Friday, July 1, 2005

அந்த மூன்று விஷயங்கள்.



இபோ பதிவுகள்ல ஒரு personal tag' (தமிழ்ல என்னங்க சொல்றது?)ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. நம்மளயும் இளமுருகு அந்த ஆட்டத்துல புடிச்சு விட்டிருக்காரு, அதுனால நம்ம பங்குக்கு நம்மளும் எழுதியாச்சு..

உங்கள் உருவத்தில் உங்களுக்கு பிடித்த மூன்று: (THREE PHYSICAL THINGS YOU LIKE ABOUT YOURSELF)
இடது கை சுண்டுவிரல் முனையில் இருக்கிற மச்சம்
செல்ஃப் ஷேவ் பண்ணினதும் நான் ரசிக்கிர என் கிருதா
கால்கட்டை விரலை விட நீளம் ஜாஸ்த்திய இருக்கிற அடுத்த கால்விரல்


நீங்கள பயப்படும் விஷயங்கள் மூன்று: (THREE THINGS THAT SCARE YOU)
அறிவுரைகள் :-(
டிஸ்க்கோத்தே
மைனர் செயின்

தினசரி வாழ்க்கையில் உங்களுக்கு மிக முக்கியமான மூன்று: (THREE OF YOUR EVERYDAY ESSENTIALS)
என்னுடைய பெட்-பேங்க் டெபிட் கார்ட்
என் கண்ணாடி
poggo சேனல்

இப்பொழுது அணிந்துகொண்டிருக்கும் மூன்று: (THREE THINGS YOU ARE WEARING RIGHT NOW)
கை வைக்காத oxen பனியன்
கத்திரிப்பூகலர் கட்டம் போட்ட லுங்கி
வெள்ளை ஈரலதுண்டு

உடனடியாக உங்களுக்கு தேவைப்படும் மூன்று: (THREE THINGS YOU WANT TO DO REALLY BADLY RIGHT NOW)
வெளிய நல்ல மழை சூடா மிளகாய் பஜ்ஜி கிடைச்சா பரவாயில்லை
கூடவே ஒரு ரெண்டு சுத்து கையெழுத்து'ம் கிடைச்சா.. ஆஹா..
ஒரு அகலப்பாட்டை இணைப்பு :-(

இறப்பதற்க்கு முன் நீங்கள் செய்ய நினைக்கும் மூன்று: (FEW THINGS I WANT TO DO BEFORE I DIE)
த்ரிஷா கூட ஒரு சீன்ல நடிக்கனும் (குளிக்கிற சீன்ல இல்லீங்க..)
எங்கய்யன் ஆசைப்படுற மாதிரி பொறுப்பான பையனா மாறனும்.
இவன் எப்ப சாவான்னு நாலு பேரு நினைக்க வைக்கனும்

உங்கள் விடுமுறையை நீங்கள் கழிக்க விரும்பும் இடங்கள் மூன்று: (THREE PLACES YOU WANT TO GO ON VACATION)
வேம்பநாடு ஏரி (பேட்டரி வசதி இல்லாத படகுவீட்டில்)
கபினிஆற்றங்கரை நடைபயணம்
அப்புறம்.. முடிஞ்சா.. இந்தியஜனாதிபதி மாளிகை ;-)

உங்களுக்கு பிடித்த குழந்தைகள் பெயர் மூன்று: (THREE KIDS NAMES YOU LIKE)
பப்பிகுட்டி
ஜுஜிம்மா
ராசா

LAST BOOK I READ NUMBER OF BOOKS I OWN
இதெல்லாம் ஏற்க்கனவே பழைய பதிவுல சொன்ன சமாச்சாரம் தான, அதுனால நோ..ர்ரிப்பீட்ட்டேய்!!
3 PEOPLE I WISH TO TAG
அதென்ன மூனு பேரு.. தமிழ்பதிவுகள்ல இந் த தொடர் சமாச்சாரம் இன்னும் ஆரம்பிக்கலையில்ல, அதுனால இதை படிக்கிற அளுக யாருக்கு இது புடிக்குதோ அவுங்க ஆளுக்கொரு நூல்புடிச்சு தொடர்ந்துக்கோங்க..

