Monday, March 13, 2006

கல்யாணமாம் கல்யாணம்




வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஓ..ஓ.ஓ

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
வார மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்
அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..ஊர்கோல காட்சியும்..

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ

அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ

பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
அந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..வழவழப்பா தருகுது.

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ

இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்



பாடல்/பாடியவர் : 'கானா' உலகனாதன், வியாசர்பாடி
படம் : சித்திரம் பேசுதடி.

---
#152

27 comments:

வசந்தன்(Vasanthan) said...

எனக்கு இந்தப்பாடலைப் படத்தில் பார்த்தபோது அவ்வளவாக ஈர்க்கவில்லையென்பதுடன், "இது என்ன சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறதே?" என்றுகூட நினைத்திருந்தேன். ஆனால் இரண்டொரு நாளில் என்னையறியாமல் அப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கி விட்டேன்.

ஏஜண்ட் NJ said...

கல்யாண வாழ்த்துக்கள்

;-)

Pavals said...

வசந்தன்.. அதே தான்.. முதல்ல தடவை மாளவிக்காவுக்காக பார்த்தாலும்.. அடுத்த தடவை பாட்டுக்காகவும், உலகநாதனுக்காகவும் பார்த்துட்டே இருக்கேன்..

ஞான்ஸ்..>> மீனுக்கெல்லாம் வாழ்த்து சொல்ற பெரிய மகாத்மா ஆயிட்டீங்க.. ;-)

ஏஜண்ட் NJ said...

தல,

மீனுக்கு மட்டுமல்ல

சுண்டெலிகளுக்கும் நடந்த கல்யாணப் பாட்டு இங்கே

காக்கை குருவி எங்கள் சாதி!!!
மீன்களும் சுண்டெலிகளும் கூடத்தான்!
:-))

//முதல்ல தடவை மாளவிக்காவுக்காக பார்த்தாலும்.. அடுத்த தடவை பாட்டுக்காகவும், உலகநாதனுக்காகவும் பார்த்துட்டே இருக்கேன்..//

I Believe, really! ;-)

Pavals said...

ஞான்ஸ்> //I Believe, really! ;-)// வேற யாராவதுன்னா கூட சரி, மாளவிக்காவுக்கெல்லாம் ஒரு தடவைதான் பார்க்க முடியும்.. ;-)

ROSAVASANTH said...

அய்யோ, அய்யோ, நேத்துதானய்ய நானும் நாராயணனும் இந்த பாட்டை பத்தி விலாவாரியா பேசினிருந்தோம். காத்தடிக்குது அப்பால, காலத்தால் மறையப் போகாத கானா!

கைப்புள்ள said...

சனங்களோட பல்சை பிடிச்சி பாத்து பதிவு போட்டிருக்கீங்களே ராசா! நல்லாருங்க. வித்தியாசமான பாட்டு...இப்பல்லாம் இந்த பாட்டு எப்ப போட்டாலும் அத பாத்துட்டு தான் மறுவேலை.

இந்த பாட்டைப் பின்னணியா வச்சு வந்த ஒரு SMS:

ஏர்டெல்லுக்கும் பிஎஸ்என்எல்லுக்கும் கல்யாணம்
அந்த ரிலையன்ஸ் ஆபிசர் எல்லாம் ஊர்வலம்
மேளதாளம் அடிச்சு வர்றது பிபிஎல் டவருங்கோ
நம்ம ஹட்ச் காரரு நடத்தி வர்றாரு பார்டியும்

மாப்பிள சொந்தபந்தம் மீசைக்கார சேம்சங்
அந்த சீமென்சும் மோடரோலாவும் கலகலன்னு இருக்குது
பொண்ணுக்கு சொந்தபந்தம் ஃப்ரீகால் டாட்டாங்கோ
அந்த சோனியும் எரிக்சன்னும் வலவல்ன்னு இருக்குது

இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய கம்பெனி யாருங்கோ?
நோக்கியா தானுங்கோ!

ILA (a) இளா said...

பாட்டு நல்ல பாட்டுதான், இப்போ என்ன சொல்ல வரீங்கன்னா, உங்க கல்யாணத்துலையும் உலகநாதன் பாடனும், மாளவிகா ஆடனும், அவ்ளோதானே, ஏற்பாடு பண்ணிருவோம்

வானம்பாடி said...

'தென்னாகுனி' இல்ல ராசா அது, 'சென்னாகுனி'.

Pavals said...

ரோசா, நீங்களும் நாராயணனும் பேசிக்கிற மேட்டரை நான் எழுதறேனா... அஹா.. என்னே என் பாக்கியம்!!

