Tuesday, June 14, 2005

ஆள் கூட்டத்தில தனியே :-)

'ஆள் கூட்டத்தில தனியே',... மம்முட்டி, மோஹன்லால், சீமா எல்லாம் நடிச்சு, எம்.டி-I.V.சசி காம்பினேஷன்ல வந்த மலையாள படம் அது. இந்த பதிவு அந்த படத்தை பத்தி இல்லைங்க, அதை பத்தி இன்னொரு நாளைக்கு எழுதுவோம். (நான் எழுதறத விட கே.வி.ஆர் எழுதினா நல்லா இருக்கும்..) சும்மா ஒரு விளம்பரத்துக்காக இந்த டைட்டில் அவ்ளோதான்.
ஊரு உலகத்துல பதிவு வச்சிருககிறவங்க எல்லாரும் ஆளாளுக்கு அஞ்சு பேரை கட்டி இழுத்து book meme வெளையாட்டு விளையாடி ஓஞ்சுட்டாங்க.
நம்மள யாரும் அந்த விளையாட்டுக்கு கூப்பிடலை, :-(, அதுக்காக..., நம்ம சும்மா விட்டுற முடியுமா என்ன, சொல்லுங்க?
நம்ம என்னைக்கு கூப்பிட்டு ஒரு பக்கம் போனோம், நம்மளா போயி 'நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன்'ன்னு நிக்கிற ஆளு தான, அதுனால என் சார்பா என்னோட 'பொஸ்தக வாசிப்பு புலமை'ய நானும் ஊரு உலகத்துக்கு சொல்லிடலாம்னு முடிவு செஞ்சுட்டனுங்க.
(வேற வழி, பதிவுன்னு ஒன்னு வச்சுகிட்டு, அப்புறம் அதுல எதாவது உருப்படியா(..?) போடனுமில்ல, எத்தன நாளைக்கு தான் சும்மா வெறும் படமா போட்டு தள்ளுறது..?)

ஆகவே மகாஜனங்களே, இதோ உங்கள் பார்வைக்கு என்னுடைய 'புஸ்தக மீமீ'

---

என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை

இன்றைய நிலவரம் சரியா 46.
(எப்படியும் மாசம் ஒரு தடவை கோவை டவுன்ஹால் 'செல்வி' - பழையபுஸ்தககடைக்கும் நமக்கும் குடுக்கல் வாங்கல் இருக்கும்)

கடைசியாக வாங்கிய புத்தகம்

'புதுசு' :
மாலனின் சிறுகதை தொகுப்பு (எழில் செய்த சிபாரிசு)
காடு - ஜெயமோகன் (படிக்கலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையா இருக்கு)

'பழசு' :(செல்வி கடை உபயம்)
The Forerunner - Kahlil Gibran (மீனாக்ஸோட பதிவுகள்ல தான் இவர் நமக்கு அறிமுகமே)

வாசித்து கொண்டிருக்கும் புத்தகம்

காக்டெயில்
The Alchemy of Desire (இந்த ரெண்டையும் வச்சு என்னை பத்தி தப்பான அபிப்பராயத்துக்கு வந்துராதீங்க..:-( , எத்தேசயா நடந்த விஷயம் அது)
இந்த வார ஆனந்தவிகடன்
இந்த வார அவுட்லுக்
புதுசா நம்ம வண்டியில மாட்டுன பயோனீர் DEH-P6700MP சிஸ்டத்தோட யூசர் மேனுவல் (ஒன்னும் புரியவே மாட்டேங்குது..!)


கடைசியாக படித்து முடித்த புத்தகம்

ஜனகனமன - மாலன்
Glaucoma பத்தி அரவிந்த் ஹாஸ்பிடல்ல குடுத்த 6 பக்க 'துண்டு' பிரசுரம்


மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள்

என் செல்ல Rxன் RCபுக் (என் சுய சம்பாத்தியத்துல என் பேருல நான் ஆசைய வாங்கினது). என் பேங்க பாஸ்புக், இது ரெண்டும் தான் இதுல டாப் 1,2'ல வர வேண்டியது, ஆனா உங்க கோவத்துக்கு ஆளாக வேண்டாம்ங்கிறதுக்காக அதை விட்டுட்டு என் லிஸ்டை சொல்றேன்.

