Tuesday, March 28, 2006

அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி



வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!

குண்டலினி சக்தி யெனும் தீட்சை ஈதே,
கொள்வர்க்கு வயதுபதினாறின்மேல் ஆம்.
பெண்களுக்கும் இந்தத் தவம் ஒத்ததாகும்,
புகை குடிகள் ஆகாது ஒழுக்கம் வேண்டும்.
கொண்டவர்கள் குடும்பத்தில் கடமையாற்றி
குரு காட்டும் தவ முறையைப் பயின்றுவாந்தால்
அண்ட பிண்டம் ஒன்றான ஆதியந்தம்
அறிந்தமைதி கிட்டும் அதே பேரானந்தம்.

--அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி






--
#163

நண்பன்



ஏன்னா...?..



நீ என் நண்பன்..!!



---
#162

Monday, March 27, 2006

பாஸ்வேர்ட்


ஒருத்தியை காதலித்தான்,
ஒருத்தியை மணந்தான்,

...


ஒருத்தி வாழ்க்கையாய்..
ஒருத்தி பாஸ்வேர்டாய்..



(யாரோ எழுதி, எப்படியோ நம்ம பொட்டிக்கு வந்த மயிலோட தழுவல்)

---
#161

Friday, March 24, 2006

நாலும் ஒண்ணும்..!

நாங்க நாலு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது..
எங்க வேணா எப்ப வேணா போவோம்..

இப்படித்தாங்க சொல்லிகிட்டு திரிஞ்சோம், பல நாளா.. போன வருஷம் வரைக்கும்..

இப்ப, இன்னைக்கு காலையில வரைக்கும் கூட, அதை கொஞ்சம் மாத்தி..

(இன்னும்)
நாங்க ரெண்டு பேரு..
எங்களுக்கு பயமே கிடையாது
எங்க வேணா எப்ப வேணா போவோம்..'
ன்னு தெம்பாத்தாங்க இருந்தோம்.

மதியம் தான் பாக்கெட்டுல இருந்த செல்போன் 'ஆசை நூறு வகை'ன்னு ரிங்குச்சு, அந்த தைரியசாலியில இன்னொருத்தன்,
"மாப்ள! அடுத்த வெள்ளிகிழமை, கீரனூர் குலதெய்வங்கோயில்ல வச்சு, ..எதோ சும்மா ஒரு ஃபார்மாலிட்டிங்கிறாங்க.. யுகாதி'யோட ஒரு நாள் லீவு போட்டா சரியா இருக்கும்னு நினைக்கிறேன், வேற ஒரு கமிட்மென்ட்டும் வச்சுக்காத".

அடுத்த பத்து நிமிஷத்துல மறுபடியும் 'ஆசை நூறு வகை'
இப்ப முன்னமே மாட்டிகிட்ட ரெண்டும்..
'பங்கு..! சேதி வந்துதா..?'..என்ன ஒரே சந்தோஷம்..? எல்லாம் 'தான் பெற்ற இன்பம்.....
' வந்துச்சு வந்துச்சு.. ' ..
'ஒவ்வொரு வாட்டியும் நீ தப்பிக்கற.. இருக்குடி உனக்கு..'

அடப்போங்கடா.. நாங்கெல்லாம் யாரு..



இனிமேல்..

நான் ஒருத்தன் தான்..
ம்ம்.. எனக்கும் பயமாத்தாங்க இருக்குது.
. :-( ..



---
#160


சினிமா சினிமா

நம்ம பதிவு பக்கமா அடிக்கடி வர்றவங்க, சில பேரு நம்ம கிட்ட ஒரு கேள்விய மறக்காம கேட்டு வைக்கறாங்க.. உன் பதிவுல நிறையா சினிமா வாசம் வருது, அதை குறைச்சுக்க கூடாதான்னு? அதெப்படிங்க, தலைநகரத்தை விட்டு ரொம்ப தூரம் தள்ளியிருக்கிற சின்ன ஊர்ல பொறந்து வளர்ந்த ஒரு சராசரி தமிழன் (சராசரின்னா இந்த இலக்கியம் புரட்சி இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட சராசரி) எப்படிங்க சினிமா வாசம் இல்லாம எழுதறது.. நம்மாள சினிமா வாசம் இல்லாம பேசவும் முடியாது, வாழவும் முடியாதுங்க, அது அப்படியே ரத்ததுல கலந்து போன விஷயம்..

