
நன்றி. நன்றி.. நன்றி.... தமிழ்வலைப்பூ வாழ் மக்கள் அனைவருக்கும், ராசாபார்வை ரசிககண்மணிகள் அனைவருக்கும் இந்த 'கொங்கு'ராசாவின் மனப்பூர்வமான நன்றிகள்..
இப்ப எதுக்கு இப்படி சும்மா கூவிக்கிட்டு இருக்கேன்னு கேக்கரீங்களா.. சும்மா சத்தம் போட்டு ப்லிம் காட்றதுக்கு நான் என்ன அரசியல்லயா இருக்கேன்.. நான் ஒரு சாதாரண விவசாயி, நான் எதுக்கு வெட்டி விளம்பரம் செய்யறேன்..
(எப்படி ராசா, உனக்கு மட்டும் இவ்ளோ அவையடக்கம்..!!. ச்சே, பின்றடா..!!)
சரி.. விஷயத்துக்கு வாடான்னு நீங்க முனங்கிறது எனக்கும் கேக்குது, ஆனா என்ன செய்யிறது, எப்பவுமே ஒரு விஷயம் சொல்லும்போது அதோட வரலாறு, போகோளம், எல்லாத்தையும் அலசி பார்த்து, இப்படியே எனக்கு பழகிடுச்சுங்க, அதான் பிரச்சனையே.. சரி.. சரீ. விஷயத்துக்கு வந்துட்டேன்
நான் நல்ல பையன்னு யாராவது சொல்லுங்கன்னு நான்
இப்பத்தான் என்னோட போன பதிவுல கேட்டுகிட்டேன், நம்ம துளசி(யக்கா)'லயிருந்து நம்ம நண்பர்கள் எல்லாரும் கமெண்ட்லயே எனக்கு சர்ட்டிபிகேட் குடுக்க தயாரா இருந்தத பார்த்துட்டு எனக்கு பயங்கிற சந்தோஷம்.. அந்த சந்தோஷத்துல மிதந்துட்டு இருக்கும் போதே, இப்பத்தான் இன்னொரு சந்தோஷமான ஒரு செய்தி வந்தது, 'ராசபார்வை - ராசா' ரசிகர்மன்றம் சார்பா 'ராசா நல்ல பையன்'னு பல்லாயிரக்ககணக்கான ரசிகர்கள் சேர்ந்து ஒரு பெரிய பேரணியே நடத்ததியிருக்காங்க..
சும்மா கதை வுடாத ராசா'ங்கரீங்களா, கதையெல்லாம் இல்லீங்க நிஜம், நூறு சதவீசம் அக்மார்க் உண்மை.. சொன்னா நீங்க யாரும் நம்ப மாட்டீங்கன்னு தெரியும், அதுக்குத்தான் பாருங்க.. அந்த பேரணிய போட்டா புடிச்சு வச்சிருக்கேன், நீங்களே ஒரு அமுக்கு அமுக்கி பார்த்துக்கோங்க..
போட்டோ ஃப்ரூப்
பேரணிக்கு வந்து எனக்கு ஆதரவு தெரிவிச்ச அனைத்து ரசிகமகாஜனங்களுக்கும், கொங்கு ராசா'வின் மனமார்ந்த நன்றிகள்..
யாரும் பொறாமைபட வேண்டாம்... சரீங்களா..?? ;-)
--
#111
5 comments:
த்ரிஷா பற்றி ஏதாவது செய்தி வந்தாலே சிலபேர் ஏடாகூடமாகிவிடுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது
ராசா,
இந்தப் படத்தை நாங்க கருப்பு வெள்ளை சதாரம் வந்த காலத்திலேயே பாத்தோமாக்கும்! சவுண்ட கொறைச்சு உடுங்க!
மற்றொரு விவசாயி!
you have given the same link last year for you to become Microsoft Preseident!
சோக்காக் காமிக்கிறீங்களே படத்த...
நடத்துங்க..நடத்துங்க..
Nadathunga sir....
Pulippu thaanga saamy...
Post a Comment