Wednesday, December 28, 2005
சிரிப்பு
என் நேரம் போன வேலை கொஞ்சம் இழுத்திருச்சு, (என் தப்பு இல்ல, ஆனா எங்கய்யன் ஒத்துக்க மாட்டாரு). சரி புள்ளைய கூட்டுட்டு அப்புற்ம் போற வழியில வந்து வேலைய பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு, அவளையும் (ஏழாவது படிக்குது - பேரு சுனிதா) கூட்டிட்டு மறுபடியும் பேங்க்குக்கு போனேன். போன இடத்துல கொஞ்ச நேரம் மறுபடியும் காத்திருக்க வேண்டியதா போச்சுங்க.
'என்னம்மா செய்யிறது காலையில இருந்து அலையவிடுறானுக, இதுக்கு தான் நான் இந்த கவர்மென்ட் பேங்க்காரங்ககிட்ட கொஞ்சம் கொஞ்சமா சவகாசத்தை குறைச்சுட்டிருக்கேன்'னு, புலம்பிகிட்டு இருந்தேன். டக்குனு சுனிதா இப்ப என்ன வேனும் உங்களுக்கு நான் முடிச்சுதர்றேன்னு சொல்லிட்டு என் கையில இருந்த பேப்பர வாங்கிட்டு போயி ஆக வேண்டிய வேலைய 10 நிமிஷத்துல முடிச்சுட்டு வ்ந்திருச்சு, நான் இதுக்கு காலையில அரை மணி நேரம் மறுபடியும் மதியம் அரை மணி நேரம்னி காத்துட்டிருக்கேன் :-(, நம்ம ராசி அப்படி.
முடிச்சுட்டு வந்ததுல விஷயம் இல்லீங்க எப்படி இவ்ளோ சீக்கிரம்ன்னு நான் கேட்டதுக்கு அவ சொன்ன பதில் தான் மேட்டரே'..
'ஒரு புள்ளை போயி சிரிச்சுட்டே கேட்டா, எல்லாம் சீக்கிரம் முடியும்னு சிரிச்சுகிட்டே சொன்னா..
நிசம்தானுங்க..
புள்ளைக வந்து சிரிச்சதும் வேலைய செஞ்சு குடுக்கிறது ஒரு தப்பு, ஆனா அதை விட, இந்த வயசுலயே 'ஒரு எட்டாவது படிக்கிற புள்ளைக்கு, வேலை ஆகனும்னா நம்ம போயி சிரிச்சு பேசுனா போதும்னு யாரு சொல்லி குடுத்தா?
நம்ம கூட்டாளிக கிட்ட பேசினா 'எல்லாம் சினிமா மாப்ளே'ங்கிறாங்க..
எனக்கென்னமோ எல்லாத்தையும் சினிமா மேல பழி போடுறதுல நம்பிக்கை இல்லீங்க.. எங்கயோ கத்துகிட்டிருக்கா.. அதை விடுங்க.. நம்மளும் 'இல்ல கண்ணு இதெல்லாம் தப்பு'ன்னு சொல்ல முடியாது பத்தாம் பசலித்தனமா இருக்கும், ஆனா அதுக்காக அவள பாராட்ட முடியுமா? இதெல்லாம் நல்லதுக்கா?
'ஒன்னுமே புரியல உலகத்திலே'
---
#129
Thursday, December 22, 2005
தொலைத்துவிட்டேன்!
அவள்..
நேர்மையை எனக்கு அறிமுகபடுத்தியவள்
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை உணர்த்தியவள்
அவளுடைய நேர்மையை காட்டி என்னை பயங்கொள்ள செய்தவள்
என்னை முழுமையாக மாற்றியவள்..
நம்பிக்கைஉடையவனாக.. நம்பத்தகுந்தவனாக
ஆனால்...
இன்று
அவள் நேர்மையை தொலைத்துவிட்டாள்
நானும் தொலைத்துவிட்டேன்,
நேர்மையாய் இருப்பதின் அவசியத்தை..
--
#128
Monday, December 19, 2005
எங்க முறையிடுவேன்..?
சட்டை கிழிஞ்சிருந்தா...
தச்சு உடுத்திக்கலாம்..
நெஞ்சு கிழிஞ்சிருச்சே...
எங்க முறையிடுவேன்...?
----
சும்மா,..காலையில ரெயின்போ எப்.எம்'ல தலைவர் பட பாட்டு கேட்டுகிட்டே வண்டி ஓட்டுனதுலைருந்து, இதே வரியத்தான் பாடிகிட்டு இருக்கேன்.. உங்களுக்கும் சொல்லாலாமேன்னு தான் :-)
--
#127
Wednesday, December 14, 2005
அதே மெனு
நம்ம வீட்டுல இந்த டிசம்பர் மாசம் ஆம்பிச்சா வருஷம் தவறாம ஒரு நாடகம் நடக்கும்ங்க, ஒண்ணாந்தேதி வாக்குல இருந்தே 'புது சேலை எடுக்கனும்'னு எங்கம்மா ஆரம்பிப்பாங்க, 'ஆமா ஏற்க்கனவே எடுத்து வச்சிருக்கிறதுல எதாவது ஒண்ணு கட்டிக்க வேண்டியதுதான'ன்னு எங்கய்யனும் வழக்கம் போல கடைசி நேரம் வரைக்கும் பிகு பண்ணிகிட்டே இருப்பாரு, எப்படியும் முத நாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும், 'வண்டியில முன்னாடி சீட்டுல ஒரு கவர் இருக்குது பாரு'ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு கைகால் கழுவ போயிருவாரு, எங்கம்மாவும் படபடப்பா ஒரு சிரிப்போட போயி அந்த கவரை எடுக்கிறதும், அதுக்குள்ளார ஒரு புது பட்டுசேலை இருக்கிறதும்..
நானும் நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்த பார்த்துட்டு தாங்க வர்றேன், எப்படியும் அடுத்த நாள் எனக்கு அவ்வளவா புடிக்காத ஆனா எங்கய்யனுக்கு புடிச்ச ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் உண்டு..கூடவே எங்கய்யன் புதுதுணி உடுத்திலைங்கிற புலம்பலோட..
வருஷம் தவறாம இதே 'மெனு' தானான்னு நான் சும்மா அலுத்துகிட்டாலும், நிஜத்துல இன்னும் நிறையா வருஷம் இதே மாதிரி ராகிபக்கோடாவும், ஜவ்வரிசி பாயாசமும் சாப்பிடனும்னு தான் ஆசைப்படுறேன்.
பார்த்தீங்களா எல்லாம் சொன்னேன், ஆனா என்ன விஷேசம்னு சொல்லாமயே விட்டுட்டேன்.. நான் இப்படித்தாங்க சொல்ல வந்தத விட அதை சுத்தி இருக்கிறதுல தான கவனம் போகும் எனக்கு..
விஷேசம் என்னன்னா எங்க வீட்டுல எங்க்கய்னுக்கும், அம்மாவுக்கும் இன்னைக்கி (14-டிசம்பர்) கல்யாண நாள்.. 29வது வருஷம்..
நம்ம சகா ஒருத்தன் காலையில என்கிட்ட 'நீ என்ன கிப்ட் குடுத்தே'ன்னு கேட்டேன்.. 'ச்சே ச்சே, நமக்குத்தான் இந்த கிப்ட் குடுக்கிற பழக்கம் எல்லாம் இல்லையே, வழக்கம் போல 'இதே மெனுவா'ன்னு அலுத்துகிட்டு சாப்பிட வேண்டியதுதான்.. ;-)
--
#126
Tuesday, December 13, 2005
போன மச்சான் திரும்பி வந்தான்..
ரொம்ப நாள் கழிச்சு, சொந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு, திரும்பவும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கேன்.
நடுவால கொஞ்ச நாள் காணாம போன காலத்துல இங்க நிறைய விஷயம் நடந்திருக்கு, எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து படிக்கனும்.
அப்புறம்.. ஊர்ல மழை பரவாயில்லைங்க.. ஊரெல்லாம் பேய் மழை அடிச்சிருக்கு, நிறையா பேருக்கும் மழைய பத்தி இப்ப பேசுனாலே பத்திக்கிட்டு வரும், ஆனா நம்மூருபக்கம் பக்கம் அந்தளவுக்கு பேய் மழை இல்லீங்க, ஆனா நல்ல மழை..
நாலு வருஷமா தண்ணியில்லாத கிணத்துல, அதுல இருந்த மோட்டார கூட கழட்டி வச்சிருந்தோம், இப்போ அதுல கடை எடுத்துவிட்டு, பொழுதுக்கும் வாய்க்கால்ல தண்ணி வெளியபோயிட்டிருக்கு, அந்தளவுல நல்ல மழை. நாலு அஞ்சு வருஷமா மழையே இல்லாம, என்னாடா இது தெரியாத்தனமா இப்படி விவசாயம்னு வந்து மாட்டிகிட்டமோன்னு நினைச்சேன், ஆனா இந்த மழை இன்னும் ரெண்டு மூனு வருஷம் எல்லாம் ஒழுங்கா போகும்னு தோணுதுங்க..
வேற என்னங்க..
கொஞ்ச நாள் கேப் விட்டுட்டு மறுபடியும் வந்ததுல என்ன எழுதறதுன்னே தெரியலைங்க, இதுக்கு முன்னால மட்டும் அப்படி என்ன உருப்படியா எழுதி கிழிச்ச்னேன்னு கேக்கரீங்களா, அதுவும் சரிதான்..
ஆனாலும் எதாவது எழுதுவேன்.. இப்போதைக்கு இவ்ளோதான்..
மீண்டும் வருவேன்..
என்றும் அன்புடன்
உங்கள்
கொங்கு'ராசா
--
#125
Wednesday, October 5, 2005
இடைவேளை..!!
வாழ்க்கையில மாற்றம்ங்கிறது மட்டுமே மாற்றமில்லாதது'ன்னு சொல்லுவாங்க, அதுவும் என்னை பொருத்த வரை மாற்றங்கலுக்கு நடுவால தான் நான் ஓடிட்டே இருந்திருக்கேன்.. முன்னால ஒரு நாள் ஒருநாள் வலைப்பூ'வில அறிமுகத்துக்காக மதி எங்கிட்ட என்னை பத்தி கேட்டப்ப, சும்மா சரசரன்னு ஒரு பக்கம் எழுதிட்டு, அப்புறம் அதை படிச்சு பார்த்ததுல எனக்கே ஒரு மாதிரி சிரிப்பா வந்துருச்சுங்க.. அவ்வளவு 'U' டர்ன் அடிச்சிருக்கேன் நான்.. அந்த மாற்றங்கள் வழியில இப்ப இன்னொரு மாற்றம்.. இந்த முறை ஆசைக்காக இல்லாம, சில சொந்த காரணங்களுக்காக.
என் சகா ஒருத்தன் சொல்லுவான் 'குழந்தையாவே இருந்திருக்கலாம்டா, என்ன அடிக்கடி கீழ மேல விழுந்து கை கால்ல காயம் பண்ணிபோம் அவ்வளவுதான, இப்ப வளர்ந்துட்டு கை கால பத்திரமா வச்சுகறோம், ஆனா மனசுல காயம் பண்ணிக்கறோம்'ன்னு, கரெக்ட்டுதான்.. ஆனா அதுக்காக வளராம குழந்தையாவே இருக்க முடியுமா..என்ன? .. மனவளர்ச்சி குன்றியவன்'ன்னு சொல்லி தூக்கி பைத்தியகார ஆஸ்பத்திரியில போட்டுர மாட்டாய்ங்க.
மாற்றம் என்னதான் வளர்ச்சிய குடுக்குதுன்னாலும் சில நேரம் சங்கடம் தான்.. சரி.. சரி..!! வழக்கம் போல சொல்ல வந்தத சொல்லாம வெட்டி கதை பேச ஆரம்பிச்சுட்டன் பார்ட்தீங்களா... இந்த பழக்கம் மட்டும் மாறவே மாட்டேங்குது .. மாற்றமில்லாததும் உண்டுங்கிறதுக்கு இது ஒரு சாட்சி.. ;-)..
சரி.. சொல்ல வந்தத சொல்லிடறேன்..
இந்த மாற்றம் முடிஞ்சு ஒரு மாதிரி செட்டில் ஆகி, அதாவது அடுத்த மாற்றத்த எதிர்கொள்ள தயார் ஆகிற வரைக்கும் ;-), இந்த பக்கம் வந்து என் 'ராசபார்வை'ய செலுத்த முடியாது போல இருக்குங்க.. நானும் எவ்வளவு நாள் தான் வெட்டியா ஒரு படத்தையும் பாட்டையுமே போட்டுகிட்டு இருக்கிறது.. அதான் யாரும் கல்விட்டு எரியறதுக்கு முன்னாடி நானே மரியாதையா உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு போயிரலாம்னு வந்திருக்கேன். நான் பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போயிட்டா அப்புறம் பயபுள்ள இவத்தையே திரிஞ்சுகிட்டு இருந்தான், திடீர்ன்னு காணாத போயிட்டான்னு நீங்க யாரும் விசனப்பட கூடாது பாருங்க, அதான்.. சொல்லிட்டேன். 'ராசபார்வை' வராதே ஒழிய, நான் தமிழ்மணம் மூலமா உங்களை மேல எல்லாம் என் பார்வைய வீசிகிட்டே தான் இருப்பேன்.. ;-)
எப்ப திரும்பி வருவே?ன்னு கேட்டீங்கன்னா..
இந்த சினிமாபடத்துல எல்லாம் கோட்டும் கண்ணாடியும் போட்ட டாக்டருக கோமா பேஷண்ட்டுகள பத்தி சொல்ற மாதிரி.. 'இந்த பதிவு எப்ப வேணா பழைய நிலமைக்கு வரலாம், ஒரு வாரத்துல, ஒரு மாசத்துல, ஒரு வருஷத்துல, ஏன் நாளைக்கே கூட அது நடக்கலாம்.. ஒரு வேளை பழைய நிலமைக்கு வராம கூட போயிரலாம்.. நம்ம கையில எதுவுமே இல்லைங்க..'