ஒவ்வொருத்தரும் தன்னோட வாழ்க்கை குறிப்பை டைரியில எழுதி வைப்பாங்க, இல்ல அவுங்க செஞ்ச வேலைகள்ல பதிச்சு வைப்பாங்க, ஆனா நாங்கெல்லாம் சினிமாவுலயே பதிவு செஞ்சு வச்சவங்க.. அந்தந்த காலகட்டத்து பாட்டு கேட்டா அந்த அந்த காலத்து நினைப்பு வரும்.. அந்த நினைப்பு வரும் போது பாட்டும் ஞாபகம் வரும்.. ;-)

முதல் முதலா சைட்டடிச்சது, முதல் முதலா நம்ம கூட்டத்துல ஒருத்தன் காதல்'ன்னு ஆரம்பிச்சது, அப்புறம் தோல்வி அடைஞ்சது, முதல் முதலா நடுரோட்டுல கையமடிச்சுவிட்டு சவுண்ட் குடுத்ததுன்னு பள்ளிகூட கடைசிகாலத்துக்கு அமரன், தளபதியில ஆரம்பிச்சு, ஜென்டில்மேன், காதலன், பாம்பாய், இந்திரா' காலம்.

எப்பவும் ஒரு கூட்டம் சேர்த்துகிட்டு பேக்கரியிலயே பழிகிடக்கிறது, நட்பு காதல்ன்னு நடு ராத்திரியில ஹாஸ்டல் வராண்டாவுல அலசி ஆராயரது, பழையபுஸ்தக கடையில பாலகுமாரன தேடறது, 'நாலு நால் ஜிம் போன ஆர்ம்ஸ் வந்திடும், ஆனா இதுககெல்லாம் தில் வேனும், அது எந்த ஜிம்முலயும் கிடைக்காதுன்னு' எச்சு பேசிட்டு சுத்துன காலேஜ் ஆரம்பம், அதெல்லாம் முத்து, இந்தியன், குருதிபுனல், ஆசை, வான்மதி, கோயமுத்தூர் மாப்ளே' காலம்.

சும்மா ஒரு வீம்புக்கு பரிட்ச்சைக்கு ஒரு வாரம் முன்னாடி புஸ்தகத்தை எடுத்து வச்சு, அந்த செமஸ்டர்ல காலேஜ் பர்ஸ்ட், யூனிவர்சிடி பிஃப்த்'ன்னு திடீர்ன்னு கலந்துகட்டி அடிச்சு HOD'ல இருந்து ப்ரின்சி வரைக்கும் அசத்துனது, மாவோ, குந்தர்ன்னு உட்டாலக்கடி அடிச்சது, சிவப்பு டீஷர்டா எடுத்து மாட்டிகிட்டது அடுத்தவனுக்கு லெட்டர்எழுதி குடுக்கறது, நல்லா ஸிங்க் ஆகி போயிட்டிருக்கும் போது உள்ள புகுந்து ரியலிட்டி பேசி கட் பண்றதுன்னு காலேஜோட பின் பகுதி.. காதலுக்குமரியாதை, கோகுலத்தில் சீதை, காதல்தேசம், லவ்டுடே'ன்னு வாலி, படையப்பா வரைக்குமான காலம் .

இப்படியே இப்ப வந்த கள்வனின்காதலி, தம்பி வரைக்கும் சொல்லலாம்ங்க.. இப்படித்தாங்க நம்ம ஒவ்வொரு விஷயமும், சினிமாவுல தான் நாங்க கவிதை, காதல், புரட்சி, வாழ்க்கை'ன்னு எல்லாத்தையுமே ரிலேட் பண்ணி பார்க்கிறது.. இதுல சினிமாவ விட்டுடுன்னா.. சான்ஸே இல்லீங்க..

(இதையே ஒவ்வொரு பார்ட்டா பிரிச்சு பிரிச்சு பதிவு போட்டா ஒரு பத்து பதிவு தாங்கும் போல இருக்கே.. நல்ல வாய்ப்பை விட்டுட்டயே ராசா)

---
#159

Thursday, March 23, 2006

(வேட்டையாடு) விளையாடு!!



பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன்
காட்சி பிழை போலே


ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்

கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே



காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்


காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே



என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பது வியப்பே
உனை எதும் கேட்கமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேன்டும் என்று தவிப்பேன்



போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உன்னை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க.. சிரித்தாய்

கதவோரம் நானும் நிற்க.. சிரித்தாய்



காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே


ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்



உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன்


உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைதேன்


யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம்தோறும் செதுக்கிட வேண்டும்



கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீதான் சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்


பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே


ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்

கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

என் பாதகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

--

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியது : பாம்பே ஜெயஸ்ரீ, உன்னிகிருஷ்ணன்

--
#158

தலைப்பில்லாம ஒரு பதிவு

என்னோட போன பதிவு.. "அதுக்கு பேரு பதிவா.. ஒரு சினிமாக்காரி படத்தை போட்டு ரெண்டு வரி பாட்டு போட்டுட்டா அதெல்லாம் பதிவா"ன்னு இப்ப சண்டைக்கு வராதீங்க, எதோ போட்டாச்சு, நாலு பேரு பார்த்து நாலு வார்த்தையும் சொல்லியாச்சு, இப்போ வந்து அதெல்லாம் ஒரு பதிவா.. அப்படி இப்படின்னு சண்டை புடிச்சுகிட்டு, சின்னபுள்ளத்தனமாயில்ல இருக்கு.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. சரி. அதெல்லாம் அப்புறம் வெச்சுகலாம், இப்ப நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்..

இதை நான் இங்க எழுத காரணம், போன பதிவுக்கு வந்த பின்னுட்டங்க மட்டுமில்லைங்க, ரொம்ப காலமா நாம் எல்லோரும் கேட்டு, பேசிட்டு வர்ற விஷயம்தான். போட்டோவிலயோ இல்ல ஸ்க்ரீன்லயோ ஒரு நடிகரோ இல்லை ஒரு நடிகையோ அழகா இல்ல புடிச்ச மாதிரி இருந்தா, உடனே.. இதெல்லாம் மேக்கப்பு, நேர்ல இப்படி இல்லை'ங்கிறது... சினிமாவுல ஒருத்தன் சண்டை போட்டா உடனே இதெல்லாம் டூப், நிஜத்துல இவனால ஒன்னும் முடியாதுன்னு ஆரம்பிச்சு, இவுங்க பாத்த எல்லா ஷூட்டிங் கதையும் அவுத்து விடுறது. அது சினிமாங்க, அந்தளவுல அவுங்க எப்படி இருக்காங்கன்னு பாருங்க, அவ்ளோ தான், நீங்க ஏன் அந்த தனிமனுஷன பார்க்கரீங்க.. இந்த மாதிரி ஆரம்பிக்கறது தான் இந்த 'தனிமனித' வழிபாடு எல்லாமே. ஒருத்தன் நல்லா கதையெழுதினா போதும் அவர் தான் என்னோட ரோல்மாடல்'ன்னு பெருமையா சொல்லிக்க ஆரம்பிக்கறது, இவுங்க எல்லாரும் சேர்ந்து கேமிரா பார்த்து பேசறவங்களை எல்லாம் 'தலைவா'ன்னு கூப்பிடற ஆளுகல பாமரர்கள்'ன்னு மேதாவித்தனமா சொல்றது. அப்புறம் கதஎழுதறவரோட நிஜ முகத்தை தேடித்தேடி போக வேண்டியது, அப்புறம் அவுங்க மேல சாணியடிக்க வேண்டியது.. இல்லைன்னா, உள்ளுகுள்ளார புழுங்கிட்டு அப்புறம் வெளிய, அவரு சொன்னதுல என்னங்க தப்புன்னு ஜல்லியடிக்க வேண்டியது (வலைபதிவு எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷமாக போகுது, இப்பத்தான் இந்த 'ஜல்லி'ங்கிற வார்த்தைய எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.. அப்போ நானும் இனிமேல் இந்த சீரியஸ் பதிவாளர்கள் கூட்டத்துல இணைஞ்சிரலாம்). சினிமாவுல அழகா இருந்தா, ரெண்டு தடவை படத்துக்கு போய் பாருங்க, இல்லாட்டி கிரகம் தொலையுது, இங்க எவன் தப்பு செய்யலைன்னு ஒரு சாக்கு சொல்லிட்டு திருட்டு சி.டி எடுத்து, ஒரு காப்பி போட்டு வச்சுகிட்டு உங்களுக்கு 'தேவை'ப்படுறப்பவெல்லாம் பாருங்க. எழுத்து நல்லாயிருந்தாலும் அதே மாதிரித்தான், பேச்சு நல்லாயிருந்தாலும் அதே மாதிரித்தான்.. அதை விட்டுட்டு எதுக்கெடுத்தாலும் எதுக்குங்க பணத்துக்கும், அங்கீகாரத்துக்கும், புகழுக்கும் வேண்டி தன் திறமைய காட்டிகிட்டு இருக்கிற மனுஷன தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடரீங்க. அவன் திறமைய மட்டும் தூக்கி வச்சுகிட்டு ஆடலாம் அது தப்பில்லை. இப்படி சினிமா நடிகைன்னு ஆரம்பிச்சு, இசையமைப்பாளர்கள், எழுத்தாளர், அரசியல்வாதின்னு எல்லா இடத்துலயும் எதுக்கு நம்ம இப்படி போறோம்னோ தெரியலைங்க..
நாமளும் கமல் படம் பார்க்க போய், தியேட்டர்ல சவுண்ட் விட்டவன் சட்டைய கிழிச்சுட்டு அடிவாங்கின ஆசாமி தான்.. இன்னும் அதுல நிறையா மிச்சம் இருக்கு. இருந்தாலும் சொல்லனும்னு தோனுச்சுங்க சொல்லிட்டேன்...
சொல்லி மட்டும் என்னங்க.. உருவவழிபாடு வேண்டாம்னு ஊர்ஊரா சிலைய உடைச்ச பெரியாருக்கு, அவரோட வழிவ்ந்தவங்கன்னு சொல்லிகிட்டு ஊருஊருக்கு அவருக்கு சிலைவச்சு அதுக்கு மாலைபோட்டு, கையெடுத்து கும்பிடற மாதிரி கேமிராவுக்கு போஸ் குடுக்கறவங்க தானே நம்ம..

