Wednesday, June 8, 2005

பழைய பேப்பர்

பழைய பேப்பர்
இந்த பழைய பேப்பர் படிக்கிறதுங்கிறது, எப்பவுமே கொஞ்சம் சுவாரசியமான சமாச்சாரம்ங்க, இந்த பஜ்ஜி கட்டி குடுக்கிற போன வாரத்து பேப்பரை விட, ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு பேப்பரோ இல்லை வாராந்திரியோ கிடைச்சதுனா நான் விடமாட்டனுங்க, எடுத்து அட்டை டூ அட்டை படிச்சிருவேன். இன்னைக்கு தேதிக்கு வர சென்சேஷன் விஷயங்கள விட அது ரொம்ப சுவாரசியமா இருக்கும், இந்த படத்தோட கதை இப்படி, இவன் இவகூட கல்யாணம் பண்ணிக்கபோறான், இவரு இந்த தேர்தல்ல கட்சி மாற போறாரு, அப்படி இப்படின்னு எத்தனை கதைய நம்ம ரிப்போர்ட்டர்க சூட குடுத்திருப்பாங்க, அந்த சூடெல்லாம் ஆறி, வீனாபோனதுக்கப்புறம் அதை எடுத்து பார்த்தா செம காமெடியா இருக்கும்ங்க. சில நேரம் ரொம்பவும் டச்சிங்கான விஷயம் கூட கிடைக்கும். நம்ம வீட்டுகள்ல சாதரணமா இந்த மாதிரியெல்லாம் கிடைக்காது, அதுதான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இங்க்லீஸ் பேப்பர்க்கு ஒரு ரேட், தமிழ் பேப்பர்க்கு ஒரு ரேட்டுன்னு பழைய பேப்பர்காரனுக்கு போட்டு எதாவது ப்ளாஸ்டிக் குடம், எவர்சில்வர் கரண்டின்னு வாங்கி வச்சிருவாங்களே, ஒரு வேளை லைப்ரரியில கிடைக்கும், நாம அந்த ஏரியா பக்கமே போறாதில்லைங்க, அதுனால அந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் அப்பப்போ எப்படியாவது பழையபேப்பர் ஒன்னு நம்ம கண்ணுல சிக்கிரும்.
திடீர்னு எப்பவோ நம்ம வீட்டு விஷேசத்துக்கு கிப்ட்'டா வந்து, நாம உபயோகபடுத்தாம (ஒருவேளை அம்மாவுக்கு ஆகாத நங்கை குடுத்ததா இருக்கும்) அட்டாலியில அடுக்கி வச்ச எவர்சில்வர் பாத்திரத்துக்குள்ள 'எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்'ன்னு ஹெட்லைனோட ஒரு பேப்பர் கிடைக்கும். எடுத்து குப்பையில போடறதுக்கு முன்னாடி ஒரு வரி விடாம அதை படிச்சிருவோம், அவ்ளோ சுவாரசியமா இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள் எங்க அத்தை வீட்டு அட்டாலிய சுத்தம் பண்றப்போ, அதுவரைக்கும் சும்மா twinkle, gokulam அதை விட்டா ராணிகாமிக்ஸ், தினமணி குழந்தைகள் மலர், குமுதத்துல ஆறு வித்தியாசம், விகடன்ல ஜோக்குன்னு பார்த்திட்டிருந்தவன் முதல் முதலா பாலகுமாரன படிச்சேன்.. (இரும்புகுதிரைகள்). அந்த புக்கை எங்க அத்தை எப்பவோ எங்கயோ ட்ரெயின்ல வாங்கும் போது வாங்கி, படிக்காமயே அட்டாலியல போட்டிருந்தாங்க, நம்ம வூட்டாளுக புஸ்தகம் வாங்கினதே பெரிசு, அதை படிக்கலைங்கிறதுக்காக ஒன்னுஞ்சொல்ல முடியாதுங்க.
என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. பழைய பேப்பர் படிக்கிறது பத்தி சொல்லிடிருந்தேன்.. என்னடா திடீர்ன்னு பழைய பேப்பர் தேடுற கழுதை (கழுதை.. அவ்ளோதான் கழுதைபுலியெல்லாம் கிடையாது ஆமாம்..) மாதிரி ஆயிட்டேன்னு கேக்கரீங்களா.. அது எல்லாம் கீழ போட்டிருக்கனே அந்த படம் நமக்கு மெயில் வந்ததுனால வந்த வினை.
படம் நிஜமானதா இல்லை எதாது போட்டொஷாப் கில்லாடியோட வேலையான்னு தெரியலை (காஞ்சிபிலிம்ஸ் மாதிரி கில்லாடிக யாராவது பார்த்து சொன்னா தேவலை)