நன்றி மக்களே.. மீண்டும் சந்திப்போம்..!!
--
#124
Thursday, September 22, 2005
:-(
மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை...
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை..
என்னை நீ தேடி... இணைந்தது பாவம்..
எல்லாம் நீயே எழுதிய கோலம்...
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாறோ ....
#123
Wednesday, September 14, 2005
ஏகாந்தம்
தரையின் ஈரம் நெற்றி வரை சில்லிடுகிறது..
வெண்மேகங்கள் பார்வையை மறைக்கின்றன..
சிறு சத்தமும் எதிரொலியாய் கேட்கிறது..
உலகமே என்னை சுற்றி வருவது போல் இருக்கிறது..
வெளிச்சம் கொஞ்சமாய் கண்ணாமூச்சி காட்டுகிறது..
அருகாமையில் நடக்கும் எதுவும் என்னை கவரவில்லை..
மனது கட்டவிழ்ந்து தொலை தூரம் பறக்கிறது..
'சார் பில் பண்ணிரலாமா!!'
மெதுவா வெள்ளை சட்டையும் கருப்பு 'போ-டை'யும் கட்டிகிட்ட ஆள் வந்து கேட்டதும்தான் தோனுச்சு.. ரொம்ப நாள் கழிச்சு எல்லா பயலும் வந்திருக்காங்கன்னு உக்காந்து.. நாலு ரவுண்ட் ஜாஸ்தியா போயிருச்சு போல.. விடியக்காலையில அஞ்சரைக்கு முகூர்த்தம்.. எவன் எந்திரிக்கலைன்னாலும் நம்ம எப்படியாவது எந்திருச்சு போயிடனும்.. இல்ல, மாப்ள அசிங்கமா திட்டுவான், கிளம்பும் போதே சொல்லியனுப்பிச்சான்.. :-(
--
#122
Tuesday, September 13, 2005
வெற்றி / தோல்வி
6-3, 2-6, 7-6 (1), 6-1'ன்னு ஜெயிச்சு மொட்டை'யோட ஆசைய தகர்த்து Federer மறுபடியும் யூ.எஸ். ஓபன் சாம்பியன் ஆயிட்டாரு. அந்த ஆட்டம் ஆடிட்டு கடைசியில ரொம்ப சாதரணமா..
"I wonder why I always play so well, especially on the big occasions" ன்னு சொல்லிட்டு போறயே ரோஜர் கண்ணு..ம்..
மொட்டையும் பெருந்தன்மையா 'he's the best I've ever played against'ன்னு சொல்லிட்டு போயிருச்சு...
நம்மாளு தோத்துருவாருன்னு ஆரம்பத்துலயே தோணினாலும், இவ்வளவு ட்ஃப் குடுப்பாருன்னு எதிர்பார்க்கலைங்க.. செம ஆட்டம்..!!
------
'இயங்காத வாழ்க்கையில்
இன்பமில்லை.
இயங்கு. இயங்கு
மனிதனே. இயங்கு.
வெற்றியை
நோக்கியாவது - தோல்வியை
நோக்கியாவது
இயங்கிக்கொண்டே இரு.
இயக்கமே வாழ்க்கையின்
முதல் அடையாளம்.'
- வைரமுத்து (தண்ணீர் தேசம்)
--
#121
Friday, September 9, 2005
ஓரு கல்லுரியின் (வெட்டி) கதை..
அஞ்சு வருஷமா, ஒரே இடத்துல சிக்கிட்ட கேசட் மாதிரி, மனநிலை பாதிக்கப்பட்டு தவிக்கிற நண்பனுக்காக, அவன் காலேஜ்ல படிச்ச அத்தனை பேரும் சேர்ந்து மறுபடியும் ஒரு சூழல் உருவாக்கி, அதே மாதிரி காலேஜ், அதே பசங்க, அதே கலாட்டா, அதே சண்டை, அதே காதல்'ன்னு கேசட் ரீவைண்ட் செய்யிற மாதிரி செஞ்சு, அவனை குணமாக்கிற கதை.. ம்ம்.. இப்படி ரெண்டு வரியில சொல்லும் போது நல்லாத்தான் இருக்கு.. ஆனா தியேட்டர்ல உக்கார முடியலையே சாமி..
யுவன், நா.முத்துகுமார்'ன்னு ஆசைபட்டு மழையில இந்த படத்துக்கு போனதுக்கு பதிலா பேசாம வீட்டுல உக்காந்து மொட்டை ஆட்டத்தை பார்த்திருக்கலாம்.
தல செமியில நுழைஞ்சுட்டாரு.. என்ன வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்..!! ஒரு வேளை ஸ்டெபியக்காவோட பலத்துல பாதிய வாங்கிட்டு ஆடுறாரோ என்னவோ.. எப்படியாவது இந்த தடவை ஜெயிச்சுட்டு ரிடையர் ஆகலாம்னு இருப்பரு போல.. செமி'யில 'ரோபி'தான்.. பைனல்ஸ்ல தான் இருக்கு.. ம்ம்.. பார்ப்போம்
--
#120
Thursday, September 1, 2005
நடுநிலை!!
யாஹூ'வில வந்திருக்கிற ரெண்டு போட்டோ செய்தி.. ரெண்டயும் படிச்சு பாருங்க.. :-(
FINDING FOOD!
LOOTING FOOD!
எத்தனை உயிரோட பசிய தீர்க்க எடுத்துட்டு போறானோ?.. இது திருட்டு.. ஆனா மேல உள்ள படத்துல இருக்கிறது 'கண்டெடுக்கிறது'.. நல்லாயிருங்கடா..!!
வெளுப்பான அவுங்காளுக செஞ்சா ஒரு நியாயம், அதுவே கறுப்பன் ஒருத்தன் செஞ்சா அதுக்கு வேற நியாயம்.. நல்ல 'பத்திரிக்கை தர்மம்'!!
:-(
நன்றி : அதுல்
---
#119
Tuesday, August 30, 2005
அழுகை
ஆடி மாசம் முடிஞ்சுது,
வெய்யில் இறங்கிற நேரம்..
பஸ்ல அவ்வளவு கூட்டமில்லை..
குழந்தை மடியில தூங்குது..
பஸ் கிளம்ப போகுது..
என்கிட்ட ரகசியமா
'சிவசு வீட்டுல நல்லாயிருக்காங்களா??'
பதில் சொல்ல முகத்தை பார்த்தா
அவ கண்ணுல தண்ணி..
அவனுக்காக அழுகறா,
ரெண்டு வருஷம் கழிச்சு..
ம்.ம்...
அறிவுகெட்ட ஜென்மங்க..
சூழ்நிலை புரியாம எனக்கு வேற சிரிப்பு வருது.. :-(
--
#118
Tuesday, August 23, 2005
பேய்க்கு கனவு வருமா?
நான் சொல்ல வந்தது ஈரோடு பூரா எல்லா இடத்துலயும் நலலா பெருசா, மூனுக்கு நாலு அகலத்துல, மூனு விதமா ஒட்டியிருக்கிற வெள்ளை போஸ்டர்கள பத்தி. அந்த போஸ்டர்கள்ல அடிச்சிருக்கிறது தான் நான் முதல்ல சொன்ன கேள்விகள்.
பேய்க்கு கனவு வருமா?
பேய்க்கு நிழல் விழுமா?
அது ஒரு பெரிய சோக கதை, ஆனா இந்த பதிவு பேய்க்கதை பத்தினது, அதை பார்ப்போம்.
நானும் திரும்பி ஊர் வர்ற வரைக்கும், இது எதாவது விளம்பர உத்தியா? அப்படின்னா என்ன பொருள்க்கான விளம்பரம்ன்னு, நானும் மண்டைய போட்டு குழப்பி பார்க்கறேன், ஆனா ஒண்ணும் புடிபடவே மாட்டேங்குதுங்க.. நமக்கு பொதுவாவே அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சு தொலையாது, அது வெற சமாச்சாரம்..
யாருக்காவது எதாவது தெரியுங்களா இதை பத்தி..? இல்லை ஏதும் தோணுதா?
செல்வராஜண்ணா (வயசுக்கு மரியாதை!) உங்களுக்கு எதும் தெரியுமா?
ஆமா நிஜம்மாலுமே பேய் இருக்கா? *
*(கல்யாணம் செஞ்சுக்காத ஆட்கள் மட்டும் பதில் சொல்லவும்)
--
#117
Saturday, August 20, 2005
விடை இல்லா கேள்விகள்
சரி.. சரி.. எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. நிப்பாடிக்கறேன்.. ஒரே ஒருத்தர் தான் கேட்டாரு, அதையே நான் பாட்ஷா மாதிரி நூறாக்கிட்டேன், அவ்வளவுதான், அதுக்கு எதுக்கு இப்போ நீங்க இப்படி டென்ஷன் ஆவரீங்க, அவனவன் என்னென்னமோ கதை சொல்லிட்டு திரியறான், அதையெல்லாம் கண்டுக்க மாட்டீங்க, நான் எதாவது சொன்னா மட்டும் கோவப்படுறீங்க. என்னத்த செய்யறது? அப்படியே பழகிட்டோம் நம்ம.. கிரிக்கெட்ல தோத்து போயிட்டா உடனே நம்மாளுக வீட்டுல கல்லுவீசுறோம், படத்துக்கு தீ வைக்கிறோம், ஆனா, நம்ம வோட்டு போட்டு ஜெயிக்கவச்சு சட்டசபைக்கு அனுப்பினவங்க அங்க போயி பெஞ்ச தேய்ச்சுகிட்டு, டேபிளை தட்டிட்டு வெட்டியா திரும்பி வந்திட்டா, அவுங்கள நம்ம எதாவது கேக்கிறமா என்ன? நம்ம உணர்ச்சிவசப்படுறதே இந்த மாதிரி பைசா பெறாத விஷயத்துக்கு மட்டும்தான்..
சரி, அதை விடுங்க, நான் ஏன் பத்து நாளா ஒண்ணுமே எழுதலை? பத்து நாளா பதிவு எழுதற மாதிரி ஒண்ணுமே நடக்கலையா.. இல்லையே...
திருவாசகம், ஒரிஜினல் சிடி வாங்கி, எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல ஆடியோ சிஸ்டத்துல போட்டு, அமைதியான நேரத்துல வீட்டுல எல்லாரும் தூங்கினதுக்கப்புறம், சோபாசெட் கைப்புடியில தலைகாணி வச்சு படுத்துகிட்டே கேட்டாச்சு, அதை பத்தி எழுதியிருக்கலாம்.
அழகியதீயே டைரக்ட் செஞ்ச ராதாமோகன், அந்த படத்துக்கு வசனம் எழுதின விஜி, இவுங்களோட காம்பினேஷன்ல வந்த 'பொன்னியின் செல்வன்' பார்த்தாச்சு, அதுல AMரத்னம் தெலுங்கு தேசக்காரர்ங்கிறத யாரும் மறந்திரக்கூடாதுன்னு 'மாதங்கி - அனுராதாஸ்ரீராம்' காம்பினேஷன்ல ஒரு 'கிக்' பாட்டு போட்டிருக்காங்களே அதை பத்தி கூட எழுதியிருக்கலாம்.
வீட்டு வாசல்ல இருக்கிற வேப்பமரத்துல புதுசா முளைச்சிருக்கிற தேன்கூட்டை, மேல்கிளையில இருக்கிறதால அப்படியே விட்டறலாமா, இல்லை எதுக்கு வீணா வம்பு கலைச்சிரலாமான்னு, எங்க வீட்டுல இன்னும் நடந்துட்டு இருக்கிற பட்டிமன்றத்த பத்தியாவது எழுதியிருக்கலாம்.
லாம்.. லாம்.. லாம்.. ஆனா நான் ஏன் எழுதலை??
உடம்பு கிடம்பு சரியில்லையா, அதெல்லாம் ஒண்ணுமில்லையே நல்ல பாத்திகட்டி அடிச்சுட்டு மலைமாடு மாதிரி தான் திரியறேன், சிஸ்டத்துல எதும் பிரச்சனையான்னா, அதுவும் இல்லை.. அப்புறம் ஏண்டா'?ன்னா..
வேலுநாயக்கர் அவர் பேரன் கிட்ட சொல்ற மாதிரித்தான்.. 'த்தெர்ரியலையேப்பா'..
இந்த மாதிரி விஷயங்களைத்தான் பெரியவங்க 'சில கேள்விகளுக்கு வாழ்க்கையில விடையே கிடையாது'ன்னு தத்துவார்த்தமா சொல்லியிருப்பாங்களோ?? ;-)
யாருங்க அது பின்னால இருந்து 'போடா சோம்பேறி'ன்னு சவுண்ட் குடுக்கறது.. ம்
--
#116
Tuesday, August 9, 2005
தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..
நேத்து திடீர்ன்னு அதை துழாவ வேண்டிய வேலை வந்திருச்சுங்க, அதை துழாவிகிட்டு இருக்கும் போது இன்னொன்னு கையில சிக்குச்சு, 'தளபதி' பட சிடி.. ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது, வாங்கின புதுசுல, அப்போ சென்னையில, என் சிஸ்டத்துல ஒரு 500 ஷோவாது ஓடியிருக்கும் இந்த படம்.. எனக்கு ரொம்ப புடிச்ச படம், ரொம்ப ஸ்டைலான படம். PDAவ துழாவற வேலைய அப்போதைக்கு தள்ளி வச்சுட்டு படம் பார்க்க உக்காந்துட்டேன்..
போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு சேரை பின்னாடி தள்ளிவிட்டுட்டு, 'கிட்டி' கிட்ட 'அடிர்றா.. அடிர்றா பாக்கலாம்'ன்னு டக்குன்னு எந்திரிப்பாரே ரஜினி, அந்த சீனை இப்ப பார்க்கும் போதுகூட, இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன், அப்ப சிலிர்த்த மாதிரியே இப்பவும் சும்மா 'ஜிவ்வு'ன்னு இருக்குதுங்க.. ம்ம். அது ரஜினி... இப்போ அதே ரஜினி, சொர்ணா கூட போர்வைய போர்த்திகிட்டு.. சரி வேண்டாம்.. சொன்னா நம்மாளுக சண்டைக்கு வந்திருவாங்க.. படம் வேற நூறு நாள் ஓடிருச்சு.. எதோ நல்லா இருந்தா சரி..