தனிமனுஷன ரோல் மாடலா எடுத்துகாதீங்க, அவரோட சிந்தனைய, செயல்பாட ரோல்மாடலா எடுத்துக்கோங்கன்னு சொன்னா.. "அவனுக்கு திமிர்ப்பா..எவனையும் மதிக்க மாட்டேங்கிறான்"னு ஒரேஅடியா நம்ம மேல சாணி அடிச்சிடறாங்க.. நாலு பேரு இப்படி சொல்றாங்கன்னு, அதுக்காக..இந்த தெனாவெட்டு, திமிர்எல்லாம் தூக்கிபொட்டுட்டு submissiveஆ இருக்கலாம்னு முயற்ச்சி செஞ்சா. அதுவும் முடியலைங்க.. எல்லாம் கைபுள்ள சொன்ன மாதிரி 'ப்ளட்லயே வந்திருது ', நான்என்னத்தைங்க செய்யறது..

யாருங்க அது "எங்கயோ ஆரம்பிச்சு, என்னத்தயோ சொல்லி,எங்கயோ முடிச்ச மாதிரி இருக்குது..??"ன்னு நக்கலா பார்க்கிறது.. ம்ம். அப்புறம், வேற எப்படிங்க இருக்கும், அப்படியே ஒரே கோர்வையா உங்கள அப்படியே அலாக்கா தூக்கி மேதாவி பீடத்துல உக்கார வைக்கிற மாதிரி எழுத நானென்ன அறிவாளிகள் ஆராதிக்கற 'ஃப்ரொபஷனல்' எழுத்தாளரா இல்ல, கண்மனிகள உயிரையும் குடுக்க தயரா இருக்கிற 'அரசியல்வாதி'யா, இல்ல பாலிபேஷேகம் செய்யிற ரசிகர்கள உணர்ச்சிவசப்பட வச்சு காசு சம்பாதிக்கிற 'சினிமாக்காரனா'? .. நான் சும்மா blogger'ல ஓசியில எழுத எடங்குடுக்க்றாங்கன்னு எழுதற கொங்கு ராசா'ங்க. இப்படித்தான் இருக்கும்.

---
#157

Wednesday, March 22, 2006

பாவனா


















நடை பழகும் போது தென்றல்..
...விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும்..
..நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்..