கைப்புள்ள.. இவ்ளோ நீளமா SMS அனுப்பறாங்களா??

இளா> //மாளவிகா ஆடனும்//எதுக்கு? நான் மணவரையில புகை மண்டலத்துல உக்காந்து எரிஞ்சுட்டு கிடக்க, நீங்கெல்லாம் வந்து ஹாயா ஆட்டத்தை பார்க்கவா??.. அப்பு, அப்படி கல்யாணம் நடந்தாலும், நீங்க அண்ணியோட வரவேண்டியிருக்கும், அதையும் கொஞ்சம் ஞாபகத்துல வச்சுக்கோங்க.. ;-)

சுதர்சன், சரி செஞ்சுரலாம்..

அப்படியே 'பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார ***' இங்க ஒரு வார்த்தை புடிபடலை.. அதையும் சொல்லிங்க போட்டுரிவோம்..

கைப்புள்ள said...

//கைப்புள்ள.. இவ்ளோ நீளமா SMS அனுப்பறாங்களா??//

அனுப்புறாங்களே! இதெல்லாம் சொந்தமா எழுதற அளவுக்கு சரக்கு இல்லீங்ணா!

ஏஜண்ட் NJ said...

//இவ்ளோ நீளமா SMS //

then it's not SMS, it's LMS!

;-)

Boston Bala said...

இந்தப் பாட்டுக்கு என்னோட பதிவு இங்கே

சலம் said...

ஏனுங்க அது வழவழப்பா? இல்ல வரவழைப்பா?

வானம்பாடி said...

ராசா, அது மீசைக்கார கடுமா (என்ன வகை மீனு அதுன்னு தெரில)
அப்புறம், நீங்க கேட்டதால இன்னும் கொஞ்சம் திருத்தம்:

உளவு மீனு = உலுவ மீனு
திருக்காவல் = திருக்கவாலு
வார மீனு = பாற மீனு

'அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ' = அந்த நெத்திலி பொடியும் காரப்பொடியும் கலகலன்னு இருக்குது

இராதாகிருஷ்ணன் said...

பாட்டு நல்லா இருக்குங்க ராசா, இப்போத்தான் கேட்டுப் பாத்தேன்; எடுத்துப் போட்டதுக்கு நன்றி! இப்படியாவது மக்கள் மீனு வகைகளத் தெரிஞ்சுக்கிட்டாச் சரிதான் ;-)

Anonymous said...

Ellarum evalavu pesuninga pata pathi, but yarume pavam antha red T-shirt potu mike pidikira payanoda performance pathi pesave ellaye....

Vita Sudharsan oru Online Tamil Film Songs Lyrics Wikipediave arambichuruvaru pola iruku...

Muthu said...

கானா பாடல்கள் வரிசையில் ஒரு அருமையாக பாடல்....கூடவே மாளவிகாவின் சிரிப்பும் ஆட்டமும்..சூப்பர்யா...

பாடலை எடுத்து போட்ட ராசா....நீ வாழ்க

Anonymous said...

Andha amma potturkka dressukku peru enna? Sagikale!

Pavals said...

//Sagikale! //அப்படிங்கரீங்க.. ? நாங்க பாட்டு கேக்குற சந்தோஷத்துல அதை கவனிக்கவே இல்லீங்க.. ;-)

கைப்புள்ள said...

////Sagikale! //அப்படிங்கரீங்க.. ? நாங்க பாட்டு கேக்குற சந்தோஷத்துல அதை கவனிக்கவே இல்லீங்க.. ;-)//

நம்பிட்டோம்
:))-

Voice on Wings said...

//Ellarum evalavu pesuninga pata pathi, but yarume pavam antha red T-shirt potu mike pidikira payanoda performance pathi pesave ellaye....//

:)

Pavals said...

//நம்பிட்டோம்//

//நம்பமுடியவில்லை ல்லை லைஐஐஐஐ......//

உண்மைய சொன்னாஎன்னைக்கு இந்த உலகம் நம்ப்யிருக்கு.. எதோ கைபுள்ள மட்டுமாவது நம்பியிருக்காரே.. சந்தோஷம்..

Anonymous said...

ராசா!

நீங்க எவ்வளவு நல்லவருன்னு எத்தன தடவ எத்தன பதிவுகள்ல சொல்லியிருக்கீங்க! அப்படியிருக்கும் போது உங்கள நம்பலேன்னு சொல்லுவமா?
நம்பறோம்!நம்பறோம்!நம்பறோம்!