ஆனா, நான் சொல்ல வந்தது அதை பத்தி இல்லைங்க. அப்போ, படம் வந்த முதல் நாள், 1991 தீபாவளி (இல்ல பொங்கலா?) இங்க பொள்ளாச்சி 'நல்லப்பா'வுல, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள், இன்னொரு பக்கம் கேரளாவுல இருந்து வந்த மம்மூக்கா ரசிகர்ள்ன்னு சும்மா களை கட்டி இருந்துச்சு, (பக்கத்து துரைஸ்'ல நம்மாளு குணா படம்.) படம் ஆரம்பச்சுதல இருந்து ரஜினி, ரஜினி, ரஜினி தான்.. ரஜினி ரசிகர்க சும்மா ரவுண்ட் கட்டி ஆடிட்டிருந்தாங்க.. 'ராக்கம்ம கைய தட்டு'எல்லாம் டீ.டி.எஸ் இல்லாமயே காதுல அதிருன நாள் அது.. பின்னாடி ஒரு சீன் வரும், மமுட்டி கீதா, சார்லி எல்லாரையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போவாரு, அப்போ போலீஸ் வந்து அவுங்க ஆளுகளை எல்லாம் அடிச்சு இழுத்துகிட்டு போகும்.. அப்படியே கோவமா கோயில்ல இருந்து மமுட்டி வெளிய ஓடிவருவாரு, வந்து ஒரு சின்ன திட்டுலயிருந்து அப்படியே எகிறி குதிப்பாரு,, குதிக்கும் போது அப்படியே டக்குன்னு காத்துலயே வேட்டிய மடிச்சு கட்டிக்குவாரு, சாமி.. மம்மூக்கா ரசிகர்கள் விட்ட விசில்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் தியேட்டரே ஆடிபோன சீன் அது. டிபிகல் மம்மூட்டி ஸ்டைல்!!
படம் பார்த்துட்டு வந்து, எங்க வீட்டு மாடிப்படி வளைவுல நானும் என் கூட்டாளி சிவா'னும் ரெண்டு படி மேல இருந்து குதிச்சுகிட்டே லுங்கிய மடிச்சுகட்ட முயற்ச்சி பண்ணினோம், நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணி அப்புறம் தடுமாறி கைப்பிடி க்ரில்ல முட்டிகிட்டு முட்டியில அடிவாங்கினதுக்கப்புறம் தான், 'மூட்டுன'லுங்கியில அப்படி செய்ய முடியாதுங்கிற வரலாற்று உண்மை எங்களுக்கு விளங்குச்சு, அப்புறம் கொஞ்ச நாளைக்கு, எப்பவெல்லாம் வேட்டி கட்டறமோ, அப்பவெல்லாம் அதை ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம். அது ஒரு அழகிய 'வேட்டி' காலம் :-)
நேத்து ராத்திரி கண் முழிச்சு ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி 2.30 மணி வரைக்கும் படம் பார்த்துட்டு, காலையில 7.30 மணி வரைக்கும் தூங்கிதொலைச்சுட்டேன்.. காலையில எங்கய்யன் கூட ஒரு பக்கம் போக வேண்டியிருதுச்சு, நான் குளிச்சு முடிச்சு வர்றதுகுள்ளார, அவர் வண்டி ஏறி ரெடியா இருந்தாரு, சரின்னு அவசரமா கிளம்புனவன், என்னையும் அறியாம, சிட்டவுட் விட்டு இறங்கும் போது, டக்குன்னு ஒரு ஜம்ப் பண்ணி, அப்படியே வேட்டிய மடிச்சு கட்டினேன்..
கார்ல இருந்து எங்கய்யன் அப்படியே வெறுப்பா ஒரு பார்வை பார்த்தாரு.. 'ம்ஹும்.. கழுதை வயசாகுது..!!'..:-(
எனக்கே கொஞ்சம் வெட்கமா தாங்க இருதுச்சு.. . இருந்தாலும் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு கட்டுனமில்ல.. சாயங்காலம் சிவா'னுக்கு ஒரு போன் போட்டு சொல்லனும். ;-).. அவன் இப்போ சென்னைக்கும் பெங்களூருக்கும் பறந்து பறந்து எதோ மிஸைல்க்கு ட்ரைவர் எழுதிட்டு இருக்கான் ..
'Life is not filled with great truimph, but with small smiles'ன்னு சும்மாவா சொன்னாங்க..
--
#115
Saturday, August 6, 2005
ஒரு அழகி இருந்தாள்
கேபிள் இல்லாததால நேத்து வெள்ளிக்கிழமையா வேற போச்சுங்களா, படம் போடுவாங்களே பார்ப்போம்னு DD பக்கம் போனேன், கொஞ்சம் பழைய நினைப்புல, முன்ன இந்த 'சிட்டி' நெட்வொர்க் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி வெள்ளிகிழமை ராத்திரிகள் தான் நமக்கு அமிதாப்பச்சனையே காமிச்சு குடுத்தது, இன்னும் அதே வாசனையில தான் படம் போடறாங்க, அதுவும் அந்த 'வீக்கோ டர்மரிக் க்ரீம்' விளம்பரம் !!!.. அநேகமா அதுல நடிச்ச மாடல் நடிகைகளோட பேரன் பேத்தியெல்லாம் கூட இப்போ நடிக்க வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இன்னும் அவுங்க விளம்பரத்த மாத்த மாட்டாங்க போல.. வீக்கோ டர்மரிக்குக்கும், டாபர் ஹாஜ்மோலாவுக்கும் நடுவால ஒரு படம் போட்டாங்க..
'ஏக் ஹஸீனா தீ'.. (ஒரு அழகி இருந்தாள்.. சரியா?)
ராம்கோபால்வர்மா'வோட பாக்டரி ப்ராடக்ட்.., டைரக்டர் ஸ்ரீராம்ராகவன், சாயிப் அலிகான், ஊர்மிளா நடிச்சது.. நம்ம கூட்டாளிக வேற நல்லாயிருக்குனு நொல்லியிருந்தாங்க, நானும் ரொம்ப நாளா பார்கனும்னு நினைச்சிட்டிருந்த படம், கோயமுத்தூர்ல போட்டு ஒரே வாரத்துல தூக்கிட்டாங்க.
அரதப்பழசான பாதிக்கபட்ட கதாநாயகி பழிவாங்கிற கதை தான், ஆனா, படம் எடுத்த விதமும், சாயிஃப்போட நடிப்பும் தான் டாப்க்ளாஸ். எனக்கு சொன்னவங்க ஊர்மிளா சூப்பரா செஞ்சிருக்கிறதா சொன்னாங்க,, ஆனா எனக்கென்னமோ, ஊர்மிளாவ விட சாயிப் தான் கலக்கியிருக்கிறதா தோனுச்சு, அப்புறம் அந்த போலீஸ் ஆபீசர் வேஷத்துல, சீமா பிஸ்வாஸ், வக்கீலா வர்ற ஆதித்யா, எல்லாருமே அப்படியே செதுக்கிவிட்ட மாதிரி அழகா நடிச்சிருக்காங்க.
எனக்கென்னமோ அந்த ஜெயில் சீனெல்லாம் பார்க்கும் போது 'மகாநதி' ஞாபகம் வந்துச்சுங்க, தப்பு சொல்ல முடியாது, ராம்கோபல்வர்மா படம் எல்லாமே பெரும்பாலும் 'இன்ஸ்பிரேஷன்' படங்களா தான் இருக்கு.. அப்புறம் பின்னனி கலக்கியிருக்கும்னு வேற சொன்னாங்க, ஆனா நம்ம DDயில புள்ளிக்கும் கரகரப்புக்கும் நடுவால பார்த்துட்டு அதை பத்தி என்னத்த சொல்றது..? டீ.வீ.டீ, கிடைச்சா மறுபடியும் ஒரு தடவை பார்க்கனும்.
அப்புறம் படம் பார்த்துட்டு சென்னையில இருக்கிற சகா ஒருத்தன் கிட்ட போன்ல பேசிட்டிருந்தேன்.. 'மிஸ் பண்ணிட்டடா மாப்ள.. ராஜ்'ல 'ராஜகாளியம்மன்' போட்டிருந்தாங்க'ன்னு வருத்தப்பட்டான்.. :-(
--
#114
Thursday, August 4, 2005
மூன்று குணம்..
சரி இப்பொ எதுக்கு அது, நான் சொல்ல வந்தது வேற விஷயம், அதை விட்டுட்டு எப்பப்பாரு நான் இப்படித்தாங்க, வேலியில போறத எடுத்து எங்கயோ விட்டுகற மாதிரி.. விஷயத்துக்கு வர்றேன்..
நேத்து ஆடிபெருக்கு பாருங்க, அதுவும் நாலஞ்சு வருஷம் கழிச்சு இப்பத்தான் ஆடி மழைய எங்க ஊர்காரங்க பார்க்கிறாங்களா, நம்மாளுக எல்லாம் சந்தோஷமா திருமூர்த்திமலை, அமராவதின்னு கிளம்பிட்டாங்க, அதுனால வேலை ஒன்னுமில்லாம வெட்டியா உக்காந்திருந்தேன், ஆளுக இருந்தா மட்டும் நீ என்னத்த கிழிச்சிருப்பேன்னு கேட்டீங்கன்னா.. சாரி, நோ கமெண்ட்ஸ். மேட்ச் பார்க்கலாம்னா, அது வேற எதோ டெஸ்ட் மேட்ச் மாதிரி ரொம்ப சாவுகாசமா விளையாடிட்டிருந்தாங்க, ரொம்ப போர் அடிச்சு பக்கத்துல வழக்கமா போற 'அக்க்ஷயா டீ பார்'க்கு போனேன். எப்பவும் அங்க டீ சாப்பிட போனா யாராவது கூட போவேன், போனமா டீ சாப்டமா வந்தமான்னு இருப்பேன், (ராசா நல்ல பையன், தெரியுமில்ல..) நேத்து பாருங்க, நான் போன நேரம் பார்த்து அங்க கடையிலயும் யாரும் இல்லை, வேலை பார்க்கிற பசங்க எங்கயோ பக்கத்துல எங்கயோ போயிருந்தாங்க போல, ஆறுமுகம் மாஸ்டரே டீ போட்டு சப்ளை பண்ணிகிட்டு இருந்தாரு, அவரும் பாவம் என்னைய மாதிரியே போரடிச்சு இருந்திருப்பாரு போல.. 'என்ன சார் தனியா..?' ஆரம்பச்சாரு.. மழை வேற மறுபடியும் ஆரம்பச்சிருச்சு, கடையிலயும் வேற ஆள் இல்ல.. சரின்னு கொஞ்ச நேரம் 'டாபிக் போட்டு'ட்டிருந்தேன். நமக்கு அதுதான் கை வந்த கலையாச்சே!!.. மழை விவசாயம், அரசியல்ன்னு எதேதோ பேசிட்டிருந்தோம். பேச்சு வாக்குல ஒரு சமாச்சாரம் சொன்னாரு பாருங்க, அதான் அந்த 'மூணு குணம்' சமாச்சாரம்..
" ஒவ்வொரு மனுஷனுக்கும் மூணு குணம் இருக்கும், ஒண்னு, அவன் அடுத்தவங்ககிட்ட தன்னோட குணமா காட்டிக்கிறது, அடுத்து, அவனுக்குன்னு இயல்பா இருக்கிற குணம், அதுபோக முக்கியமானது மூணாவது, அது எதுன்னா, இது தான் தன்னோட இயல்பான குணம்'னு ஒவ்வொரு மனுஷனும் தன்னை பத்தியே (தப்பா) நினைச்சுகிட்டிருக்கிறது.."
தத்துவமா கதை கட்டுரைன்னு எழுதி கிளப்ப வேண்டியா ஆளு.. அக்க்ஷ்யா பார்'ல டீ ஆத்திட்டு இருக்காரு.. வகையே இல்லாம என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பதிவு கிதிவுன்னு எழுதிகிட்டு இருக்கிறோம்..
இதுல ஆயிரம் சண்டை, சச்சரசு, மூடுவிழா, வெங்காயம்...
எல்லாம் நேரம்.. :-(
--
#113
Monday, August 1, 2005
அமைதி..
.. .. 'அமைதியான' மழை..
படத்தை மட்டும் போடாம கூடவே எதாவது கவிதை மாதிரி எழுதலாம்னு முதல்ல தோணுச்சு (ரெண்டு மூனு வரிகூட எழுதினேன்), அப்புறம் எதையாவது கிறுக்குத்தனமா எழுதி, இந்த படம் சொல்ற அமைதியான அழகை கெடுக்க வேண்டாம்னு.. ஒன்னும் எழுதாம விட்டுட்டேன்.. :-)
--
#112
Saturday, July 30, 2005
நன்றி. நன்றி.. நன்றி....
நன்றி. நன்றி.. நன்றி.... தமிழ்வலைப்பூ வாழ் மக்கள் அனைவருக்கும், ராசாபார்வை ரசிககண்மணிகள் அனைவருக்கும் இந்த 'கொங்கு'ராசாவின் மனப்பூர்வமான நன்றிகள்..
இப்ப எதுக்கு இப்படி சும்மா கூவிக்கிட்டு இருக்கேன்னு கேக்கரீங்களா.. சும்மா சத்தம் போட்டு ப்லிம் காட்றதுக்கு நான் என்ன அரசியல்லயா இருக்கேன்.. நான் ஒரு சாதாரண விவசாயி, நான் எதுக்கு வெட்டி விளம்பரம் செய்யறேன்..
(எப்படி ராசா, உனக்கு மட்டும் இவ்ளோ அவையடக்கம்..!!. ச்சே, பின்றடா..!!)
