'ஆள் கூட்டத்தில தனியே',... மம்முட்டி, மோஹன்லால், சீமா எல்லாம் நடிச்சு,
எம்.டி-I.V.சசி காம்பினேஷன்ல வந்த மலையாள படம் அது. இந்த பதிவு அந்த படத்தை பத்தி இல்லைங்க, அதை பத்தி இன்னொரு நாளைக்கு எழுதுவோம். (நான் எழுதறத விட
கே.வி.ஆர் எழுதினா நல்லா இருக்கும்..) சும்மா ஒரு விளம்பரத்துக்காக இந்த டைட்டில் அவ்ளோதான்.
ஊரு உலகத்துல பதிவு வச்சிருககிறவங்க எல்லாரும் ஆளாளுக்கு அஞ்சு பேரை கட்டி இழுத்து
book meme வெளையாட்டு விளையாடி ஓஞ்சுட்டாங்க.
நம்மள யாரும் அந்த விளையாட்டுக்கு கூப்பிடலை, :-(, அதுக்காக..., நம்ம சும்மா விட்டுற முடியுமா என்ன, சொல்லுங்க?
நம்ம என்னைக்கு கூப்பிட்டு ஒரு பக்கம் போனோம், நம்மளா போயி
'நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன்'ன்னு நிக்கிற ஆளு தான, அதுனால என் சார்பா என்னோட 'பொஸ்தக வாசிப்பு புலமை'ய நானும் ஊரு உலகத்துக்கு சொல்லிடலாம்னு முடிவு செஞ்சுட்டனுங்க.
(வேற வழி, பதிவுன்னு ஒன்னு வச்சுகிட்டு, அப்புறம் அதுல எதாவது உருப்படியா(..?) போடனுமில்ல, எத்தன நாளைக்கு தான் சும்மா வெறும் படமா போட்டு தள்ளுறது..?)
ஆகவே மகாஜனங்களே, இதோ உங்கள் பார்வைக்கு என்னுடைய 'புஸ்தக மீமீ'
---
என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரம் சரியா
46.(எப்படியும் மாசம் ஒரு தடவை கோவை டவுன்ஹால் '
செல்வி' - பழையபுஸ்தககடைக்கும் நமக்கும் குடுக்கல் வாங்கல் இருக்கும்)
கடைசியாக வாங்கிய புத்தகம்'புதுசு' : மாலனின் சிறுகதை தொகுப்பு (
எழில் செய்த சிபாரிசு)
காடு - ஜெயமோகன் (படிக்கலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையா இருக்கு)
'பழசு' :(செல்வி கடை உபயம்)
The Forerunner - Kahlil Gibran (
மீனாக்ஸோட பதிவுகள்ல தான் இவர் நமக்கு அறிமுகமே)
வாசித்து கொண்டிருக்கும் புத்தகம்காக்டெயில்The Alchemy of Desire (இந்த ரெண்டையும் வச்சு என்னை பத்தி தப்பான அபிப்பராயத்துக்கு வந்துராதீங்க..:-( , எத்தேசயா நடந்த விஷயம் அது)
இந்த வார ஆனந்தவிகடன்இந்த வார அவுட்லுக்புதுசா நம்ம வண்டியில மாட்டுன பயோனீர் DEH-P6700MP சிஸ்டத்தோட
யூசர் மேனுவல் (ஒன்னும் புரியவே மாட்டேங்குது..!)
கடைசியாக படித்து முடித்த புத்தகம்ஜனகனமன - மாலன்Glaucoma பத்தி அரவிந்த் ஹாஸ்பிடல்ல குடுத்த 6 பக்க 'துண்டு' பிரசுரம்
மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள்என் செல்ல
Rxன் RCபுக் (என் சுய சம்பாத்தியத்துல என் பேருல நான் ஆசைய வாங்கினது)
. என் பேங்க பாஸ்புக், இது ரெண்டும் தான் இதுல டாப்
1,2'ல வர வேண்டியது, ஆனா உங்க கோவத்துக்கு ஆளாக வேண்டாம்ங்கிறதுக்காக அதை விட்டுட்டு என் லிஸ்டை சொல்றேன்.