1.வாஷிங்டனில் திருமணம்
(அனேகமா டபுள் செஞ்சுரி அடிச்சிருப்பேன், அத்தனை தடவை படிச்சாலும் மறுபடியும் படிக்க சொல்லுது)

2.இரும்புக்குதிரைகள்
(twinkle, gokulam, ராணிகாமிக்ஸ்'ல இருந்து தடாலடியா 90ல இதுல இறங்கினேன். அதுக்கப்புறம் தான் ராஜேஷ்குமார், சுபா, பட்டுகோட்டை பக்கமெல்லாம் கூட போனேன்.. 2000க்கு அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்)

2.Yusuf Khan- Rebel Commander
(சேப்பாக்கத்துல சாயித் அன்வர் 194 அடிச்ச அன்னைக்கு திருவெல்லிகேணி ரோட்டுகடையில வாங்கின புஸ்தகம், ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வரை இருந்துச்சு, இப்போ எங்க வச்சேன்னு தெரியாம தேடிட்டு இருக்கேன், அதுல கிளார்க், யுசுப்கான், அவுங்க மேல்/கீழ் அதிகாரிகளுக்கு நடுவே எழுதிகிட்ட கடிதங்கள்... ம்ம்.. எப்படியாவது கண்டு புடிக்கனும்.. எடுத்து வச்சுகிட்டா 'மருதநாயகம்' வரும் போது உபயோகமா இருக்கும்)

3.Doctors - Erichsegal
(வேற ஒரு 'விஷயத்து'க்காக, சும்மா பிலிம் காட்ட வாங்கின புஸ்தகம்,..;-) , இன்னைக்கு வரைக்கும் பேவரிட் லிஸ்ட்'ல இருக்கு)

4.Kane & Abel - Jeffrey
(நிறைய பேருக்கு புடிச்ச புஸ்தகம், எனக்கும் புடிச்சிருக்கு, எங்கய்யனுக்கும்..!)

6.பொன்னியின்செல்வன்
( எனக்கென்னவோ இதைவிட 'பார்த்திபன் கனவு' ரொம்ப புடிக்கும்னாலும், ஹிஸ்ட்ரி மேடம் மனசு வருத்தப்படுமேன்னு இதை இங்க ஆறாவதா சேர்த்திருக்கேன்.. ஹிஸ்ட்ரிமேடம் - எங்கம்மா!!)

புடிக்காத புத்தகங்கள் (இது நம்ம சொந்த சரக்கு)

சுய முன்னேற்றம் பத்தின புத்தகங்கள். நமக்கும் இந்த மாதிரி புத்தகங்க ரொம்பவுமே அலர்ஜிங்க..
எல்லாரும் பெருமையா பேசி, நீ இன்னும் படிக்கலையா'ன்னு கொஞ்சம் கேவலமா கேட்டதுனால தான் 'you can win - shivkera' படிச்சேன்னா பாருங்களேன்..
(ஒரு வேளை நமக்கு புடிக்காத 'முன்னேற்றம்' பத்தி இருக்கிறதுனாலயோ என்னவோ ;-) )

கடைசியா ஒரு அஞ்சு பேர இதுல இழுத்து விடனுமாம்.... யாரு விட்டு போயிருக்காங்க கூப்பிட.. போங்கப்பா..

--
அப்பா.. இப்பத்தான் நிம்மதி.. !!

--
#95

--

அப்டேட்:

(சற்று முன் வந்த நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...)

அஞ்சு நாள் முன்னாடியே கோபி நம்மள இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டிருக்காரு, அதை கவனிக்காம யாரும் கூப்பிடலைன்னு புலம்பியிருக்கேன்.. .. ச்சே.. ஒரே பப்பி ஷேம்மா இருக்குதுங்க.. :-(

12 comments:

Unknown said...