---
#156

Monday, March 20, 2006

அஞ்சலி

நான் முதன்முதலா தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்ச ஆங்கில பதிவுகள்ல சொளமயாவோட பதிவும் ஒண்ணு - chumma - just like that'ஆ எழுதுவாங்க, கொஞ்ச நாள் முன்னாடி இதா வந்திடறேன்னு சொல்லிட்டு போனாங்க,
நானும் நிறையா பேர் மாதிரி அடிக்கடி அங்க போயி பார்க்கிறது உண்டு, வந்துடுவாங்கன்னு..


ஆனா அவங்க வரவேயில்லை, இன்னைக்கு காலையில வழக்கம் போல செந்தில் பதிவு பக்கம் போனா, இனி அவங்க வரவே மாட்டாங்கன்னு செய்தி.. :-(,
அவுங்க
அண்ணனோட பதிவு மூலமா.


என்னென்னமோ நினைக்கிறோம், ம்ம்.. 'அஞ்சலி'ங்கிற ஒத்த வார்த்தையில முடிஞ்சு போகுது அத்தனையும்.


ஆனா கடைசி வரை அவுங்க பதிவுகள்ல இருந்து அவங்களுக்கு உடல் ரீதியா ப்ரச்சனைகள் இருந்த்ததுங்கிறதே தெரியாம, சந்தோஷமாத்தான் எழுதிட்டிருந்தாங்க.. சினிமாவுல இப்படியெல்லாம் பார்க்கும் போது நெகிழ்ச்சியா இருக்கும்ங்க.. ஆனா நிஜத்துல நமக்கு பக்கத்துல இங்கயே நடக்கும் போது, சட்டுன்னு ஒரு வெறுமையா போகுதுங்க வாழ்க்கையே.


'அவ்ளோதான்'.. இதுக்குள்ளார எத்தனை கூத்து..





சொளம்யாவின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்



மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்
-
கீதா




---
#155

Friday, March 17, 2006

ஓர் இரவு



தலைக்குமேல வேகமா ஓடுற ஃபேன் சத்தம், அந்த காத்துல படபடக்கிற இந்த வார விகடன், பக்கத்துல போத்தி தூங்கிற சகா'வோட ச்சின்ன குறட்டை, எங்கயோ தூரத்துல போற ரயில்வண்டி, படுக்கும்போது (வழக்கம்போல) அணைக்க மறந்த எப்எம்'ல கேக்கிற மெல்லிய ப்ரியா கணபதி, கண்ணாடி ஜன்னல் வழியா மின்னுற நியான் லைட்டு..

இதுல எது மேல, என் தூக்கம் கெட்டதுக்கான பழிய போடலாம்னு யோசிச்சிட்டிருக்கேன். ஆனா, எனக்கு மட்டும் தாங்க தெரியும்...

அது கண்டிப்பா வீண் பழியாத்தான் இருக்கும்னு.. ;-)

--
#154

Tuesday, March 14, 2006

காரமடை ரங்கநாதன்



யோவ், கடைக்காரர் எங்கயா? சைக்கிள் வேனும்.

ஏன் எங்கள பார்த்தா கடைக்காரர் மாதிரி தெரியலையா?

ஹ.. ஹா.. நீயா? புல் பேண்ட் எல்லாம் போட்டிருக்க..

டேய், இது உனக்கு புல்பேண்ட்டா?

எங்க ஊர்ல இதை புல் பேண்டுன்னு தான் சொல்லுவோம்..

யார்டா, நீ? இதுக்கு முன்னாடி உன்னை நான் பார்த்ததே இல்லை..

ஹ..என்ன தெரியலையா, நான் இந்த ஊரு தான்யா?

இந்த ஊரா?.. இந்த ஊர்ல, இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு தெரியாம நீ எந்த சந்துலடா இருந்த..என்னை என்ன கேணன்னு நினைச்சயா? யார் கிட்ட கத வுடுற.. போ, போயி யாராவது தெரிஞ்சவங்க இருந்தா கூட்டிட்டு வா, அப்புறம் சைக்கிள் தர்றேன்..

யோவ்.. நான் ஒரு இந்திய நாட்டு பிரஜை, எனக்கு நீ சைக்கிள் தரமாட்டியா?