சரி.. விஷயத்துக்கு வாடான்னு நீங்க முனங்கிறது எனக்கும் கேக்குது, ஆனா என்ன செய்யிறது, எப்பவுமே ஒரு விஷயம் சொல்லும்போது அதோட வரலாறு, போகோளம், எல்லாத்தையும் அலசி பார்த்து, இப்படியே எனக்கு பழகிடுச்சுங்க, அதான் பிரச்சனையே.. சரி.. சரீ. விஷயத்துக்கு வந்துட்டேன்
நான் நல்ல பையன்னு யாராவது சொல்லுங்கன்னு நான்
இப்பத்தான் என்னோட போன பதிவுல கேட்டுகிட்டேன், நம்ம துளசி(யக்கா)'லயிருந்து நம்ம நண்பர்கள் எல்லாரும் கமெண்ட்லயே எனக்கு சர்ட்டிபிகேட் குடுக்க தயாரா இருந்தத பார்த்துட்டு எனக்கு பயங்கிற சந்தோஷம்.. அந்த சந்தோஷத்துல மிதந்துட்டு இருக்கும் போதே, இப்பத்தான் இன்னொரு சந்தோஷமான ஒரு செய்தி வந்தது, 'ராசபார்வை - ராசா' ரசிகர்மன்றம் சார்பா 'ராசா நல்ல பையன்'னு பல்லாயிரக்ககணக்கான ரசிகர்கள் சேர்ந்து ஒரு பெரிய பேரணியே நடத்ததியிருக்காங்க..
சும்மா கதை வுடாத ராசா'ங்கரீங்களா, கதையெல்லாம் இல்லீங்க நிஜம், நூறு சதவீசம் அக்மார்க் உண்மை.. சொன்னா நீங்க யாரும் நம்ப மாட்டீங்கன்னு தெரியும், அதுக்குத்தான் பாருங்க.. அந்த பேரணிய போட்டா புடிச்சு வச்சிருக்கேன், நீங்களே ஒரு அமுக்கு அமுக்கி பார்த்துக்கோங்க..
போட்டோ ஃப்ரூப்
பேரணிக்கு வந்து எனக்கு ஆதரவு தெரிவிச்ச அனைத்து ரசிகமகாஜனங்களுக்கும், கொங்கு ராசா'வின் மனமார்ந்த நன்றிகள்..
யாரும் பொறாமைபட வேண்டாம்... சரீங்களா..?? ;-)
--
#111
Monday, July 25, 2005
டார்கெட்
'கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கோமே'ன்னு எங்கம்மா அழுவுறதெல்லாம் ஒரு நிமிஷம் எதோ பாரதிராஜா பட எடிட்டிங் எபட்க்ட்ல வந்து போகுது.. அப்படியே நடு ரோட்டுல வண்டிய நிறுத்திட்டேன். துப்பாக்கிய காட்டிட்டு ஓடி வந்த போலீஸ்காரர் கிட்ட வந்து டக்குனு துப்பாக்கிய திருப்பி மூஞ்சிக்கு நேரா நீட்டி '52 52'ன்னாரு.. என்னடா இது.. இப்படி போறவன நிறுத்தி 52ங்கிறாங்க.. எதும் துப்பாக்கி மாடலா இருக்குமோ, அதை ஏன் நம்ம கிட்ட சொல்றங்க, ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயிண்ட் போனா பேப்பர் வாங்கி குடுங்க, பேனா வாங்கி குடுங்கன்னு சொல்ற மாதிரி, நம்ம கிட்ட எதும் புல்லட் வாங்கிகுடுக்க சொல்றாங்களான்னு குழம்பிபோயி பார்த்தேன்.. ரோட்டோரமா இருந்து ஒரு போலீஸ்காரர் வந்து 'வாங்க.. வாங்க.. வந்து இப்படி ஓரமா போடுங்க வண்டிய'ன்னாரு.. மறுபடியும் நமக்கு குழப்பம்.. 'வாங்க'வா.. நம்மூரு போலீஸ்காரங்க, என்னைக்கு பைக்க நிறுத்தி இப்படி மரியாதையா பேசியிருக்காங்க, எடுத்த உடனே அலப்பறையா இல்ல பேசுவாங்க.. அப்புறம்தான 'சார்'ன்னு குழைவாங்கன்னு யோசிச்சுகிட்டே, பைக்க ஓராங்கட்டுனேன்..
கையில ஸ்கூல பசங்க வச்சிருக்கிற மாதிரி பரிட்ச்சை பேடு ஒன்னு வச்சிருந்த ஒரு போலீஸ்காரர் கிட்ட வந்து..
'எவ்ளோ?'
'என்ன எவ்ளோ?'
'ஸ்பீடு'
'என்ன் ஸ்பீடு?'
'அவர் சொல்லியிருப்பரில்ல'.. துப்பாக்கி வச்சிருந்தவர காட்டுனாரு..
அவர் இன்னொரு பைக்காரர் முன்னாடி துப்பாக்கிய நீட்டிகிட்டு இருந்தாரு.. அப்பத்தான் கவனிச்சேன்.. அது துப்பாக்கியில்லை.. எதோ வேகம் அளக்கிற சமாச்சாரம் போல.. வண்டியில வரவங்க மேல காட்டி வேகத்தை கண்டுபுடிக்கறாங்களாம்.. அதோட பின்பக்கத்துல இருக்கிற ஸ்க்ரீன்ல எவ்ளோ வேகம்னு காட்டும் போல, அதை காட்டித்தான் 52.. 52ன்னு சொல்லியிருக்காங்க போல..
'52ன்னு சொன்னாரு'
'ஓவர் ஸ்பீடுங்க'
'ஸ்பீடெல்லாம் இல்லைங்களே'
'சும்மாவா நிறுத்துனாங்க.. கம்ப்யூட்டர்ல பார்த்துதான் நிறுத்தியிருப்பாங்க.. கண்ணுச்சாமி... சாருக்கு ப்ரிண்ட் குடுக்கலையா??'
'கம்ப்யூட்டரா?'
'அதான், அவர் கையில வச்சிருக்காரே, அதுலயே இப்ப ப்ரிண்ட் வந்திரும்' எதோ தானே கண்டுபுடிச்ச மாதிரி சொன்னாரு..
'இப்ப என்ன செய்யனும்?'
'ஸ்பாட் பைன் சார்.. 300 ருபா, அங்க எஸ்.ஐ கிட்ட போங்க'ன்னு சொல்லிட்டு அடுத்த ஆளுகிட்ட போயிட்டாரு..
'ஓவர் ஸ்பீடா.... அடப்பாவிகளா.. இதுக்கா.. இப்படி டிவைடர் மேல இருந்து குதிச்சு ஓடி வந்து நிறுத்துனீங்க.. நான் கொஞ்சம் அசந்திருந்தா.. மேல விட்டு தூக்கிருப்பனே.. அப்புறம், 'ட்யூட்டியில இருந்த போலீஸ்காரர் மேல் பைக் ஏற்றி கொல்ல முயற்ச்சி'ன்னு காலையில ந்யூஸ் போட்டிருப்பாங்களே.. நல்லவேளை.. ஸ்பீடு இல்லை.. கரெக்ட்டா நிறுத்திட்டேன், அதுக்கே ஓவர் ஸ்பீடுங்கிறான்..
'52 கி.மி ஸ்பீடுல போறதே ஒவரா'ன்னு ஒரு மாதிரி விவேக் மாடுலேஷன்ல புலம்பிட்டே பைக் மேல வச்சு கேஸ் எழுதிட்டு இருந்த எஸ்.ஐ கிட்ட போயி கேட்டேன். 'யெஸ்.. யூ சீ, தேர் ஈஸ் போர்ட்.. ஒன்லி 32 கிமி ஸ்பீடு அளவ்டு'..
நம்மள எதோ நைஜீரியாவுல இருந்து வந்து படிக்கிற ஆளுன்னு நினைச்சுட்டாரோ என்னமோ..
நான் டக்குன்னு
'32ஆ.. ஏங்க, அதெல்லாம் நடக்கிற காரியமா.. பக்காவா டிவைடர் போட்டு 3 லேன் இருக்கு, இதுல 32ல போறதுன்னா.. என்னங்க இது?'
'ரூல்ஸ் இருக்குதுங்க, பார்த்து போகமனுமில்லீங்க.. பீக் டைம் பாருங்க. அப்புறம் நாங்க தான் பதில் சொல்லனும்..@#%#%@..'
அடப்பாவிகளா.. ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அட்வைஸ் மழைய'ன்னு மனசுகுள்ள கருவிகிட்டே..
'சரி, எவ்ளோ பைன்'னு சொல்லுங்க'
'ஸ்பாட் பைன் 300 ரூவா, சார்.. இல்லைன்னா சார்ஜ் ஷீட் வாங்கிட்டு திங்கட்கிழமை கோர்ட்டுல வந்து பார்த்துக்கோங்க'
எல்லாம் நேரம் 120-130ல பறந்திருக்கேன் இதே ரோட்டுல.. இன்னைக்கு '52'க்கு.. டேய் நிதினு.. நான் பாட்டுக்கு திருச்சு ரோட்டுல போயிருப்பேன்.. சைட் அடிக்க ஆசை காட்டி என்னை இந்த ரோட்டுல கூட்டிட்டு வந்து..ம்.. அவனை சொல்லி என்ன செய்யிராது.. நம்ம நேரம் அப்படி.
'இதுக்கு கோர்ட்டுக்கு வேற வராங்க.. ஷீட் எழுதுங்க.. கட்டிறேன்'
'பேர், அட்ரஸ் சொல்லுங்க'
சொன்னேன்..
'நீங்களே இப்படி வேகமா போலகலாமா?' மறுபடியும் அட்வைஸ் மழை..
சார்ஜ்ஷீட் வாங்கிகிட்டு. 300 ரூபாய் எடுத்து குடுத்தேன்..
டக்குன்னு வாங்கி பேண்ட் பாக்கெட்டுல வச்சுகிட்டு பழக்க தோஷத்துல 'சரியா இருக்குமில்ல'ன்னாரு, அடப்பாவிகளா.. சார்ஜ்ஷீட் போட்டு லீகலா வாங்கிற பைன கூட இப்படியா..
பைன் பில்லு எழுதிகிட்டே..'பாருங்க.. அவரெல்லாம் எப்படி டக்குன்னு கட்டிகிட்டு போறாரு.. நீங்க சும்மா நின்னு புலம்பிட்டே இருக்காதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. ஜீப்புல கமிஷன்ர் இருக்காரு.. பைன் கட்டுங்க.. இல்லை சார்ஜ் போடுறேன்.. கோர்ட்டுக்கு வாங்க'ன்னு சொல்லி, பக்கத்துல பாவமா நின்னுகிட்டு இருந்த 'சக- க்ரிமினல்'களோட வயத்தெரிச்சல கிளப்பி விட்டாரு. எல்லாரும் காலேஜ் பசங்க.. அவனவன் ஆளுகள சனிக்கிழமை காந்திபுரத்துல பிஸ்லரி பாட்டில் வாங்கி குடுத்து ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியது.. இப்படி லேட்டாகுதேன்னு கடுப்புல நின்னுட்டிருப்பான், இதுல நம்மள வேற இவர் உதாரணம் காட்டி வைக்கிறாரு. எல்லாபயலும் மனசுக்குள்ள 'இவன் பாட்டுக்கு பைன் கட்டிட்டு போறான்.. இனி நம்மளும் அழுகனும்'ன்னு என் பரம்பரையவே திட்டியிருப்பானுக..
'ஜீப்புல கமிஷனர் இருக்காரா?' சரி ஒரு வார்த்தை பேசுவோம்னு.. போயி அவர் கிட்ட சார்ஜ்ஷீட்டை காட்டி சொன்னேன்.. 'யெஸ், வீ கான் டூ எனிதிங், திஸ் ஈஸ் த ஆக்ட் 183'ன்னு ஒரு பத்து நிமிஷம் சட்ட பாடம் எடுத்தாரு..
'அதெல்லாம் சரிங்க, அதென்ன 32 கிமி லிமிட்?'
'அது பழைய ப்ரிட்டீஷ் முறைங்க.. 20 மைல்ஸ் ஈஸ் த லிமிட்'
'அதெல்லாம் ப்ரிட்டீஷ் காலத்துல சரிங்க.. இப்ப வர்ற வண்டிகளுக்கும், இத்தனை கூட்டத்துக்கும் 20மைல் எல்லாம் ஒத்து வருமா, கொஞ்சம் பார்த்து.. செய்யுங்க சார்'..
'சார்ஜ் எழுதறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கலாம் இல்ல நீங்க'
'அது ஒன்னும் ப்ரச்சனை இல்லைங்க.. நான் பைன் கட்டிட்டேன்.. ஆன ப்யூச்சர்ல கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. ஒரு 50கிமின்னாவது லிமிட் வைங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.. மையமா சிரிச்சாரு.. செய்வாரான்னு தெரியலை.. மனசுக்குள்ள 'போடா வெண்ணை'ன்னு கூட சொல்லியிருக்கலாம்.. எனக்கு தெரியலை.. ஆனா புது sp வந்ததுக்கப்புறம் போலீஸ்காரங்க, எடுத்த உடனேயே மரியாதையா பேசறாங்க..
வரும் போது இன்னொரு போலீஸ்காரர் சொன்னாரு.. 'டார்கெட் சார்.. அதான்'..
இந்த கலெக்க்ஷனுக்கு கூடவா 'டார்கெட்'..
வாழ்க காவல்துறை!. வாழ்க நிதித்துறை!!
பி.கு:
வீட்டுக்கு வந்ததும்,
எங்கய்யன் 'என்னடா கோயமுத்தூர்ல சுகுணா கிட்ட போலீஸ் கூட பேசிட்டிருந்த..'
'பார்த்தீங்களா?'