--
#100
..
அட நூறு பதிவாயுடுச்சா??.. ச்சே யாராவது விழா எடுக்கிற ஆசை இருந்தா சொல்லுங்கப்பு (பொற்க்கிழி, பணமுடிப்பு எதுவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்)

8 comments:

வீ. எம் said...

கால்கட்டை விரலை விட நீளம் ஜாஸ்த்திய இருக்கிற அடுத்த கால்விரல்
இதுக்கு ஏதோ அர்த்தம் சொல்லுவாங்க , என்னனு யோசிக்கிறேன் :)
கூடவே ஒரு ரெண்டு சுத்து கையெழுத்து'ம் கிடைச்சா.. ஆஹா
யார் கையெழுத்துனு சொல்லலயே !
இந்தியஜனாதிபதி மாளிகை ;-)
கேக்கறதே கேக்கறீங்க , வெள்ளை மாளிகை கேட்கலாமே ! :)
வீ எம்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//யாராவது விழா எடுக்கிற ஆசை இருந்தா சொல்லுங்கப்பு (பொற்க்கிழி, பணமுடிப்பு எதுவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்)//

பேராசை?

ஏஜண்ட் NJ said...

//அட நூறு பதிவாயுடுச்சா??.. //

இது என்ன பிரமாதம், நீங்க பல்லாயிரம் பதிவுகள் போடுவீங்க தல !

அப்டியே சைடுல பாருங்க தல, கூடிய சீக்கிரமே 10,000 தடவ ஒங்க பக்கம் லோடு ஆயிருக்குன்னு நம்ம ஹிட் கவுண்டரு சொல்லப்போறாரு!

வாழ்த்துக்கள் தல.

ஞானபீடம்.

Unknown said...

//த்ரிஷா கூட ஒரு சீன்ல நடிக்கனும்//
really funny... trisha-va paatha naan solli veikiren ;-)

Anonymous said...

Raasaa, ella kelvikkum badhil sonna maadhiri theriyaleeye!

Bajji seri, agalapaatai inaippu seri, aana indha rendu suthu kai ezhuthu puriyaleengo!

Pavals said...

//வீ.எம்.>>இதுக்கு ஏதோ அர்த்தம் சொல்லுவாங்க , என்னனு யோசிக்கிறேன் :)//
சீக்கிரம் யோசிச்சு சொல்லுங்க.. ;-)

//ஷ்ரேயா>>பேராசை?// 'பேர்- ஆசை' தான்.

//ஞானபீடம் >> இது என்ன பிரமாதம், நீங்க பல்லாயிரம் பதிவுகள் போடுவீங்க தல !// நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. 'குழலி' பதிவுல உங்க பின்னூட்டம் பார்த்தேன்.

chiper >> நன்றி.. நன்றி.. நன்றி..

உமா >>/rendu suthu kai ezhuthu puriyaleengo!// இங்கலீஸ்'ல மொழிபெயர்த்து பாருங்க புரியும்.. அப்பவும் புரியலைன்னா.. ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்.. :-)

/ella kelvikkum badhil sonna maadhiri theriyaleeye!// அட ஆமாம்! நான் இளமுருகு பதில் சொல்லியிருந்த கேள்விகள மட்டும் எடுத்திருக்கேன்.

லதா said...

// கால்கட்டை விரலை விட நீளம் ஜாஸ்த்திய இருக்கிற அடுத்த கால்விரல்
இதுக்கு ஏதோ அர்த்தம் சொல்லுவாங்க , என்னனு யோசிக்கிறேன் :) //

தனுஷின் திருடா திருடி படத்தில் இதுபோல ஏதோ வரும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

Nanri Raasaa. Rombhavum dhaan shame-aa pochu, appuram ellam therinja pluggu thambiya thedi pudichu neenga inna solreengannu visaarchi therinjukinen. Innavo solluvaangale 'you learn something new everyday'nnu adhu maariya innikku kathukkuna vishayam kai ezhuthunna innanguradhu :)