Monday, March 20, 2006

அஞ்சலி

நான் முதன்முதலா தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்ச ஆங்கில பதிவுகள்ல சொளமயாவோட பதிவும் ஒண்ணு - chumma - just like that'ஆ எழுதுவாங்க, கொஞ்ச நாள் முன்னாடி இதா வந்திடறேன்னு சொல்லிட்டு போனாங்க,
நானும் நிறையா பேர் மாதிரி அடிக்கடி அங்க போயி பார்க்கிறது உண்டு, வந்துடுவாங்கன்னு..


ஆனா அவங்க வரவேயில்லை, இன்னைக்கு காலையில வழக்கம் போல செந்தில் பதிவு பக்கம் போனா, இனி அவங்க வரவே மாட்டாங்கன்னு செய்தி.. :-(,
அவுங்க
அண்ணனோட பதிவு மூலமா.


என்னென்னமோ நினைக்கிறோம், ம்ம்.. 'அஞ்சலி'ங்கிற ஒத்த வார்த்தையில முடிஞ்சு போகுது அத்தனையும்.


ஆனா கடைசி வரை அவுங்க பதிவுகள்ல இருந்து அவங்களுக்கு உடல் ரீதியா ப்ரச்சனைகள் இருந்த்ததுங்கிறதே தெரியாம, சந்தோஷமாத்தான் எழுதிட்டிருந்தாங்க.. சினிமாவுல இப்படியெல்லாம் பார்க்கும் போது நெகிழ்ச்சியா இருக்கும்ங்க.. ஆனா நிஜத்துல நமக்கு பக்கத்துல இங்கயே நடக்கும் போது, சட்டுன்னு ஒரு வெறுமையா போகுதுங்க வாழ்க்கையே.


'அவ்ளோதான்'.. இதுக்குள்ளார எத்தனை கூத்து..





சொளம்யாவின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்



மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்
-
கீதா




---
#155

9 comments:

மணியன் said...

நான் அவங்க பதிவு படிச்சதில்லைன்னாலும் சகபதிவாளர் என்ற முறையில் அவரை இழந்து வாடும் உற்றார்/சுற்றார் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்னாரின் ஆன்மா நிலைபெறவேண்டி, அவர்தம் பிரிவால் துயரில் உழலும் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்்ளும்.....

Anonymous said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
செளம்யாவின் குடும்பத்துக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை ஆண்டவன் தர வேண்டிக்கொள்கிறேன்.

தியாக்

Chenthil said...

Raasa, andha verumai thaan en manasai romba baadihcchadhu.

ILA (a) இளா said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

My heartfelt condolences to Sowmya's family.

-Mathy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Just a couple of days ago, I was talking about 'neo' Karthikeyan with a friend of mine. I havent met him in person, yet his sudden demise affected me a lot. He was all i could think of, in the days following his accident. his love for life was something i loved about him. :( Untimely deaths like these are the curse, i think.

-Mathy

அனுசுயா said...

உண்மையில் வருந்தத்தக்க நிகழ்ச்சி இவரது படைப்புகளை நான் பார்த்ததில்லை எனினும் உங்களின் பதிவின் மூலம் அறிய நேர்ந்தது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

துளசி கோபால் said...

அடடா.... அவுங்க எழுத்துக்களைப் படிச்சதில்லையே(-:

ரொம்ப மனசுக் கஷ்டமாப் போயிருச்சுப்பா. அவுங்க குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.