'ஆமா, நான் ஜென்னி'யில இருந்து வந்துட்டிருந்தேன்'
'போலீஸ் கிட்ட நிக்கிறேன்.. என்ன ஏதுன்னு நின்னு பார்க்கிறதில்லையா நீங்க'
'ஆமா, நீ எங்கயாவது, எச்சு பண்ணிட்டு நிப்ப, நானும் வந்து அங்க நிக்கனுமாக்கும், சல்லுன்னு வ்ந்துட்டிருந்தேன்.. வந்து கேட்டுகலாம்னு அப்படியே வந்துட்டேன்'
'சல்லுன்னு வந்தீங்களா?.. காருக்கு வேற ஸ்பீடு லிமிட்டா..??' அடப்பாவிகளா.. என்னைய மட்டும்தான் நிறுத்துவீங்களா?? இனி 'ஒவர் ஸ்பீடு' '52 கிமி தான்'னு சொன்னா நம்பவா போறாரு..
யாரவது வந்து 'ராசா நல்ல பையன்'ன்னு எங்கய்யனுக்கு சொல்லுங்களேன்.. :-(
--
#110
Thursday, July 21, 2005
அடுத்து??
கிணத்துமேட்டுல வண்டிப்பாதைய பார்த்துட்டு உக்காந்திருக்கேன்,
ரொம்ப நேரமா,
யாருமே அந்த பக்கம் வரவும் இல்லை,
என்னை கவனிக்கவும் இல்லை...
அமைதியா யோசிக்கலாம்..
ஈரமான காத்து,
சுத்தமா, அமைதியா... என் மனசு மாதிரி இல்லாம...
கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்து யோசிக்கனும்...
சில்வண்டு சத்தம் மட்டும் தான் கேக்குது,
இருட்டிருச்சு,
ரொம்ப நேரமா யோசிச்சுட்டே உக்கந்திருக்கேன், எதுக்கோ காத்துட்டு இருக்கேன்.
கழுத்தெல்லாம் ஒரே வலி,
பேசுன வார்த்தைக தலைக்குள்ள பாரமா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டு வீட்டுக்கு போயிடனும்..
எங்கயோ தூரத்துல டி.எம்.எஸ் குரல்,
என்ன பாட்டுன்னு தெரியல,
நடுராத்திரி ஆயிடுச்சு போல,
மழை துளிக்க ஆரம்பிச்சிருக்கு,
இன்னும் உக்காந்திருக்கேன்..
வீட்டுக்கு போயிட்டேன், நழைஞ்சுகிட்டே..
அம்மா கதவை திறந்துவிட்டுட்டு பார்க்கிறாங்க.
அதே பார்வை,
நான் எப்பவாது எதாவது தப்பா செஞ்சாலோ,
இல்லை
ஜாஸ்த்தியா பேசுனாலோ பார்க்கிற பார்வை..
இப்போ,
நான் எதையும் கண்டுக்க மாட்டேன்,
என்ன வேனும்னாலும் சொல்லுங்க,
இல்லை மறுபடியும் சண்டை புடிங்க..
இன்னைக்கு ராத்திரி தெளிவா இருக்கேன்,
உங்கள பார்த்து அமைதியா சிரிக்க முடியும்,
நான் ஜெயிச்சுட்டேன்..
இந்த சண்டை என்னை ஒன்னும் செய்யாது..
எத்தனை தடவை தான் செய்யாத தப்புக்கு போராடறது...
ம்..
ஒரு பிரச்சனை முடிஞ்சுது.. அடுத்தது??
--
#109
Tuesday, July 19, 2005
Thursday, July 14, 2005
பழையபேப்பர்
ஒரு பழைய போட்டோ..
படத்துல இருக்கிற ஆளு யாருன்னு தெரியுதான்னு பார்த்து சொல்லுங்க..
சரியா சொல்றவங்க.. அவுங்களோட பர்ஸ்ல இருந்து காசு எடுத்து, ஒரு சாக்லேட் வாங்கி, பக்கத்துல இருக்கிற குழந்தைக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கோங்க..:-)
ஆள் ஸ்மார்ட்டா இருக்காரு இல்ல.. :-)
எழுத ஒன்னுமில்லைன்னா இப்படித்தான் படம் போட்டே சமாளிக்க வேண்டியிருக்கு..:-(
--
#107
Tuesday, July 12, 2005
எப்படித்தான் சகிச்சுக்கறயோ?
வர்ற பதினோராம் தேதி அவ பிறந்தநாள்..
ரிமைண்டர் போட்டு ராத்திரி 12.00 மணிக்கு மறக்காம முதல் ஆளா போன் பண்ணிடனும்,
ப்ளவர்மார்ட்'ல சொல்லி கலர்கலரா வெறும் ரோஜாப்பூவா வச்சு காலையில ஒரு பொக்கே அனுப்பனும்..
அவளுக்கு புடிச்ச அந்த டார்க்ப்ளூ ஆஃப்-ஸ்லாக்கும், ஐவரி கார்கோ'வயும் பெட்டி போட்டு வாங்கி வைக்கனும்..
ரொம்ப நாளா கூட கோயிலுக்கு வரசொல்லிட்டே இருக்கா, அன்னைக்கு கண்டிப்பா கூட போகனும்..
அன்னைக்கு முழுசும் அவகிட்ட எதுக்கும் கோவிச்சுக்காம இருக்கனும், அவ கோவப்படாத மாதிரி நடந்துக்கனும்..
எல்லாம் சரியா திட்டம் போட்டாச்சு, கலக்கிடனும்..
திட்டம் எல்லாம் ரெண்டு நாளா மனசுல ஓடிகிட்டே இருக்கு,
.
.
.
.
.
.
மூனாவது லோடு இன்னைக்கு அனுப்பனும், அப்பத்தான் அவன்கிட்ட முதல் லோடு பேமண்ட் கேக்கமுடியும்..
எங்கயோ குண்டு வெடிச்சா, இங்க எல்லா ஷேரும் கலங்குது.. டெர்மினலக்கு போயி பார்க்கனும்..
மழையோட மழையா மேக்கால காட்டுல உரம் வச்சு விட்றனும், ஒரு வேலை முடியும்..
.
.
.
.
.
.
.
காலையில ஜாகிங் போயிட்டு வந்து அருகம்புல் டீயோட..
நேத்து செய்ய நினைச்ச வேலை எதுவுமே முழுசா முடிக்கலயே, ச்சே..
யோசிச்சுகிட்டே,
காலையில பேப்பர் புரட்டும் போது தான் கவனிச்சேன்..
இன்னைக்கு தேதி பன்னிரெண்டு..
எப்படித்தான் என்னை சகிச்சிக்கறயோ!!
இனி எப்படி மன்னிப்பு கேக்கிறதுன்னு ஒரு வாரம் திட்டம் போடனும்... :-(
---
#106
Sunday, July 10, 2005
sms siரிப்பு
இந்த தடவை, மறுபடியும் அதே மாதிரி ஒரு பதிவு. படிச்சு பார்த்து சிரிப்பு வந்தா சிரிங்க.. எனக்கு சிரிப்பு வந்துச்சு, உங்களுக்கும் சிரிப்பு வரலைன்னா என்ன கோவிச்சுக்காதீங்க.. :-(
--
குடும்பத்துல பிரச்சனையா??
'மெட்டிஒலி' பாரு
அண்ணன் தம்பிக்குள்ளார பிரச்சனையா??
'ஆனந்தம்' பாரு
புருஷம் பொஞ்சாதிக்குள்ளார பிரச்சனையா??
'கணவருக்காக' பாரு
நீங்க சைட் அடிக்கிற பொண்ணுகூட பிரச்சனையா??
அப்போ அவ தங்கச்சிய பாரு
--
(சிரிப்பு வந்துச்சா??)
'மெட்டிஒலி', 'ஆனந்தம்','கணவருக்காக'.. இதெல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா.. வேண்டாம், கேக்க மாட்டீங்க..
'தமிழர் இருக்குமிடமெல்லாம் தமிழ் சீரியல்களும் இருக்கும்'னு யாரோ 'ஸ்ரீ ஸ்ரீ சீரியலாணந்தா'ன்னு ஒரு மகாகுரு சொல்லியிருக்காராம், ஊருக்குள்ளார சொன்னாங்க..
அப்புறம், இந்த smsக்கும் நான் முன்ன ஒரு நாள் சொன்ன 'கவிதை'(?)க்கும் எதோ விட்டகுறை தொட்டகுறை இருக்கிற மாதிரி தோணுச்சு, ...ஒரு வேளை அதுனால தான் எனக்கு இது புடிச்சிருக்கோ என்னவோ ?
--
#105
Wednesday, July 6, 2005
அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்.
அதுக்கு என்ன செய்யறது?? வாழ பழகிக்க வேண்டியதுதான், குப்பைய பார்த்தா நம்ம பாட்டுக்கு உடனே சங்கடப்பட்டு, அருவருத்துப்போய் அது மேல காறித்துப்பி அந்த இடத்த மறுபடியும் அசிங்கப்படுத்தாம, என்ன நாத்தம்'?ன்னு பொருமலோட சொல்லிட்டு டக்குன்னு காறிதுப்புவாங்க பாருங்க.. இப்படி ஒவ்வொருத்தனு துப்பிதுப்பி தான்டா இத்தன நாத்தம்'ன்னு அப்படியே அந்நியன் ஸ்டைல்ல பாயலாம்னு கூட தொணுது.. கருட புராணம் முழுசா படிச்சுபுட்டு அதை செய்யவோம்', .. எங்க விட்டேன்.. ஆங்!! மறுபடியும் அசிங்கப்படுத்தாம.. ஒதுங்கி போயிர வேண்டியதுதான்.. ஆரம்பத்துல கஷ்டம் தான், ஆனா கொஞ்சம் கொஞ்சமா நாமளும் பழகிடுவோம்.. எப்படின்னா?? இந்த எக்களக்ஸ் தெரியும்ங்களா??
அதாங்க எக்களக்ஸ் மாவீரன்னு முன்ன தூர்தர்ஷன்ல விளம்பரம் வருமே, பூச்சுகொல்லி மருந்து, செடிகளுக்கு அடிக்கிற மருந்துங்க, நீங்க பாட்டுக்கு வயத்துல இருக்கிற பூச்சிக்கெல்லாம், நான் சொன்னேன்னு எக்களக்ஸ் குடிச்சராதீங்க. இதை குடிச்சவனும் ஒருத்தன் இருக்கான், அது வேற கதை.. நம்ம கதைக்கு வருவோம்.. ஆரம்பத்துல எக்களக்ஸ் வந்தப்போ தென்னை மரத்துல வண்டுப்பூச்சிய தடுக்க அதத்தான் ஊத்துவோம், யாருங்க அது வண்டுபூச்சுயோட பயாலஜிக்கல் நேம், ஜியோகரபிகள் ப்ரபர்ட்டியெல்லாம் கேக்கிறது, அதெல்லாம் யாராவது புரபசர கேளுங்க, நான் வெறும் விவசாயி, ச்சே மறுபடியும் ட்ராக் மாறிட்டனா..??
அந்த வண்டுபூச்சிய கொல்றதுக்காக ஒரு போசி எக்களக்ஸ ஒரு பக்கெட் தண்ணியில கலந்து, வாசம் படாம இருக்க நம்மாளுக மூஞ்சியில ஈரலதுண்டு கட்டிகிட்டு மரத்துல ஏறி ஊத்துவாங்க.. அந்த வாசம் பட்டஉடனே, மரத்து மேல இருந்து குண்டு குண்டா வண்டு கீழ விழுகும்.. அதெல்லாம் முன்னே, ப்ளாஷ்பேக்.. இப்பவெல்லாம் ஒரு போசி எக்களக்ஸும் ஒரு பக்கெட் தண்ணியும் கலக்கி வச்சுகிட்டு, காய் போடும் போது கீழ விழுந்த வண்டை எடுத்து அதுக்குள்ளார போட்டா.. சும்மா குற்றாலீசுவரமன் மாதிரி கலக்கலா நீந்தி வெளிய வந்திருது.. அந்தளவுக்கு அதுக்கு எதிர்ப்பு சக்திய அதிகம் செஞ்சு வச்சிருக்கோம்.. (ஆனா, அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு 350ml குடிச்சா, நம்மாளுக வயிறு எரிஞ்சு செத்துபோயிட்டு தான் இருக்காங்க). ஆமா இப்ப எதுக்கு மரவண்டை பத்தி பேசுனோம்!.. நாம காத்துல வர்ற தூசி கிருமிய பத்திதான ஆரம்பிச்சோம்.. அதுல எக்களக்ஸ் எங்க வந்துச்சு.. ம்ம்..
தெரியலையே.. என்னமோ சொல்ல வந்தேன் என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. ஞாபகம் வந்திருச்சு, அந்த எக்களக்ஸோட தீவிரத்த எதிர்த்து வாழ பழகிட்ட மரவண்டு மாதிரி.. குப்பையும், கிருமியையும் சகிச்சுகிட்டு, அது நம்மள ஒன்னும் பண்ண முடியாத மாதிரி வாழ்ந்திடவேண்டியதுதான்.. அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதானா?'ன்னு அம்மாஞ்சி ஹீரோ அடிபட்டு கிடக்கிற தங்கச்சிய நினைச்சு கத்துற மாதிரி இங்க கத்தாதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. காத்துல வர கிருமிய என்ன செய்வீங்க.. நேரடியா மல்லுக்கு நின்னா, நம்மளும் ஒரு கை பார்க்கலாம்.. கையில சிக்குனாலும், சத்தியமா நானில்லைன்னு சொல்றவன என்ன செய்யறது.. விட்ற வேண்டியத்துதான்.. நம்ம ஆளுக பாதிக்க படறாங்களேன்னா?? சரிதான், நம்ம வூட்டுபுள்ளைக முகம் சுழிக்குதேன்னா?? அதுவும் சரிதான். ஆனா, நாலு எடத்துக்கு போயி பழகனும், நாலு விஷயம் தெரிஞ்சுக்கனும்னா, அப்புறம் இப்படித்தான இருக்கு இன்னையதேதிக்கு.. கிருமியே இல்லாத காத்து எங்கயும் இல்ல.. இமய மலை மேல கூட எதோ காத்து மண்டலம் கெட்டுபோயிருக்காம், நிஜம்மாங்க, இந்த வாரம் அவுட்லுக்ல சொல்றாங்க, நம்மூரெல்லாம் எம்மாத்திரம்..
