Thursday, June 2, 2005

இப்பத்தான் நிம்மதி


பதினஞ்சு நாளா இணையத்துல இணையவே இல்லைங்க, மெயில் பாக்காம, தமிழ்மணம் பக்கம் வராம... கொஞ்சம் கஷ்டமான சமாச்சரம் தான் போங்க.. என்னவோ பொறந்ததுலயிருந்து இணையத்துலயே வாழுற மாதிரி சலிச்சுக்கிறேன்னு நினைக்கரீங்களா.. அப்படியெல்லாம் ரொம்ப பெரிய சொந்தம் இல்லைன்னாலும், ஆறு வருஷமா எதுக்கெடுத்தாலும் கம்புயூட்டர், நெட்'டுன்னே இருந்துட்டு, திடீர்ன்னு இந்த மாதிரி தொடர்ச்சியா பதினஞ்சு நாள் (நடுவால, ஒரு நாள் ஒரு கால் மணி நேரம் மட்டும் விதிவிலக்கு) இணையபக்கமே வராம இருக்கிறது இப்ப தானுங்க.. இன்னைக்கு காலையில வீட்டுக்குள்ள வந்ததும், எங்கய்யன் 'முதல்ல பல்லு கில்லு தேய்ச்சு, மூஞ்சிய கழுவிட்டு வந்து உக்காருடா'ன்னு சொல்லியியும், நான், 'ஆன் பண்ணி விட்டுட்டு போயி விளக்கிகறனுங்க'ன்னுட்டு நேரா கம்ப்யூட்டர் பக்கம் தான் போனேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து நம்ம டயலப்ப தட்டி ப்ரவுசர்ல 'யாஹூ'வ பார்த்ததும் தான் ஒரு நிம்மதி. அதென்னமோ இப்பவெல்லாம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது இணையம் பக்கம் வராட்டியோ, இல்ல நம்ம செல்'ல கவரேஜு இல்லாட்டியோ, என்னமோ ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ் ஆகிபோகுதுங்க..
ஒரு ரெண்டு நாள் விட்டாலே நம்ம தமிழ்மணத்துல எக்கச்சக்கமா ஓடியிருக்கும், இப்போ பதினஞ்சு நாள்!!.. எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கனும்..
படிச்சுட்டு அப்புறம் வந்து வச்சுக்கிறேன் எல்லாரயும்..

--
# 88

7 comments:

வீ. எம் said...

///////படிச்சுட்டு அப்புறம் வந்து வச்சுக்கிறேன் எல்லாரயும்..

//////////////

எல்லோரையுமா?? நெசமாவா? .. சரி சரி... வாங்க வாங்க .. இந்த 15 நாள் ல என்னை மாதிரி புது பசங்க .. நிறைய பேரு சேர்ந்து இருக்கோம்... 'ராகிங்' பன்ன போறீங்களா???

வீ .எம்

Vijayakumar said...

அடடே! 'கானாக் கண்டேன்' கோபிகா நிலமையை நினைச்சி மட்டுமே வெக்ஸ் ஆவீங்கன்னு நினைச்சேன். அது தப்பு போலியே.

ஏஜண்ட் NJ said...

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கொங்கு ராசா அவர்களே...
கடந்த பதினைந்து தினங்களாக (அதில் 15 நிமிடம் நீங்கலாக), தாங்கள் வலைப்பதிவுகள் பக்கம் வராத காரணத்தால்,
தங்களின் ராசபார்வைக்கு சில பதிவுகளின் சுட்டிகள் கீழே:

(எல்லாம் உங்க கோவையில நடந்த தி.மு.க. மாநாட்டின் தாக்கம் !)


'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை !

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது...

ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை !

மரம் வெட்டிகள், blog-ல் இப்படி தார் பூசினால்....

புலியும் அம்புலியும்...

Pavals said...

வாங்க வீ.எம். ராகிங்'ஆ.. .. அதெல்லாம் ஒரு 9 வருஷம் முன்னாடி செஞ்சு, மாட்டி, அலைஞ்சு..ஏங்க பழசெல்லாம் கிளரரீங்க :-(

விஜய் சார்,,, வெக்ஸ் ஆகிறதுக்கு நமக்கு எக்கசக்கமான விஷயம் இருக்குதுங்க.. என்ன அதுக்கு மேல பல விஷயங்களுக்காக டக்குன்னு குஷியாயிடுவேன்,, \

ஞானபீடம் அய்யா.. தோ வந்துட்டேன்..

Ganesh Gopalasubramanian said...

// எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கனும்.. //
இதனால் சகலமானவர்களுக்கும் (சக ப்ளாகர்களுக்கும்) சொல்வது என்னவென்றால் ராஜா (ராசா) கட்டளையிட்டு விட்டார்.......நீங்கள் கண்டிப்பாக அரண்மனைக்கு (ராசபார்வைக்கு) ஒரு தடவையாவது வரணுமாம்.

ஏஜண்ட் NJ said...


புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன், புடுங்கிட்டேன்

பத்ம ப்ரியா said...

Hi
A recent survay showd that 90% of the persons who are owning cell are become inconvenient, restless and tension if they had a gap of 30 minits in which they are not in receipt of any calls or sms.
Like that u become tension for your long absense. ( enakkey onnum puriyala.. but comment ungalukku thaana)