Monday, August 7, 2006

படக்குறிப்பு

வீணாப்போன ஒரு ஞாயித்துகிழமை சாயங்காலத்தை பத்தின படக்குறிப்பு..


விஷால்
(தாமிரபரணி நல்ல விலைக்கு போயிருக்குன்னு பேசிக்கறாங்க, அதுவும் பூஜை போட்ட அன்னைக்கே, தமிழ்நாடு பூராவும் வித்துபோச்சாம்.. இப்படி இன்னும் ஒரு படம் செஞ்சீங்க.. அப்புறம் அவ்வளவு தான்.. 'ஆதி'யே 'பேதி'யாக்கிடந்தது தெரியும் தான.. 'நான் சாணக்கியன் இல்லடா சத்ரியன்'ன்னு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச பார்க்கரீங்க.. ம்ம் நடத்துங்க.. வடக்கத்திகாரரா இருந்தாலும், 'நானும் மதுரக்காரண்தாண்டா'ன்னு சவுண்ட் குடுக்கும் போதெல்லாம மண்ணின் மைந்தன் மாதிரித்தான் இருக்கீங்க.. கொஞ்சம் கவனம் சாமி.. )

வடிவேலு
(நல்லாத்தான போயிட்டிருந்ததீங்க.. ஏன் திடீர்ன்னு இப்படி ஆம்பிளை சோடா, பொம்பிளை சோடான்னு, சூப்பர்ஸ்டார் மாதிரி சந்திரமுகி வழியில.... ம்ஹும் ஒன்னுஞ்சரியில்ல, இதுல ஒரு சோலோ குத்தாட்டம் வேற, நல்லதுக்கில்ல கைப்பு.. நல்லதுகில்ல)

மனோஜ்.கே.ஜெயின்
(கம்பீரமான மனோஜை சமீப காலத்துல இந்தளவுக்கு வெட்டியா யாருமே காமிக்கலைங்க. தமிழ் படத்துல கொஞம் துட்டு கூட தர்றாங்கன்னு நம்ம 'மல்லு' ஆளுக இந்த மாதிரி காமெடியெல்லாம் பல்லை கடிச்சுட்டு நடிச்சு குடுக்கறதா கேள்வி..)
'SS ம்யூசிக்' ஷ்ரேயா
(தேவையா அம்மணி உனக்கு, எல்லாம் கலி காலம்.. எவ்வளவு அழகா ஒரு இத்துனூன்டு டவுசரை போட்டுகிட்டு கலக்கிட்டு இருந்தீங்க, இதுல தாவணி எல்லாம் கட்டிகிட்டுடு, கண்ணை எல்லாம் உருட்டி, 'ஏய் இஸ்க்கு,... டேய் மாப்ளை'ன்னு சவுண்ட் எல்லாம் குடுத்து பார்க்கரீங்க, ஆனாலும் ம்ஹும்.. ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலையே..)

IM. விஜயன்
(கேரளா கால்பந்து விளையாட்டு வீரர், பாவம் ஒழுங்கா புட்பால் விளையாடி நல்ல பேரோட இருந்தவர கூட்டிட்டு வந்து நடிக்க வச்சு சொதப்பியிருக்காங்க)

ரீமாசென்
(உன்னைய போயி குத்தம் சொல்லுவனா தாயி.. உங்க வேலைய நீங்க திறம்பட செஞ்சிருக்கீங்க.. ம்ம்.. நமக்குதான் மனசு கெட்டுபோகுது உன்னைய பார்க்கையில )
டைரக்டர் தருண்கோபி
(சண்டைக்கோழி மாதிரி ஒரு படம்ன்னா ரைட்டு, அதுக்காக அச்சு அசலா அதே மாதிரியா இருக்கனும்.. ம்மஹும் இப்படியும் சொல்ல கூடாதுங்க, அப்புறம் அது சண்டைக்கோழி படத்துக்கு அசிங்கம். முதபடத்துலயே இப்படி சொதப்பிட்டயே தலைவா.. )

ம்யூஜிக் யுவன்சங்கராமில்ல.. வெளிய வரும் போது போஸ்டர்ல பார்த்து தான் தெரிஞ்சுது..
பங்கு அந்த போலீஸ்காரரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே.. 'அட நம்ம பானுசந்தர்ப்பா'.. மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு இதெல்லாம் நடிச்சாரே அவரு.. என்னாங்கடா இது, அந்தாளுக்கு ஒரு ஓபனிங்க் க்ளோசப் கூடவா வைக்காம விடுறது்.. என்னா படம் எடுத்திருக்கானுக..

அடபோங்கப்பா.. ஞாயித்துகிழமை சாயங்காலம் அப்படியே நாலு பேரு கூடுற எடத்துக்கு ஒரு அழுக்கு ஜீன்ஸை போட்டுகிட்டு போயி நின்னு சாகுபடிக்கு வாய்ப்பு தேடாம நல்ல புள்ளையா இங்கிட்டு வந்தா.. திமிராமுல்ல திமுரு...