சும்மா குணா மாதிரி 'அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்'ன்னு சொல்லாம,
வாழபழகிக்க வேண்டியதுதான்..(யப்பா, எப்படியோ டைட்டில் வந்திருச்சு) இது பயந்தாங்கொளித்தன்ம்ன்னா, ஆமா பயந்தாங்கொளித்தனம் தான்.. அவனவன் வாழ்க்கையில எது முக்கியமோ, அதுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியதுதான்.. !!, உனக்கு நிம்மதி முக்கியமா, அதுக்கு அடுத்தவன் சந்தோஷமா இருக்கனுமா வேண்டாமா, அதுவும் அவனவன் கையிலதான்.. அவனவன் நினப்புல தான்..
"I think everybody has brokenness. There's no doubt about that. We live in a fallen world. This is not heaven. Everybody has scars. Everybody is hurting somewhere, I guarantee you that. Everyone has a hidden hurt" - RickWarren
சரி.. இப்போ எதுக்கு இத்தன பழமை பேசிட்டுகிடக்கிற?ன்னு கேட்டீங்கன்னா.. என்னத்த சொலறது போங்க.. இந்த கிரகமே வேண்டாம்னு நாம ஒதுங்கி போனாலும், நம்ம போற பக்கம், வர்ற பக்கம் போயி ஆகாத நாயம் பேசறாங்க, டக்குன்னு சட்டைய புடிச்சு உலுக்கினா, சத்தியமா நானில்லைங்கிறாங்க.. அந்த கடுப்புல எதோ புலம்பிட்டேன், அவ்ளவு தான்.. சத்தியமா இவுங்கெல்லாம் (கீழ வரிசையா சுட்டி போட்டிருக்கனே, அவுங்க) இப்படி சொல்றாங்களேன்னு நான் போட்டிக்கெல்லாம் சொல்லலைங்க..
1
2
3
4
5
---
# 104
Monday, July 4, 2005
மழை நேர மாலை
----
ஞாபகமிருக்கிறதா..?
அந்த ஜூலை மாதத்து
மழை நேரத்து மாலை
நான்..
உன்னை கண்டுகொண்டதும்..
என்னை தொலைத்ததும்..
அன்றுதான்..
----
(எங்கயோ, எப்பவோ படிச்ச ஒரு ஆங்கில கவிதையை தழுவி..)
ஒண்ணுமில்லீங்க, வெளிய சாரல் மழை.. அதான்..!! வேற ஒன்னுமில்லீங்க..!! :-)
குறிப்பு: ஈஸ்வர், இந்த படமும் நான் எடுத்தது தான்.
---
#103
Saturday, July 2, 2005
பத்த்த்தாயிரம்ம்ம்...!!
அதோ, இதோன்னு கடைசியில எப்படியோ பத்தாயிரம் பார்வையாளர்கள் வந்தாச்சுங்க. 'ராசபார்வை'க்கு வந்த பத்தாயிரமாவது நண்பரோட விவரங்க இதுதான்..
Domain Name planet.nl ? (Netherlands Map | Flag | Facts)
IP Address 80.60.36.# (RIPE NCC)
Language Dutch nl
Operating System Microsoft WinXP
Browser Internet Explorer 6.0 Mozilla/4.0 (compatible; MSIE 6.0; Windows NT 5.1; SV1)
Monitor Resolution 1024 x 768
Monitor Color Depth 32 bits
Time of Visit Jul 2 2005 3:55:55 pm
Last Page View Jul 2 2005 3:56:13 pm
Visit Length 18 seconds
Page Views 2
Referring URL http://www.thamizman...lblogs/userpanel.php
Visit Entry Page http://raasaa.blogspot.com/
Visit Exit Page http://raasaa.blogspot.com/
Time Zone UTC+1:00 CET - Central European Time
Visitor's Time Jul 2 2005 11:55:55 am
Visit Number 10,000
ஒரு வருஷம்..
100வது பதிவு..
10000 பேர் வருகை.. .. ம்ம்.. என்னவோ போடா ராசா.. எல்லாம் மாயை.. ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னவோ நடக்குது.. மர்மமாய் இருக்குது
யாருங்க அது 'விளக்கு அணையும் போது பிரகாசமா எரியும்'னு அபசகுணமா பேசறது.. :-(
--
#102
வேம்பநாடு ஏரி
Friday, July 1, 2005
அந்த மூன்று விஷயங்கள்.
இபோ பதிவுகள்ல ஒரு personal tag' (தமிழ்ல என்னங்க சொல்றது?)ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. நம்மளயும் இளமுருகு அந்த ஆட்டத்துல புடிச்சு விட்டிருக்காரு, அதுனால நம்ம பங்குக்கு நம்மளும் எழுதியாச்சு..
உங்கள் உருவத்தில் உங்களுக்கு பிடித்த மூன்று: (THREE PHYSICAL THINGS YOU LIKE ABOUT YOURSELF)
இடது கை சுண்டுவிரல் முனையில் இருக்கிற மச்சம்
செல்ஃப் ஷேவ் பண்ணினதும் நான் ரசிக்கிர என் கிருதா
கால்கட்டை விரலை விட நீளம் ஜாஸ்த்திய இருக்கிற அடுத்த கால்விரல்
நீங்கள பயப்படும் விஷயங்கள் மூன்று: (THREE THINGS THAT SCARE YOU)
அறிவுரைகள் :-(
டிஸ்க்கோத்தே
மைனர் செயின்
தினசரி வாழ்க்கையில் உங்களுக்கு மிக முக்கியமான மூன்று: (THREE OF YOUR EVERYDAY ESSENTIALS)
என்னுடைய பெட்-பேங்க் டெபிட் கார்ட்
என் கண்ணாடி
poggo சேனல்
இப்பொழுது அணிந்துகொண்டிருக்கும் மூன்று: (THREE THINGS YOU ARE WEARING RIGHT NOW)
கை வைக்காத oxen பனியன்
கத்திரிப்பூகலர் கட்டம் போட்ட லுங்கி
வெள்ளை ஈரலதுண்டு
உடனடியாக உங்களுக்கு தேவைப்படும் மூன்று: (THREE THINGS YOU WANT TO DO REALLY BADLY RIGHT NOW)
வெளிய நல்ல மழை சூடா மிளகாய் பஜ்ஜி கிடைச்சா பரவாயில்லை
கூடவே ஒரு ரெண்டு சுத்து கையெழுத்து'ம் கிடைச்சா.. ஆஹா..
ஒரு அகலப்பாட்டை இணைப்பு :-(
இறப்பதற்க்கு முன் நீங்கள் செய்ய நினைக்கும் மூன்று: (FEW THINGS I WANT TO DO BEFORE I DIE)
த்ரிஷா கூட ஒரு சீன்ல நடிக்கனும் (குளிக்கிற சீன்ல இல்லீங்க..)
எங்கய்யன் ஆசைப்படுற மாதிரி பொறுப்பான பையனா மாறனும்.
இவன் எப்ப சாவான்னு நாலு பேரு நினைக்க வைக்கனும்
உங்கள் விடுமுறையை நீங்கள் கழிக்க விரும்பும் இடங்கள் மூன்று: (THREE PLACES YOU WANT TO GO ON VACATION)
வேம்பநாடு ஏரி (பேட்டரி வசதி இல்லாத படகுவீட்டில்)
கபினிஆற்றங்கரை நடைபயணம்
அப்புறம்.. முடிஞ்சா.. இந்தியஜனாதிபதி மாளிகை ;-)
உங்களுக்கு பிடித்த குழந்தைகள் பெயர் மூன்று: (THREE KIDS NAMES YOU LIKE)
பப்பிகுட்டி
ஜுஜிம்மா
ராசா
LAST BOOK I READ NUMBER OF BOOKS I OWN
இதெல்லாம் ஏற்க்கனவே பழைய பதிவுல சொன்ன சமாச்சாரம் தான, அதுனால நோ..ர்ரிப்பீட்ட்டேய்!!
3 PEOPLE I WISH TO TAG
அதென்ன மூனு பேரு.. தமிழ்பதிவுகள்ல இந் த தொடர் சமாச்சாரம் இன்னும் ஆரம்பிக்கலையில்ல, அதுனால இதை படிக்கிற அளுக யாருக்கு இது புடிக்குதோ அவுங்க ஆளுக்கொரு நூல்புடிச்சு தொடர்ந்துக்கோங்க..
--
#100
..அட நூறு பதிவாயுடுச்சா??.. ச்சே யாராவது விழா எடுக்கிற ஆசை இருந்தா சொல்லுங்கப்பு (பொற்க்கிழி, பணமுடிப்பு எதுவா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்)
Friday, June 24, 2005
அரசியல்வாதி
அரசியல்வாதியும் அவர் மகனும்
நான் பார்க்கிற பெண்ணை தான் நீ கட்டிக்கனும்..
அதெல்லாம் முடியாது. நான் தான் என் சம்சாரம் யாருங்கிறத முடிவு செய்வேன்..
டேய், நான் பார்த்திருக்கிற பொண்ணு, நம்ம நாட்டுலயே பெரிய கோடீசுவரர் 'ரவி' பொண்ணுடா..
அப்படின்னா.. சரி.. நான் பொண்ண பார்த்துட்டு சொல்றேன்..
அரசியல்வாதியும் கோடீசுவரர் 'ரவி'யும்
சார், உங்க பொண்ண என் பையனுக்கே குடுக்கனும்..
இல்லீங்க.. நான் இப்போதைக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை..
என் பையன், வேர்ல்ட் பேங்க் பிரதிநிதியா இருக்கான்..
அப்போ, நான் வீட்டுல கலந்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்றேன்..
அரசியல்வாதியும் வேர்ல்ட் பேங்க் ஆபீசரும்
என் பையனுக்கு அந்த உலக வங்கி பிரதிநிதி வேலைய குடுப்பீங்களா மாட்டீங்களா..
சார், அதுக்கு ஏற்க்கனவே நிறையா பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட் கிட்ட இருந்தெல்லாம் சிபாரிசு வந்திருக்கு சார்..
என் பையன், நம்ம நாட்டோட பெரிய கோடீசுவரர் 'ரவி'யோட மருகமன் ஆகப்போறான்..
அப்படியா.. அப்ப நான் இத பத்தி மத்த மெம்பர்ஸ மீட் பண்ணிட்டு, கன்பஃர்ம் பண்னிடறேன்..
--
எனக்கு வந்த மடலோட தமிழாக்கம்.. அந்த மடல்ல இந்த அரசியல்வாதி பேரு 'லாலு', எனகேன்னவோ அப்படி ஒருத்தர மட்டும் சொல்ல தோணலை.. அதுனால பொதுவா 'அரசியல்வாதி'
--
#99
Thursday, June 23, 2005
கல்யாணம் - சம்சாரம் - வேலை - சம்பளம்
பொதுவா கல்யாணம் ஆனவங்க அதிகம் சம்பாரிக்கறாங்க, அதுலயும் வீட்டுக்காரம்மா வேலைக்கு எங்கயும் போகாம, வீட்டு வேலைகள பார்த்துகிட்டா, அவுங்க இன்னும் அதிகம் சம்பாரிக்கறாங்கன்னு ஒரு ஆராய்ச்சியில சொல்லியிருக்காங்க..
அனுபவம் உள்ள ஆளுக இதை பத்தி என்னப்பா நினைக்கரீங்க??
சொன்னீங்கன்னா நமக்கும் பிற்காலத்துல உபயோகம் ஆகும்.. :-)
--
#98
Tuesday, June 21, 2005
வருஷமாகிபோச்சுங்க..!
'வணக்கமுங்க..!!! - அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன எழுதறதுன்னு தெரியாம, அதையே புலம்பல்'ன்னு தலைப்பு போட்டு புலம்பி, அதுக்கப்புறம் தமிழ்பதிவுகள் பக்கத்துல நம்ம பேரு வந்ததுக்காக சிவப்பு விளக்கு எரியுது'ன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கப்புறம் பைக்ல இருது கீழ விழுந்து கைய உடைச்சுகிட்டத ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!'ன்னு எழுதி, அதை படிச்சு நல்லா தமாசா எழுதறீங்க ராசா, வலைப்பூ பக்கம் வாங்கன்னு மதி கூப்பிட்டு, அங்க நம்மள கடவுள் என்னும் முதலாளி கொடுத்த தொழிலாளி 'ன்னு அறிமுகப்படுத்தி, வலைப்பூவ நம்ம எழுத்தால ஒரு வாரம் சீரழிச்சுட்டு வந்து, சும்மா வெட்டியா எழுதறமேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்!!ன்னு தலைப்பு போட்டு நான் எழுதின கவிதைய போட்டு, சந்தோஷப்பட்டு, அப்புறம் நமக்கு வலைப்பூவில அறிமுகமான சத்யராஜ்குமார் ஊருக்கு வந்தப்போ என்ன கூப்பிட்டு பேசினத ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!ன்னு எழுதி, அப்படியே ஜாலியா இருந்தப்போ, இந்த காஞ்சி பிரச்சனை வந்து, நான் சும்மா இருக்கமாட்டாம அந்த ஒரு கேள்வின்னு ஒரு பதிவு போட்டு, அதுக்கு பின்னூட்டம் மட்டுமில்லை, மொத்தம் 6 தனிமடல் வந்துச்சு, நல்லா அழகான தமிழ் வார்த்தையில திட்டி, அப்புறம் அந்த பதிவை பத்தி மரத்தடியில விமர்சனம் ஆரம்பிச்சு, அப்புறம் அதுக்காக நான் ஒரு பதில் பதிவு போட்டு விளக்கி, கொஞ்சம் கடுப்பாகி, அந்த சமாச்சாரத்தையெல்லாம் விட்டுபுட்டு கொஞ்சம் கலகலப்பா, கவர்ச்சியா எதாவது போடுவோம்னு, ஒரு மும்பாய்ல வளர்ந்துட்டு இருக்கிற , ஒரு கோயமுத்தூர் தமிழ் பொண்னு, அவளோட வார கடைசியல என்னவெல்லாம் செஞ்சான்னு அவ பதிவுல போட்டிருந்தத நான் மும்பாய் டயரி'ன்னு இங்க போட, ரெண்டே நாள்ல எனக்கு மறுபடி ஒரு மடல், இங்க்லீஸ்ல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு, தமிழ் பொண்ணாச்சே, யாரோ அவளோட உறவுக்காரங்க, என்மூலமா அவளோட பதிவை பார்த்துட்டு, அவளை கண்டிக்க, எனக்கு மெயில்ல வந்தது சனி, (இப்போ அந்த பதிவையே காணோம்.. பாவம் :-( ), அப்புறம் தமிழ்மணம் வந்து, அப்புறம் கொஞ்ச நாள்ல நம்ம இலக்கிய ஆசை கொஞ்சம் ரொம்பவே நம்மள நோண்டிவிட சரி சிறுகதை எதாவது எழுதுவோம்னு வென்னிலா கேக் எழுதி, அதுவேற நல்லாயிருக்குன்னு நாலு பேரு சொல்லி, இப்பொ அடுத்தது எழுதலாமான்னு ஒரு யோசனை இருக்கு, நடுவால கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியானதுல, சும்மா அதையும் இதையும் எழுதி பதிவ ஓட்டிட்டு, கடைசியா நிஜமா..??ன்னு 17ம் தேதி எழுதிட்டு போனது, இன்னைக்கு வந்து பார்த்தா.. அப்பு 19ம் தேதியோட நான் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிருக்கு..