ஆனா இத ரெண்டு டயலாக்க மட்டும் (எனக்காக இல்ல, சந்தேகப்படற உலக ஜென்மங்களுக்காகங்ண்ணா) விளக்கீருங்கண்ணோவ் :-))))))
///நாங்க பாட்டு கேக்குற சந்தோஷத்துல அதை கவனிக்கவே இல்லீங்க.. ;-) /////
////முதல்ல தடவை மாளவிக்காவுக்காக பார்த்தாலும்/////

தியாக்

Pavals said...

என்ன தியாக் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க.. மேல முத்து சொன்னதை கவனிக்கலையா நீங்க //கூடவே மாளவிகாவின் சிரிப்பும்// .. அந்த சிரிப்பை மட்டும் தான் கவனிச்சேன், ட்ரெஸ்சை எல்லாம் பார்க்கலைங்க.. அதான் அப்படி..

எப்படி..?

Anonymous said...

ராசாதிராசா!
என்னயும் மதிச்சு விளக்கம் குடுத்ததுக்கு நன்றி ராசா!
மக்களே! இப்ப தெரியுதா இன்னமும் இந்த ஊரு ஏன் நம்ம ராசாவ நம்புதுன்னு.. அய்யோ.. அய்யோ..!

THYAG

சம்மட்டி said...

சரித்திரம் சிரிக்குதடி

ரட்ட இலைக்கும், பம்பரத்துக்கும் கல்யாணம்
சரவெடியால் நடக்குதுங்க கொண்டாட்டம்
அந்த போயாஸ் தோட்டத்து மாளிகையில் திருமணம்
அங்கு சரக்கடிக்கும் ஆளுக்கெல்லாம் கும்மாளம்

ஓ... ஓ..

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

ரட்ட இலைக்கும், பம்பரத்துக்கும் கல்யாணம்
சரவெடியால் நடக்குதுங்க கொண்டாட்டம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நாஞ்சிலாரு நாட்டியம்
மேலதாளம் முழங்கிவர எல்ஜியாரு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நாஞ்சிலாரு நாட்டியம்
மேலதாளம் முழங்கிவர எல்ஜியாரு வாத்தியம்
கண்ணப்பனார் நடத்திவரார் பார்டியும்
நம்ம கண்ணப்பனார் நடத்திவரார் பார்டியும்
அங்கே ஊர்கூடி சிரிச்சது பார் ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்

ரட்ட இலைக்கும், பம்பரத்துக்கும் கல்யாணம்
சரவெடியால் நடக்குதுங்க கொண்டாட்டம்

போடாவுல போட்டதினால் இருவருக்கும் லவ்வுங்க,
இத பார்த்துப்புட்ட ஆர்க்காட்டாரு வச்சாரங்கே வத்திங்க
போடாவுல போட்டதினால் இருவருக்கும் லவ்வுங்க,
இத பார்த்துப்புட்ட ஆர்க்காட்டாரு வச்சாரங்கே வத்திங்க

பஞ்சாயத்து தலைவருன்னா உளவுதுரை தானுங்க
பஞ்சாயத்து தலைவருன்னா உளவுதுரை தானுங்க

அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

மாப்பிள்ளை சொந்தம் பந்தம் மீச கார திருமாங்கோ
அங்கு புலிகுட்டியும், சிறுத்தைங்களும் கலக்கலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள்ளை சொந்தம் பந்தம் மீச கார திருமாங்கோ
அங்கு புலிகுட்டியும், சிறுத்தைங்களும் கலக்கலான்னு இருக்குதுங்கோ

பொண்ணுக்கு சொந்தபந்தம் மீசக்கார நட ராசனுங்கோ
பொண்ணுக்கு சொந்தபந்தம் மீசக்கார நட ராசனுங்கோ
அங்கு சங்கரங்கோயில ஆன்டிப்பட்டி வழவழப்பா தருகுது
வழவழப்பா தருகுது

மாப்பள பம்பரம் கலிங்கப்பட்டி தானுங்க
அந்த மணப்பெண்ணு ரட்ட இலை பையனூரு தானுங்க
மாப்பள பம்பரம் சிவகாசி தானுங்க
அந்த மணப்பெண்ணு ரட்ட இலை பையனூரு தானுங்க

இந்த திருமணத்தை நடத்தி வைச்சது காளிமுத்து அண்ணங்க
இந்த திருமணத்தை நடத்தி வைச்சது காளிமுத்து அண்ணங்க

இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு திண்டிவனத்தாரு தானுங்க

சம்மட்டி