ம்ம்.. உன் பேரு என்ன கண்ணா?

காரமடை ரங்கநாதன்..

ரங்கநாதன்ங்கிற பேருகெல்லாம் சைக்கிள் தர்றதில்ல.. எட்டி ஒதக்கிறதுக்குள்ள ஓடிப் போயிடு..!!

:-)
----

செய்தி:




காரமடை ரங்கனாதன் கோயில் தேரோட்டம்



--
#153

Monday, March 13, 2006

கல்யாணமாம் கல்யாணம்




வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஓ..ஓ.ஓ

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
வார மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்
அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..ஊர்கோல காட்சியும்..

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ

அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ

பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
அந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..வழவழப்பா தருகுது.

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ

இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்



பாடல்/பாடியவர் : 'கானா' உலகனாதன், வியாசர்பாடி
படம் : சித்திரம் பேசுதடி.

---
#152

Friday, March 10, 2006

யோசனை

எனக்கு ஒரு சின்ன யோசனைங்க, அதை பத்தி முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி நம்ம வலைப்பதிவு மக்கள்கிட்டயும் ஒரு யோசனை கேக்கலாம்னு நினைச்சுத்தான் இந்த பதிவு. உன் யோசனைக்கும் வலைப்பதிவு மக்களுக்கும் என்னடா சம்பந்தம்னு கேட்டீங்கன்னா? இருக்கு.. இல்லாமையா உங்க கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கேன்.. இல்ல அப்படி உங்களுக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரத்தை உங்ககிட்ட வந்து பேசுற அளவுக்கு நான் என்ன...ம்ம்.. வேண்டாம்.. நானா எதுக்கு வாய குடுத்து மாட்டிகிட்டு.. நான் எப்ப என்னைய பத்தி எதாவது தப்பா சொல்லுவேன், உடனே அதை புடிச்சுக்கலாம்னு இங்க நிறைய பேரு காத்துட்டிருக்காங்கன்னு எனக்கு தெரியும்.



இப்பொ என்ன சொல்ல வந்தேன்.. ம்ம், ஞாபகம் வந்திருச்சு, முதல்ல அதை சொல்லிடறனுங்க,

நான் இந்த பதிவு எல்லாம் எழுதறத நிறுத்திடலாம்னு யோசிக்கிறனுங்க. அது ஏன்னா?, எதாவது எழுதனும்னா, எதாவது யோசிக்க வேண்டியிருக்குதுங்க, யோசிச்சா தேவையில்லாம மண்டை சூடாகிபோகுது, அப்புறம் அந்த சூட்டை தணிக்க வேற தனியா யோசிக்க வேண்டியிருக்குதுங்க. சும்மா இப்படி அடிக்கடி யோசிச்சு யோசிச்சு தேவையில்லாம, அதுபாட்டுக்கு அமைதியா, இருக்கிற இடமே தெரியாம தூங்கிட்டிருக்கிற என்னோட மூளைய வேற யோசனைங்கிற பேருல தொந்தரவு செய்ய வேண்டியிதாபோகுதுங்க.

யாருங்க அது, அதெல்லாம் உனக்கு இருக்கான்னு நக்கலா கேக்கிறது, அதெல்லாம் இருக்குதா இல்லையான்னு எல்லாம் என்னால இப்ப யோசிச்சிட்டு இருக்க முடியாதுங்க, அதுனால இப்போதைக்கு இருக்குதுன்னே வச்சுக்குவோம். (சும்மா ஒப்புக்கு சப்பானி மாதிரி, ஒரு பேச்சுக்காவது ஒத்துக்கோங்க அப்பு)

அதுனால இப்போதைக்கு ரொம்ப சீரியஸா, இதை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கறங்க. யாராவது நான் ரொம்ப யோசிச்சு இருக்கிற மூளைய செலவு செஞ்சுட்டு அம்போன்னு நிக்கிறதுக்குள்ளார, எனக்கு பதிலா நீங்க யோசிச்சு, எனக்கு ஒரு நல்ல யோசனை சொல்லிவீங்களாம்..எதை பத்தியா??.. அதைபத்தி தாங்க இவ்ளோ நேரமா பேசிட்டிருக்கேன்.. மறுபடியும் எல்லாம் சொல்ல முடியாதுங்க.. நீங்களே யோச்சிச்சு அது என்னான்னு தெரிஞ்சுகிட்டு, அப்புறம் அதை பத்தி யோசிச்சு ஒரு நல்ல யோசனையா சொல்லுவீங்களாம்,யோசிக்காதீங்க.. டக்குன்னு யோசிச்சு சொல்லுங்க, அந்த யோசனையா அடிப்படையா வச்சு தான், நான் மேற்கொண்டு என்னோட யோசனைய தீவரப்படுத்தி.. நல்லா யோசிக்கனும்.