நான் முன்னமே வலைப்பூவில சொன்ன மாதிரி உருப்படியா எதும் எழுதனும்னு ஆசைபட்டு வரலைங்க, சும்மா பதிவுகள் படிக்க வந்த ஆளு தான் நான், சரி, பள்ளிக்கூடத்தோட தமிழ் எழுதறதுக்கு ஜூட் விட்டுடமே, சும்மா ஒரு பதிவுன்னு வச்சு எதாசது எழுதுவோம்னு விளையாட்ட ஆரம்பிச்சது.. இன்னைக்கு ஒரு வருஷம் ஆகிபோச்சு, இன்னமும் ஆரம்பிச்சப்போ என்ன எழுதறதுன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு பாருங்க, அந்த குழப்பம் அப்படியே இருக்குதுங்க.
இவனெல்லாம் பதிவு வச்சுகிட்டு, நம்மள தொல்லை பண்றானே, இதுல ஒரு வருஷம் ஆச்சுன்னு சந்தோஷம் வேற படுறானேன்னு, உங்களுக்கு என் மேல எதும் கோவம் வந்தாக்க.. நான் தமிழ்பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்க காரணமான ஐகாரஸ்பிரகாஷ், காசி , கே.வி.ராஜா, பி.கே.எஸ் என் பதிவுல முதல் முதலா பின்னூட்டம் குடுத்த மதி, 'மழை'ஷ்ரேயா, இன்னும் யாருனே தெரியாத ஆதித்யா, இவுங்களயெல்லாம் திட்டிக்கோங்க.
--
#97
Friday, June 17, 2005
நிஜமா..??
ஏற்கனவே பாதி மக்களுக்கு சன் நியூஸ் தான் கதி, இனி பேப்பரும்..
scv'n கேபிள் நெட்வொர்க் துணையோட ஏற்க்கனவே எலக்ட்ரானிக் மீடியாவ கையகபடுத்தியாச்சு, இனி ப்ரிண்ட் மீடியாவுமா??
யாராவது உருப்படியா ஒரு போட்டியாளர் வாங்கப்பா.. இல்லாட்டி கூடிய சீக்கிரம் 'Tommorow never dies'ல வந்த மாதிரி கூட ஆகலாம்.. :-)
--
#96
Tuesday, June 14, 2005
ஆள் கூட்டத்தில தனியே :-)
ஊரு உலகத்துல பதிவு வச்சிருககிறவங்க எல்லாரும் ஆளாளுக்கு அஞ்சு பேரை கட்டி இழுத்து book meme வெளையாட்டு விளையாடி ஓஞ்சுட்டாங்க.
நம்மள யாரும் அந்த விளையாட்டுக்கு கூப்பிடலை, :-(, அதுக்காக..., நம்ம சும்மா விட்டுற முடியுமா என்ன, சொல்லுங்க?
நம்ம என்னைக்கு கூப்பிட்டு ஒரு பக்கம் போனோம், நம்மளா போயி 'நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன்'ன்னு நிக்கிற ஆளு தான, அதுனால என் சார்பா என்னோட 'பொஸ்தக வாசிப்பு புலமை'ய நானும் ஊரு உலகத்துக்கு சொல்லிடலாம்னு முடிவு செஞ்சுட்டனுங்க.
(வேற வழி, பதிவுன்னு ஒன்னு வச்சுகிட்டு, அப்புறம் அதுல எதாவது உருப்படியா(..?) போடனுமில்ல, எத்தன நாளைக்கு தான் சும்மா வெறும் படமா போட்டு தள்ளுறது..?)
ஆகவே மகாஜனங்களே, இதோ உங்கள் பார்வைக்கு என்னுடைய 'புஸ்தக மீமீ'
---
என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை
இன்றைய நிலவரம் சரியா 46.
(எப்படியும் மாசம் ஒரு தடவை கோவை டவுன்ஹால் 'செல்வி' - பழையபுஸ்தககடைக்கும் நமக்கும் குடுக்கல் வாங்கல் இருக்கும்)
கடைசியாக வாங்கிய புத்தகம்
'புதுசு' :
மாலனின் சிறுகதை தொகுப்பு (எழில் செய்த சிபாரிசு)
காடு - ஜெயமோகன் (படிக்கலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையா இருக்கு)
'பழசு' :(செல்வி கடை உபயம்)
The Forerunner - Kahlil Gibran (மீனாக்ஸோட பதிவுகள்ல தான் இவர் நமக்கு அறிமுகமே)
வாசித்து கொண்டிருக்கும் புத்தகம்
காக்டெயில்
The Alchemy of Desire (இந்த ரெண்டையும் வச்சு என்னை பத்தி தப்பான அபிப்பராயத்துக்கு வந்துராதீங்க..:-( , எத்தேசயா நடந்த விஷயம் அது)
இந்த வார ஆனந்தவிகடன்
இந்த வார அவுட்லுக்
புதுசா நம்ம வண்டியில மாட்டுன பயோனீர் DEH-P6700MP சிஸ்டத்தோட யூசர் மேனுவல் (ஒன்னும் புரியவே மாட்டேங்குது..!)
கடைசியாக படித்து முடித்த புத்தகம்
ஜனகனமன - மாலன்
Glaucoma பத்தி அரவிந்த் ஹாஸ்பிடல்ல குடுத்த 6 பக்க 'துண்டு' பிரசுரம்
மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள்
என் செல்ல Rxன் RCபுக் (என் சுய சம்பாத்தியத்துல என் பேருல நான் ஆசைய வாங்கினது). என் பேங்க பாஸ்புக், இது ரெண்டும் தான் இதுல டாப் 1,2'ல வர வேண்டியது, ஆனா உங்க கோவத்துக்கு ஆளாக வேண்டாம்ங்கிறதுக்காக அதை விட்டுட்டு என் லிஸ்டை சொல்றேன்.
1.வாஷிங்டனில் திருமணம்
(அனேகமா டபுள் செஞ்சுரி அடிச்சிருப்பேன், அத்தனை தடவை படிச்சாலும் மறுபடியும் படிக்க சொல்லுது)
2.இரும்புக்குதிரைகள்
(twinkle, gokulam, ராணிகாமிக்ஸ்'ல இருந்து தடாலடியா 90ல இதுல இறங்கினேன். அதுக்கப்புறம் தான் ராஜேஷ்குமார், சுபா, பட்டுகோட்டை பக்கமெல்லாம் கூட போனேன்.. 2000க்கு அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்)
2.Yusuf Khan- Rebel Commander
(சேப்பாக்கத்துல சாயித் அன்வர் 194 அடிச்ச அன்னைக்கு திருவெல்லிகேணி ரோட்டுகடையில வாங்கின புஸ்தகம், ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வரை இருந்துச்சு, இப்போ எங்க வச்சேன்னு தெரியாம தேடிட்டு இருக்கேன், அதுல கிளார்க், யுசுப்கான், அவுங்க மேல்/கீழ் அதிகாரிகளுக்கு நடுவே எழுதிகிட்ட கடிதங்கள்... ம்ம்.. எப்படியாவது கண்டு புடிக்கனும்.. எடுத்து வச்சுகிட்டா 'மருதநாயகம்' வரும் போது உபயோகமா இருக்கும்)
3.Doctors - Erichsegal
(வேற ஒரு 'விஷயத்து'க்காக, சும்மா பிலிம் காட்ட வாங்கின புஸ்தகம்,..;-) , இன்னைக்கு வரைக்கும் பேவரிட் லிஸ்ட்'ல இருக்கு)
4.Kane & Abel - Jeffrey
(நிறைய பேருக்கு புடிச்ச புஸ்தகம், எனக்கும் புடிச்சிருக்கு, எங்கய்யனுக்கும்..!)
6.பொன்னியின்செல்வன்
( எனக்கென்னவோ இதைவிட 'பார்த்திபன் கனவு' ரொம்ப புடிக்கும்னாலும், ஹிஸ்ட்ரி மேடம் மனசு வருத்தப்படுமேன்னு இதை இங்க ஆறாவதா சேர்த்திருக்கேன்.. ஹிஸ்ட்ரிமேடம் - எங்கம்மா!!)
புடிக்காத புத்தகங்கள் (இது நம்ம சொந்த சரக்கு)
சுய முன்னேற்றம் பத்தின புத்தகங்கள். நமக்கும் இந்த மாதிரி புத்தகங்க ரொம்பவுமே அலர்ஜிங்க..
எல்லாரும் பெருமையா பேசி, நீ இன்னும் படிக்கலையா'ன்னு கொஞ்சம் கேவலமா கேட்டதுனால தான் 'you can win - shivkera' படிச்சேன்னா பாருங்களேன்..
(ஒரு வேளை நமக்கு புடிக்காத 'முன்னேற்றம்' பத்தி இருக்கிறதுனாலயோ என்னவோ ;-) )
கடைசியா ஒரு அஞ்சு பேர இதுல இழுத்து விடனுமாம்.... யாரு விட்டு போயிருக்காங்க கூப்பிட.. போங்கப்பா..
--
அப்பா.. இப்பத்தான் நிம்மதி.. !!
--
#95
--
அப்டேட்:
(சற்று முன் வந்த நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...)
அஞ்சு நாள் முன்னாடியே கோபி நம்மள இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டிருக்காரு, அதை கவனிக்காம யாரும் கூப்பிடலைன்னு புலம்பியிருக்கேன்.. .. ச்சே.. ஒரே பப்பி ஷேம்மா இருக்குதுங்க.. :-(
கலக்கல் படங்கள்
உன் பார்வை போலே என் பார்வை இல்லை.. :-)
(என்ன எழுதறதுன்னு தெரியலைன்னா இப்படித்தான், சும்மா எதாவது படத்தை போட்டு தள்ளுறது...விளையாட்டா போட்ட படம்ங்க, உடனே யாரும் என்னப்பா 'ஜாஸ்தியாயிடுச்சா'ன்னு கேட்டுறாதீங்க..)
--
#94
Monday, June 13, 2005
smsல் ஒரு தமிழ் கவிதை
---
தமிழ் கவிதை # 3
ஜானி.. ஜானி..
இன்னா நைனா..
சீனி துன்றயா..??
இல்ல நைனா..
டபாய்க்கரியா..??
இல்ல நைனா...
வாய தொற..
ஹா..ஹா...
---
தமிழ வளர்க்கராங்களாம்.. :-)
சின்ன வயசுல படிச்ச மாதிரி ஜானி ஜானி எஸ் பாப்பா'ன்னு அதே ரிதம்ல படிச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சேன் பாருங்க், சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிடாங்க. சும்மாவே நான் எப்ப போனாலும் அங்க ஒரு மாதிரியாதான் பார்பாங்க, இதுல தனியா உக்காந்து சிரிச்சுகிட்டு இருந்தா.. :-(
#3 தான் எனக்கு வந்தது, 1,2ம் என்ன மாதிரி கவிதைன்னு தெரியலைங்க..
எப்படி இப்படி பொறுமையா உக்காந்து டைப் பண்ணி, அதுவும் தங்க்லீஷ்'ல, அனுப்பறாங்கன்னே புரியல.. நமக்கு வரும் போது forwarded msgஆ தான் வருது, ஆனா யாரோ ஒருத்தர் டைப் பண்ணியிருக்கனுமில்லை..
--
#93
இறைவா
அப்பா சாமீ... ரெண்டு நாளா நான் பட்ட கஷ்டம்..
"இறைவா!! எனனை ஏன்தான் இந்த மாதிரி கழிசடை பசங்க கூடவே கூட்டு சேர்க்கரயோ.."