[படத்து மேலஒரு அழுத்து அழுத்தி பெருசா பார்த்துக்கோங்க ]


நன்றி : ஒடையகுளம் செந்தான்

--
#91

5 comments:

Anonymous said...

இதேனுங்க ராசா, இதுல என்ன சந்தேகமுங்க

வீ. எம் said...

/// இந்த பழைய பேப்பர் படிக்கிறதுங்கிறது, எப்பவுமே கொஞ்சம் சுவாரசியமான சமாச்சாரம்ங்க, ///

நல்லா சொன்னீங்க ராசா...
இதை விட ஒரு படி மேலே.. சுவாரஸ்யமா ஒன்னு சொல்லவா??.. bus ல , பக்கத்து சீட் பயனி கையில ஏதாச்சும் புத்தகம் இருந்தா .. நமக்கு தான் கண்ணு அது மேலேயே இருக்குமே.. அவர்கிட்ட இருந்து வாங்கி படிக்கிற வரைக்கும் மனசு அடங்காது... அப்படி தான் ஒரு தான் ஒரு தடவை பஸ் ல ஒருத்தரை கேட்டேன்... அவை ஒரு மாதிரி பார்த்தார்..ஆனா தரலை.. என்னடா இது .. அவரும் படிக்காம, நமக்கும் கொடுக்காம. ... ஒரு வேளை நாம கேட்டது புரியலையோ.. திரும்பவும் கேட்டேன்...சார் ..அந்த புக்.... ஹ்ம்ம் ..இல்லைங்க.. கொஞ்சம் கடுப்பாதான் சொன்னார்..
அப்படி என்ன தான் புக் அது... பலான புக் ஏதாச்சும் இருக்குமா??? சே ..பார்க்க அப்படி இல்லையே.. ஒரே ஆவல் ... எப்போ நேரம் கிடைக்கும்னு அந்த புக் பார்த்துட்டே இருந்தேன் .. கொஞ்சம் கை திருப்பினார் ..அட்டை தெரிஞ்சது. ... பார்த்து நொந்து போயிட்டேன்......
கொட்டை எழுத்து ல் ஸ்கெட்ச் பேனா ல எழுதி இருந்தது

"செல்வன் குமரேசன் ஜாதக் குறிப்பு" .. அவர் பையன் ஜாதகமா இருக்கலாம்..

ஆர்வ கோளாறுல கேட்டது தப்பு தானோ?????

வீ. எம்..

Anonymous said...

வேறு சில பழைய பேப்பர்

--
நவன் பகவதி

Ganesh Gopalasubramanian said...

சில வருடங்களுக்கு முன் விகடனில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்று பலர் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வந்தனர். அதில் ஒருவர் தான் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமான ஹைக்கூ ஒன்றை தான் படிக்காமல் விட்டதாகவும் அதை ஒரு தீபாவளி நாளன்று லட்சுமி வெடி வெடித்ததில் சிதறிய காகிதத்தில் படித்ததாகவும் கூறியிருந்தார்.

நீங்கள் சொல்வது போல பழைய நாளிதழ்கள் சுவாரசியமானவை

Sud Gopal said...

ஹலோ நீங்க ஒடையகுளமுங்களா?
நம்ம தோஸ்த் வீடு அங்கொன்னு இருக்குதுங்ணா.
நெரய வாட்டி உங்கூருக்கு வந்ருக்கரனுங்ணா.
நமக்கு சூலூருங்ணா.