--
#196

14 comments:

Radha N said...

நல்லாத்தான் இருக்குது நடை. படந்தான் என்னன்னு புரியலையே....பேரு என்ன தாமிரபரணியா? அப்படீன்னு ஒன்னு வந்திருக்கா என்ன?

Unknown said...

AGaaa Me Just Escape!!!!

கைப்புள்ள said...

//வடக்கத்திகாரரா இருந்தாலும்//
அப்டீங்களா? தம்பிக்கு எந்த ஊரு?

அப்புறம் அது மனோஜ் கே.ஜெயன்.

விமர்சனம் நல்லாருக்குதுங்க. தனியாப் பாக்குற கடைசி படமாங்க இது?
:)

ALIF AHAMED said...

விமர்சனம் நல்லாருக்குதுங்க. தனியாப் பாக்குற கடைசி படமாங்க இது?
//

என்ன இது சின்ன புள்ளதனமா ::))

ALIF AHAMED said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

போகும்போதே சொன்னனே, கேக்காம திமிரா போனா இப்படித்தான்..

Pavals said...

நாகு >> தாமிரபரணி வரப்போற படம்.. நான் சொல்லியிருக்கிறது 'திமிரு' படம்.. இப்ப 'வேற்றிகரமா' ஓடிட்டிருக்கு..

தேவ் >> கேப்புல தப்பிச்சுட்டீரா??

கைப்பு >> திருத்தம் ஏற்றுகொள்ளப்பட்டது.. :). எந்த ஊருன்னு தெரியலைங்க, எதோ வடக்கத்திகார பைனான்சியர் பையன். ஆனா பிறந்து வளர்ந்தது சென்னையில தான் போல..

Pavals said...

மின்னல் >> அதானே என்ன இது சின்னபுள்ளத்தனமா? நான் என்னமோ இந்த படத்தை மட்டும் தனியா பார்த்த மாதிரி :)

ரங்கு >> ம்ம்.. என்னப்பா செய்யிறது, விதி வலியது..

கைப்புள்ள said...

//மின்னல் >> அதானே என்ன இது சின்னபுள்ளத்தனமா? நான் என்னமோ இந்த படத்தை மட்டும் தனியா பார்த்த மாதிரி :)//

அடடா! ப்ராமிஸா நீங்க தனியா போனீங்கன்னு தான் நான் நெனச்சேன். இந்த லோகத்துல நாம தெரிஞ்சிக்க வேண்டியது இன்னும் நெறைய இருக்கு போலிருக்கே?
:((

லிவிங் ஸ்மைல் said...

ஏன் கேக்குரிங்க.. நானும் இந்தப் படத்த (வரமாட்டேன்னு அடம் புடிச்ச) ப்ரெண்டு கூடப் போய்ட்டு வந்து.....

ச்சே.. வீணா எங்க நட்பே முறிஞ்சு போராப்புல ஆயிப்போச்சு... அப்றம் கெஞ்சி கூத்தாடி சரி பண்ணேன்..ஹும்..

கந்து வட்டி பிண்ணணியில் வரும் இந்த படத்தில் அது குறித்த அக்கரை எதும் இல்லாமல் இருப்பது பெரிய ஏமாற்றம்...

இப்பல்லாம் சினிமாக்காரங்களுக்கு, வித்தியாசம் தான் முக்கியமா இருக்கே ஒழிய விசயம் முக்கியமா இல்லை..

என்னத்த சொல்ல...

பதிவு நல்லா போட்டுருக்கிங்க..

நானும் கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போடுறேன்...

ILA (a) இளா said...

ஷ்ரேயா பத்தி நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு

கோவை ரவீ said...

படத்தை பார்க்க வலைன்னா? ப் பாரு ஹக்காங் உண்டு இல்லன்னு பன்னிடுவேன் மவனே.. ஷ்ரேயா இப்படியா? மிரட்டுவது யம்மாடி எஸ்கேப் சாமிங்களா? உங்களூக்கு கோடி புன்னியம்.

G.Ragavan said...

ஆனா படம் ஓடுதுங்காகளே ராசா! எளவஞ்சியும் வெளங்கலன்னாரு. நீங்களும் அதத்தான் சொல்தீக! ஆனாலும் படம் ஓடுதேய்யா!

Sud Gopal said...

எங்கள் தலைவி ஷ்ரியாவின் பெருகும் செல்வாக்கினைக் கண்டு பயந்து யாரோ உமக்கு மால் வெட்டியது எல்லாம் எமக்குத் தெரியும்.

"வெயில்" வரட்டும்.அப்போது தெரியும் எங்கள் தங்கத் தலைவியின் தாத்பர்யம்.

இப்படிக்கு,
ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,
பெங்களூரு டௌன்டவுன்.