீழ வரிசையா சுட்டி போட்டிருக்கனே, அவுங்க) இப்படி சொல்றாங்களேன்னு நான் போட்டிக்கெல்லாம் சொல்லலைங்க..
1

2

3

4

5


---
# 104

9 comments:

குமரேஸ் said...

"கருட புராணம் முழுசா படிச்சுபுட்டு அதை செய்யவோம்"

என்ன ராசா கருட புராணத்தை வீட்டில் வைத்து படிக்கிறியளோ?

என் கைக்கு பத்ருகரி அவர்கள் எழுதிய "வைராக்கிய சதகம்" கிடைத்தபோது இந்த வயதில் வீட்டில் வைத்து படிக்கக்கூடாது என்று தடைபோட்டுவிட்டார்கள். இப்ப அதை தேடுகிறேன் கிடைக்கவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்

படம் நல்லாயிருக்கு ராசா.

பினாத்தல் சுரேஷ் said...

//நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க... //

your post, the underlying message and the method of delivery proves the catchline of your blog is ABSOLUTELY WRONG and a DELIBERATE LIE.

I am going to sue you for this.

கொங்கு ராசா said...

//என்ன ராசா கருட புராணத்தை வீட்டில் வைத்து படிக்கிறியளோ? // ஒரு பேச்சுக்கு சொன்னதுங்க அது. நமக்கு கருடபுராணம் யாரு எப்ப எழுதினாங்க.. அது என்ன சமாச்சாரம். ஒன்னும் தெரியாதுங்க..

//நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...//
//I am going to sue you for this.//
நான் சொல்லிகலயே.. நாலு பேரு சொல்றாங்கன்னு தான சொன்னேன்.. அதுக்கெப்படிங்க என் மேல கேஸ் போடுவீங்க.. ;-) ஒரு வேளை.. நாலு பேரெல்லாம் சொல்லவேண்டாம்.. நிஜம்மாலுமே நீ முட்டாள் தான் தெரிஞ்சுக்கோ'ன்னு சொல்றீங்களா??
ஒன்னுமே புரிய மாட்டேங்குதே!!

அன்பு said...

ராசா...
6.
வதா இந்தப் பதிவையும் கொடுத்திருக்கலாம்:)

enRenRum-anbudan.BALA said...

ராசா,
அருமையான பதிவு ! வேற என்னத்த சொல்ல ? தமிழ் வலைப்பதிவுலகச் சூழலை அனாமதேயமா வந்து சிலர்
அசிங்கப்படுத்தறாங்கோ :-( காசியும் மதியும் போட்ட efforts-லாம் வீணாப் போயிடும் போல இருக்கு !!!
என்றென்றும் அன்புடன்
பாலா

Uma said...

Neenga ennatha pathi pesureengannu enakku seriyaa pureele. Mudhalla environment friendly-aa edho solreengannu nenechen. Ippo illennu thonnudhu. Innorukka nidhaanama unga padhivayum neenga kuduthurukka suttigalayum padichu paathu purinjukka muyarchikkiren!

Anonymous said...

இதைப் படிக்கறவனுங்கூட முட்டாளுங்க

Agent 8860336 ஞான்ஸ் said...

...வாழ பழகிக்க வேண்டியதுதான், ...

...இப்படி ஒவ்வொருத்தனு துப்பிதுப்பி தான்டா இத்தன நாத்தம்...

...ஒதுங்கி போயிர வேண்டியதுதான்.. ஆரம்பத்துல கஷ்டம் தான், ஆனா கொஞ்சம் கொஞ்சமா நாமளும் பழகிடுவோம்...

...குப்பையும், கிருமியையும் சகிச்சுகிட்டு, அது நம்மள ஒன்னும் பண்ண முடியாத மாதிரி வாழ்ந்திடவேண்டியதுதான்...

...இன்னையதேதிக்கு.. கிருமியே இல்லாத காத்து எங்கயும் இல்ல...

...அவனவன் வாழ்க்கையில எது முக்கியமோ, அதுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியதுதான்... !!,

...உனக்கு நிம்மதி முக்கியமா, அதுக்கு அடுத்தவன் சந்தோஷமா இருக்கனுமா வேண்டாமா, அதுவும் அவனவன் கையிலதான்.. அவனவன் நினப்புல தான்


ராசா என்றாலே 'திருவாசகம்' தான் போங்க!

-ஞானபீடம்.

கொங்கு ராசா said...

//6.வதா இந்தப் பதிவையும் கொடுத்திருக்கலாம்:) // குடுக்கலாம்தாங்க அன்பு, ஆனா அப்புறம் அது 7வது பதிவாயிடுமே :D

//காசியும் மதியும் போட்ட efforts-லாம் வீணாப் போயிடும் போல இருக்கு !!!// என்னங்க பாலா இது, மூட்டைப்பூச்சியால வூடுபோயிடும்னு வருத்த படுவீங்க போல..

உமா>> லிங்கெல்லாம் போயி பார்த்து தெர்ஞ்சுக்கபோரீங்களா?? நான் தான் தெளிவா, துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லியிருக்கனே :-)

anon>> கரீக்ட்டுங்கன்னா, நீங்களும் படிச்சிருக்கீங்களே!

//ராசா என்றாலே 'திருவாசகம்' தான் போங்க!// அப்பு ஞானம்.. எப்படிங்க இப்படி..??ம்ம்.. என்னமோ போங்க..!!