எழுத ஒன்னும் கிடைக்கலைன்னா..எப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க :-(

--
#151

Tuesday, March 7, 2006

ரசனை


அம்மாவின் அன்பு
குழந்தையின் சிரிப்பு
உழைப்பின் வியர்வை
காலைச் சூரியன்
இரவு விண்மீன்
கோடைகால காற்று
கடலோர அலைகள்
பூவின்மேல் பனித்துளி
காதலியின் முத்தம்


ரசிக்ககூடிய எல்லாம் இருக்கிறது கடற்கரையில்
என்றார்கள் நட்பு வட்டத்தில்.

என்னால் தான் ரசிக்க முடிவதில்லை
பிச்சை கேட்டு சுற்றும் குழந்தைகளுக்கு நடுவில்

---------


நான் மேல எழுதினது பத்தி யாருக்காவது எதாவது கோபமோ/சாபமோ இருந்தா அதை எல்லாம் மாலதி'க்கு சொல்லிடுங்க.. (இங்க பின்னூட்டத்துல சொல்லுங்க், அவுங்க வந்து பார்த்துக்குவாங்க)..எதாவது நல்ல விஷயம் சொல்லனும்னா, அதுவும் இங்கயே சொல்லுங்க.. அதை நான் கேட்டுகிறேன் ;-)


(pic from : http://www.alfarrow.com/index.php)
--
#150

Monday, March 6, 2006

மழைநேரம்

கம்பி ஜன்னல் வழியா வெளிய பெய்யிற மழைய பார்த்துகிட்டு நின்னுருக்கீங்களா?.. அது ஒரு, என்னன்னு சொல்றது... அருமையான விஷயம்ங்க..




கூட யாருமே இல்லாம, நம்ம மட்டும் வீட்டுல தனியா இருக்கற ஒரு சாயங்காலத்துல, எதிர்பார்க்கம திடீர்னு சட சடன்னு அடிச்சு கொட்டுற மழைய, சன்னமா ஆடியோ சிஸ்டத்துல குலாம் அலியவோ இல்லை ஜாஹீரையோ போட்டுவிட்டுட்டு, தெரிக்கிற சாரல் நம்ம மேல விழுந்தும் விழுகாத மாதிரி நின்னு, வாசல்ல சாயங்காலம் உதிர்ந்த பவளமல்லிகளுக்கு நடுவால சுழிச்சு ஓடுற மழைதண்ணிய பார்த்துகிட்டே நின்னிருக்கீங்களா.. நான் நின்னிருக்கேன்.. நிறைய தடவை.


நேத்து சாயங்காலம் கூட அப்படித்தாங்க, யாரும் இல்லாம தனியா இருக்கும் போது திடீர்ன்னு மழை பேய்ஞ்சுது, ஆனா என்ன, வாசல்ல பவளமல்லிக்கு பதில்ல பக்கத்து வீட்டு தொட்டி க்ரோட்டன்ஸ், குலாம்அலி கேக்க கரண்ட் இல்ல, அதுக்கு பதிலா மழையிலயும் வேகத்த குறைக்காம போற வண்டிசத்தம்... :-)

சரி, ஒரு சிகரெட்டாவது புடிக்கலாம்னு பார்த்தா அதுவும் காலி.

இருந்தாலும்.. பவளமல்லியும் குலாம்அலியும் இல்லாம, மெழுகுவத்தி வெளிச்சத்துல கூட, மழை அழகாத்தாங்க இருக்குது...



அந்திமழை பொழிகிறது..சும்மா ஒரு ரெபரெண்ஸ்க்கு.. ;-)


[அதாவது, நேத்து சாயங்காலம் எங்க ஊர்ல மழை பேய்ஞ்சது.. அவ்ளோ தான் விஷயம்]

--
#149