1.
வாஷிங்டனில் திருமணம்
(அனேகமா டபுள் செஞ்சுரி அடிச்சிருப்பேன், அத்தனை தடவை படிச்சாலும் மறுபடியும் படிக்க சொல்லுது)
2.
இரும்புக்குதிரைகள்(twinkle, gokulam, ராணிகாமிக்ஸ்'ல இருந்து தடாலடியா 90ல இதுல இறங்கினேன். அதுக்கப்புறம் தான் ராஜேஷ்குமார், சுபா, பட்டுகோட்டை பக்கமெல்லாம் கூட போனேன்.. 2000க்கு அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்)
2.
Yusuf Khan- Rebel Commander(சேப்பாக்கத்துல சாயித் அன்வர் 194 அடிச்ச அன்னைக்கு திருவெல்லிகேணி ரோட்டுகடையில வாங்கின புஸ்தகம், ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வரை இருந்துச்சு, இப்போ எங்க வச்சேன்னு தெரியாம தேடிட்டு இருக்கேன், அதுல கிளார்க், யுசுப்கான், அவுங்க மேல்/கீழ் அதிகாரிகளுக்கு நடுவே எழுதிகிட்ட கடிதங்கள்... ம்ம்.. எப்படியாவது கண்டு புடிக்கனும்.. எடுத்து வச்சுகிட்டா 'மருதநாயகம்' வரும் போது உபயோகமா இருக்கும்)
3.
Doctors - Erichsegal(வேற ஒரு 'விஷயத்து'க்காக, சும்மா பிலிம் காட்ட வாங்கின புஸ்தகம்,..;-) , இன்னைக்கு வரைக்கும் பேவரிட் லிஸ்ட்'ல இருக்கு)
4.
Kane & Abel - Jeffrey(நிறைய பேருக்கு புடிச்ச புஸ்தகம், எனக்கும் புடிச்சிருக்கு, எங்கய்யனுக்கும்..!)
6.
பொன்னியின்செல்வன்( எனக்கென்னவோ இதைவிட '
பார்த்திபன் கனவு' ரொம்ப புடிக்கும்னாலும், ஹிஸ்ட்ரி மேடம் மனசு வருத்தப்படுமேன்னு இதை இங்க ஆறாவதா சேர்த்திருக்கேன்.. ஹிஸ்ட்ரிமேடம் - எங்கம்மா!!)
புடிக்காத புத்தகங்கள் (இது நம்ம சொந்த சரக்கு)
சுய முன்னேற்றம் பத்தின புத்தகங்கள். நமக்கும் இந்த மாதிரி புத்தகங்க ரொம்பவுமே அலர்ஜிங்க..
எல்லாரும் பெருமையா பேசி, நீ இன்னும் படிக்கலையா'ன்னு கொஞ்சம் கேவலமா கேட்டதுனால தான் 'you can win - shivkera' படிச்சேன்னா பாருங்களேன்..
(ஒரு வேளை நமக்கு புடிக்காத 'முன்னேற்றம்' பத்தி இருக்கிறதுனாலயோ என்னவோ ;-) )
கடைசியா ஒரு அஞ்சு பேர இதுல இழுத்து விடனுமாம்.... யாரு விட்டு போயிருக்காங்க கூப்பிட.. போங்கப்பா..
--
அப்பா.. இப்பத்தான் நிம்மதி.. !!
--
#95
--
அப்டேட்:
(சற்று முன் வந்த நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...)
அஞ்சு நாள் முன்னாடியே கோபி நம்மள இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டிருக்காரு, அதை கவனிக்காம யாரும் கூப்பிடலைன்னு புலம்பியிருக்கேன்.. .. ச்சே.. ஒரே பப்பி ஷேம்மா இருக்குதுங்க.. :-(