நீங்க படிச்ச புத்தகங்கள விட. உங்க தலைப்பு 'மனசத் தொட்டுருச்சு சாமி. யாரும் கூப்பிட்டு இருப்பாங்கன்னு நினைச்சு விட்டுருப்பாங்க(பேன்). கொங்கு ராசா கூப்பிட்டுத்தான் வரணுமா என்ன?

Anonymous said...

லிஸ்ட்டெல்லாம் நால்லாத்தானுங்க இருக்கு,

//நம்மள யாரும் அந்த விளையாட்டுக்கு கூப்பிடலை, :-(//

ஏனுங்க இப்புடி சொல்லிப் போட்டீங்க! அஞ்சி நாளு முன்னாலயே ஆட்டத்துக்கு கூப்ட்டனுங்க நானு

வெத்தல பாக்கு ஏதும் வைக்கோனுமுங்களா?

துடிப்புகள் said...

வாழ்க்கையே ஒரு பெரிய்ய புஸ்தகம். நான் அதை மாய்ஞ்சி மாய்ஞ்சி படிச்சுக்கிட்டிருக்கேன். என்ன நாஞ் சொல்றது!

வீ. எம் said...

அதை ஏன் கேட்கறீங்க !! (நீங்க கேக்கல ..சும்மா ஒரு ஆரம்பத்துக்கு சொன்னது) ராசா..
அதே ''you can win - shivkera' நான் படித்தது மத்தவங்களுக்கு தெரியனும்னு .. 5 நாளா ஏதோ "மறந்துட்ட போற மாதிரி" என் அலுவலக டேபிள் மேலேயே வெச்சிட்டு போனேன்..
அப்படியும் ஒரு பய வந்து 'you can win - shivkera' படிச்சியானு கேட்காததுதான் வருத்தமா போச்சு ராசா... :(
வீ .எம்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

2000க்கு அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்

ha ha

Anonymous said...

:-) :-)
..aadhi

ஏஜண்ட் NJ said...

இவ்ளோ........ படிச்சிருக்க,
பொரவு என்னத்துக்கு
"நான் ஒரு முட்டாளுங்க..."
அப்டீன்னு பொலம்புற கண்ணு !.

குழலி / Kuzhali said...

//twinkle, gokulam, ராணிகாமிக்ஸ்'ல இருந்து தடாலடியா 90ல இதுல இறங்கினேன். அதுக்கப்புறம் தான் ராஜேஷ்குமார், சுபா, பட்டுகோட்டை பக்கமெல்லாம் கூட போனேன்.. //
பெரும்பாலானோர் மாதிரியே நீங்களும்...

//அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், //
என்னையைப்போல நீங்கள் அல்லது உங்களைப்போல நான்... அவ்வப்போது பாலகுமாரன் எழுத்துக்களைப்படிப்பதுண்டு திட்டுவதற்காக....


//கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்//
சேதுபதி ஐ.பி.எஸ். லயே முடிவு செய்தேன் ஆனாலும் வல்லரசு,ரமணா பார்த்துவிட்டேன்

Unknown said...

Yenn raasaa naanum ungala intha aattathukku koopittene ?
http://cryptologist.blogspot.com/2005/06/book-meme.html

Pavals said...

என்னத்த சொல்றது போங்க.. தமிழ் 'கோபி'யில இருந்து இங்க்லீஸ் 'சிப்பர்' வரைக்கும் கூப்பிட்டிருக்காங்க... அதுகுள்ள நான் அவசரப்பட்டுட்டனே.. :-(

thanx DRaj

ஞானபீடம் சார்.. அடுத்த வரி தெரியுமில்ல..' நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க'' :-)

வாங்க குழலி.. நானும் 'ரமணா' பார்த்தேன்

சிரிக்காதீங்க ரவி.. நான் வெறுப்புல சொன்னேன் அதை

வீ.எம்.. அப்படிப்போடு, துடிப்புகள்.. எல்லாருக்கும் நன்றி..

PVS said...

Naan Balakumarin indraiya puthagangalai thaan muthal muthalil padithaen...athanaal irumbu kuthirai ellam thodavae illa..."Once bitten twice shy" ngra maathiri. Unga pathiva paartha piragu athai padikavaendum endru thondrugirathu.

பாலா said...

Did you read Charunivedita's?