Tuesday, July 12, 2005

எப்படித்தான் சகிச்சுக்கறயோ?




வர்ற பதினோராம் தேதி அவ பிறந்தநாள்..


ரிமைண்டர் போட்டு ராத்திரி 12.00 மணிக்கு மறக்காம முதல் ஆளா போன் பண்ணிடனும்,

ப்ளவர்மார்ட்'ல சொல்லி கலர்கலரா வெறும் ரோஜாப்பூவா வச்சு காலையில ஒரு பொக்கே அனுப்பனும்..

அவளுக்கு புடிச்ச அந்த டார்க்ப்ளூ ஆஃப்-ஸ்லாக்கும், ஐவரி கார்கோ'வயும் பெட்டி போட்டு வாங்கி வைக்கனும்..

ரொம்ப நாளா கூட கோயிலுக்கு வரசொல்லிட்டே இருக்கா, அன்னைக்கு கண்டிப்பா கூட போகனும்..

அன்னைக்கு முழுசும் அவகிட்ட எதுக்கும் கோவிச்சுக்காம இருக்கனும், அவ கோவப்படாத மாதிரி நடந்துக்கனும்..

எல்லாம் சரியா திட்டம் போட்டாச்சு, கலக்கிடனும்..
திட்டம் எல்லாம் ரெண்டு நாளா மனசுல ஓடிகிட்டே இருக்கு,
.
.
.
.
.
.
மூனாவது லோடு இன்னைக்கு அனுப்பனும், அப்பத்தான் அவன்கிட்ட முதல் லோடு பேமண்ட் கேக்கமுடியும்..

எங்கயோ குண்டு வெடிச்சா, இங்க எல்லா ஷேரும் கலங்குது.. டெர்மினலக்கு போயி பார்க்கனும்..

மழையோட மழையா மேக்கால காட்டுல உரம் வச்சு விட்றனும், ஒரு வேலை முடியும்..

.
.
.
.
.
.
.

காலையில ஜாகிங் போயிட்டு வந்து அருகம்புல் டீயோட..

நேத்து செய்ய நினைச்ச வேலை எதுவுமே முழுசா முடிக்கலயே, ச்சே..

யோசிச்சுகிட்டே,
காலையில பேப்பர் புரட்டும் போது தான் கவனிச்சேன்..

இன்னைக்கு தேதி பன்னிரெண்டு..

எப்படித்தான் என்னை சகிச்சிக்கறயோ!!

இனி எப்படி மன்னிப்பு கேக்கிறதுன்னு ஒரு வாரம் திட்டம் போடனும்... :-(

---
#106

8 comments:

ஜெகதீஸ்வரன் said...

எப்டீங்க உங்களால மட்டும் முடியுது ???

அடி கிடி கெடச்சுங்களா ???

:-)

ஏஜண்ட் NJ said...

"மறப்போம்... மன்னிப்போம்"-ங்கறத

எங்க 'தல'கிட்ட யாரோ விஷமிகள்,

'மறப்போம்... மன்னிப்பாங்க'-ன்னு

சொல்லிட்டாங்க போல இருக்கு ;-)

- ஞானபீடம்.

லதா said...

உண்மையான அன்பு பிறந்த நாளுக்கோ மற்றெந்த குறிப்பிட்ட நாளுக்கோ ஏங்காது ராசா அவர்களே

Pavals said...

எதோ அதுவா வருதுங்க ரகு.. அப்புறம் ரகு.. உங்க ஊத்துகுளி வெண்ணய் உருகிடும்போல இருக்கு,... சீக்கிரம் காய்ச்சிடுங்க..(ரொம்ப நாளா முதல் பதிவோட நிக்கிர உங்க பதிவை சொன்னேன்)

ஞானபீடம்.>> என்னங்க செய்யிறது நம்ம 'ஞானம்' அவ்ளோதான்

லதா>> நன்றி..

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... இந்த பதிவு ச்ச்சும்ம்மா லுலூலயிக்கி.. நிஜத்துல யாரும் இல்லை, :-) !! (சொன்னா நம்பவா போரீங்க!)

Anonymous said...

MEN!!!!

Pavals said...

Uma said...MEN!!!! >>அந்த ஒரு வார்த்தை தான் இந்த பதிவோட ஆதாரமே.. நீங்க அதே வார்த்தையில முடிக்க்றீங்களே :-)

பத்ம ப்ரியா said...

Hi

Ur mind is stored fully with share market, fertilisers, and money collection.. all these things are non living things.. but U totally forgot about your lively girl...how cruel u r. And u used that blender for writing a poem in your blog.. S.. i am also not having another word except MEN

enRenRum-anbudan.BALA said...

raasaa,

Very very NICE :))))))