---
#92
Wednesday, June 8, 2005
பழைய பேப்பர்
இந்த பழைய பேப்பர் படிக்கிறதுங்கிறது, எப்பவுமே கொஞ்சம் சுவாரசியமான சமாச்சாரம்ங்க, இந்த பஜ்ஜி கட்டி குடுக்கிற போன வாரத்து பேப்பரை விட, ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு பேப்பரோ இல்லை வாராந்திரியோ கிடைச்சதுனா நான் விடமாட்டனுங்க, எடுத்து அட்டை டூ அட்டை படிச்சிருவேன். இன்னைக்கு தேதிக்கு வர சென்சேஷன் விஷயங்கள விட அது ரொம்ப சுவாரசியமா இருக்கும், இந்த படத்தோட கதை இப்படி, இவன் இவகூட கல்யாணம் பண்ணிக்கபோறான், இவரு இந்த தேர்தல்ல கட்சி மாற போறாரு, அப்படி இப்படின்னு எத்தனை கதைய நம்ம ரிப்போர்ட்டர்க சூட குடுத்திருப்பாங்க, அந்த சூடெல்லாம் ஆறி, வீனாபோனதுக்கப்புறம் அதை எடுத்து பார்த்தா செம காமெடியா இருக்கும்ங்க. சில நேரம் ரொம்பவும் டச்சிங்கான விஷயம் கூட கிடைக்கும். நம்ம வீட்டுகள்ல சாதரணமா இந்த மாதிரியெல்லாம் கிடைக்காது, அதுதான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இங்க்லீஸ் பேப்பர்க்கு ஒரு ரேட், தமிழ் பேப்பர்க்கு ஒரு ரேட்டுன்னு பழைய பேப்பர்காரனுக்கு போட்டு எதாவது ப்ளாஸ்டிக் குடம், எவர்சில்வர் கரண்டின்னு வாங்கி வச்சிருவாங்களே, ஒரு வேளை லைப்ரரியில கிடைக்கும், நாம அந்த ஏரியா பக்கமே போறாதில்லைங்க, அதுனால அந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் அப்பப்போ எப்படியாவது பழையபேப்பர் ஒன்னு நம்ம கண்ணுல சிக்கிரும்.
திடீர்னு எப்பவோ நம்ம வீட்டு விஷேசத்துக்கு கிப்ட்'டா வந்து, நாம உபயோகபடுத்தாம (ஒருவேளை அம்மாவுக்கு ஆகாத நங்கை குடுத்ததா இருக்கும்) அட்டாலியில அடுக்கி வச்ச எவர்சில்வர் பாத்திரத்துக்குள்ள 'எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்'ன்னு ஹெட்லைனோட ஒரு பேப்பர் கிடைக்கும். எடுத்து குப்பையில போடறதுக்கு முன்னாடி ஒரு வரி விடாம அதை படிச்சிருவோம், அவ்ளோ சுவாரசியமா இருக்கும்.
அப்படித்தான் ஒரு நாள் எங்க அத்தை வீட்டு அட்டாலிய சுத்தம் பண்றப்போ, அதுவரைக்கும் சும்மா twinkle, gokulam அதை விட்டா ராணிகாமிக்ஸ், தினமணி குழந்தைகள் மலர், குமுதத்துல ஆறு வித்தியாசம், விகடன்ல ஜோக்குன்னு பார்த்திட்டிருந்தவன் முதல் முதலா பாலகுமாரன படிச்சேன்.. (இரும்புகுதிரைகள்). அந்த புக்கை எங்க அத்தை எப்பவோ எங்கயோ ட்ரெயின்ல வாங்கும் போது வாங்கி, படிக்காமயே அட்டாலியல போட்டிருந்தாங்க, நம்ம வூட்டாளுக புஸ்தகம் வாங்கினதே பெரிசு, அதை படிக்கலைங்கிறதுக்காக ஒன்னுஞ்சொல்ல முடியாதுங்க.
என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. பழைய பேப்பர் படிக்கிறது பத்தி சொல்லிடிருந்தேன்.. என்னடா திடீர்ன்னு பழைய பேப்பர் தேடுற கழுதை (கழுதை.. அவ்ளோதான் கழுதைபுலியெல்லாம் கிடையாது ஆமாம்..) மாதிரி ஆயிட்டேன்னு கேக்கரீங்களா.. அது எல்லாம் கீழ போட்டிருக்கனே அந்த படம் நமக்கு மெயில் வந்ததுனால வந்த வினை.
படம் நிஜமானதா இல்லை எதாது போட்டொஷாப் கில்லாடியோட வேலையான்னு தெரியலை (காஞ்சிபிலிம்ஸ் மாதிரி கில்லாடிக யாராவது பார்த்து சொன்னா தேவலை)
நன்றி : ஒடையகுளம் செந்தான்
--
#91
Tuesday, June 7, 2005
கழுதைப்புலி - சில நினைவுக்குறிப்புகள்
கழுதைப்புலியில மூனு வகை இருக்குதுங்க, striped, brown and spotted, இதுல நம்மூர்ல, அதாவது இந்தியாவுல இருக்கிறாது striped வகைமட்டும்தான். எப்பாவுமே தனியாவோ, சிலநேரங்கள்ல ஜோடியா திரியும், ஆனா கூட்டமா இருக்கிறது ரொம்ப அபூர்வம்ன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல நிறையா பேரு கழுதைப்புலியயும் செந்நாய்'யும் குழப்பிக்கறாங்க, செந்நாய் எப்பவும் கூட்டமா திரியும், ஆனா கழுதைப்புலி அப்படிகிடையாது. நல்லா வளர்ந்த ஒரு கழுதைபுலி ஒத்தையா ஒரு புலியை அடிச்சு சாப்பிடுற வலுவோட இருக்கும். மத்த மிருகங்க சாப்பிடாம விட்டுடர எலும்பு மாதிரியான சமாச்சாரங்கள் கூட கழுதைபுலி ரொம்ப சாதாரணமா சாப்பிட்டு ஏப்பம் விட்டுடும். நம்மாளுக சொல்லுவாங்களே 'கல்லை தின்னாலும் ஜீரணமாகிற வயசு'ன்னு, அந்த மாதிரி. ஆனா என்னதான் இவ்ளோ பயங்கிறமா சொன்னாலும், ஒரு கழுதைப்புலியோட முக்கியமான உணவு என்னன்னு பார்த்தீங்கன்னா, காட்டுல இருக்கிற பூச்சிக, இந்த காட்டு எலி, முயல், புதர்ல கிடைக்கிற பறவைகளோட முட்டை.. சிலநேரங்கள்ல பழம் காய்கறின்னுகூட இருக்கும்.
பெரும்பாலும், நம்ம கரும்புதோட்டத்துல எல்லாம் திரியுமே குள்ளநரி, அந்த மாதிரி புதர்லயும், வங்குகள்லயும் தான் இருக்கும்.
மேல சொன்ன கழுதைப்புலி சமாச்சாரம், போன வருஷம் (வீரப்பன் சாவுக்கு ஒரு மாசம் முன்னாடி) பந்திப்பூர் காட்டுப்பக்கமா ஒரு வாரம் நம்ம கூட்டாளிக கூட ட்ரெக்கிங் போயிருந்தேன், அப்பொ அங்க ரேஞ்சர் ஆபீஸ்ல கைட்' வேலை பார்க்கிற 'மாரிசாமி'ங்கிற ('ச்' கிடையாது) ஆளு நமக்கு சொன்னதுங்க. என்னவோ திடீர்ன்னு இப்போ ஞாபகம் வந்துச்சு. இதுல முக்கியமான சமாச்சாரம் என்னன்னா, இவ்வளவு விஷயம் கழுதைப்புலிய பத்தி சொன்னாரே ஒழிய கடைசிவரைக்கும் மாரிசாமி மூனு நாள் காட்டுல சுத்தி ஒரு தடவை கூட அதை கண்ணுல காட்டல..அப்புறம் வந்து மிருககாட்சிசாலையில தான் பார்த்தோம். (ஒரு வேளை நம்மள பார்த்து பயந்துருச்சோ என்னமோ?)
பி.கு. :
இந்த பதிவுக்கும் தற்போது தமிழ்வலைப்பதிவுகள்ல பரவலா எல்லாரும் அலசிட்டு இருக்கிற 'கழுதைப்புலி' சமாச்சாரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை
--
# 90
Monday, June 6, 2005
மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்
நான் போகும் போது கூட்டமெல்லாம் ஆரம்பிச்சிருந்தது. வெளிய நமக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் அவரோட பட்டாளத்தோட நின்னுட்டிருந்தாரு. அப்பவே எனக்கு உரைச்சிருக்கனும், நான் கேனத்தனமா அவருக்கு கைய காட்டிட்டு, அதுக்கப்புறமும் உள்ள போனேன் பாருங்க, என்னை சொல்லனும்.
கரெக்டா நான் உள்ள போகவும், உள்ள இருந்து 'சமஸ்கிருதத்துல பேசுடா நாயே, ஏண்டா தமிழ்ல பேசுற.. ங்ஒ... .ஆ..ஊ..'ன்னு காதுல விழுந்தது, கூட வந்த புள்ளை நம்மள ஒரு மாதிரி பார்க்குது, எனக்குகூட எங்காவது திடீர்ன்னு முனிசிபால்டி கவுன்சிலர் கூட்டம் நடக்குதா?ன்னு ஒரு சந்தேகம் ஆகிபோச்சு, என்னா ஏற்க்கனவே சிலதடவை அங்க போயி இந்த மாதிரி அனுபவம் நமக்கு நிறையா இருக்கு.
அப்புறம் வெளிய இருந்து போலீஸ் உள்ள வந்து, எல்லாரையும் புடிச்சு வெளிய தள்ளி.. ஒரு பெரிய தமாசாகி.. அடப்போங்கப்பா, இவுங்க எல்லாம் சேர்ந்து வளர்த்துவிடாட்டி, தமிழ் வளராதா என்ன??. நம்மூருல ஒரு இருவது வருஷம் முன்னாடி எழுதபடிக்க தெரிஞ்ச ஆளுகளே ரொம்பவும் கம்மி, அப்பவெல்லாம் இலக்கியம் படிச்சு, இலக்கியம் வளார்த்து(!) தான் தமிழ் வளர்ந்துச்சா என்ன.. அவனவன் அவனவனுது பார்த்துட்டு இருந்தாலே எல்லாம் ஒழுங்கா இருக்கும். ரெண்டு மூனு பேருகிட்ட வெளிய வந்து பேச்சு குடுத்து பார்த்தேன், எனக்கென்னமோ அங்க ரகளை பண்னின ஆளுக நிறையா பேருக்கு ஜெயகாந்தன் என்ன பேசுனாருன்னே தெரியாதுன்னு தோனுது..
அடப்போங்கப்பா எனக்கு ஆயிரம் ஜோலி இருக்குது, அதை விட்டுட்டு..
சரி வந்தது வந்துட்டோம் ஜெயகாந்தன் பேசுறத கேட்டுட்டு போலாம்னு பார்த்தேன், ஆனா கூட வந்த ஆளு முறைச்ச முறைப்புல வேண்டாம்னு வந்துட்டனுங்க. வெளிய படியெறங்கும் போது எதோ 'மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள், 'ன்னு சத்தம் கேட்டுது, ஜெயகாந்தன்'தானாம் அது, காலையில பேப்பர்ல போட்டிருந்தாங்க. நானும் அதையே தான் திரும்பி வர்ற வழியெல்லாம் சொல்லிட்டு வந்தேன், பாவம் கான்வெண்ட்ல படிக்கிற புள்ளை,ஏதோ நம்மளையெல்லம் இது வரைக்கு படிச்ச ஆளுகன்னு ஒரு மரியாதையா பர்த்துட்டு இருந்துச்சு.. இனிமேல் எப்படின்னு தெரியல.. எனக்கு வேணும்..
நமக்கு முன்னாடியே பத்ரி இதை பத்ரி எழுதிட்டாரு :-(
--
#89
Thursday, June 2, 2005
இப்பத்தான் நிம்மதி
பதினஞ்சு நாளா இணையத்துல இணையவே இல்லைங்க, மெயில் பாக்காம, தமிழ்மணம் பக்கம் வராம... கொஞ்சம் கஷ்டமான சமாச்சரம் தான் போங்க.. என்னவோ பொறந்ததுலயிருந்து இணையத்துலயே வாழுற மாதிரி சலிச்சுக்கிறேன்னு நினைக்கரீங்களா.. அப்படியெல்லாம் ரொம்ப பெரிய சொந்தம் இல்லைன்னாலும், ஆறு வருஷமா எதுக்கெடுத்தாலும் கம்புயூட்டர், நெட்'டுன்னே இருந்துட்டு, திடீர்ன்னு இந்த மாதிரி தொடர்ச்சியா பதினஞ்சு நாள் (நடுவால, ஒரு நாள் ஒரு கால் மணி நேரம் மட்டும் விதிவிலக்கு) இணையபக்கமே வராம இருக்கிறது இப்ப தானுங்க.. இன்னைக்கு காலையில வீட்டுக்குள்ள வந்ததும், எங்கய்யன் 'முதல்ல பல்லு கில்லு தேய்ச்சு, மூஞ்சிய கழுவிட்டு வந்து உக்காருடா'ன்னு சொல்லியியும், நான், 'ஆன் பண்ணி விட்டுட்டு போயி விளக்கிகறனுங்க'ன்னுட்டு நேரா கம்ப்யூட்டர் பக்கம் தான் போனேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து நம்ம டயலப்ப தட்டி ப்ரவுசர்ல 'யாஹூ'வ பார்த்ததும் தான் ஒரு நிம்மதி. அதென்னமோ இப்பவெல்லாம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது இணையம் பக்கம் வராட்டியோ, இல்ல நம்ம செல்'ல கவரேஜு இல்லாட்டியோ, என்னமோ ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ் ஆகிபோகுதுங்க..
ஒரு ரெண்டு நாள் விட்டாலே நம்ம தமிழ்மணத்துல எக்கச்சக்கமா ஓடியிருக்கும், இப்போ பதினஞ்சு நாள்!!.. எல்லாம் பொறுமையா உக்காந்து படிக்கனும்..
படிச்சுட்டு அப்புறம் வந்து வச்சுக்கிறேன் எல்லாரயும்..
--
# 88
Wednesday, May 18, 2005
கனா கண்டேன்.. :-(
ஏற்க்கனவே இந்த வாரக்கடைசிக்காக ரெண்டு நாள் ஆழப்புழாவுல படகுவீட்டுல மிதந்துட்டே அவுங்க ஊரு கலயங்கள்ல சுத்தி வந்ததுலயே கொஞ்சம் மனசு ஒரு மாதிரித்தான் இருந்துச்சுங்க, அதே பாதிப்புல, ஊருக்குள்ள கனாகணடேன் பட போஸ்ட்ர்ல நம்ம கோபிகாவோட தாவாக்கொட்டை கடிய பார்த்ததும் டக்குன்னு நேத்து ராத்திரியாட்டம் போயிடரதுன்னு முடிவு செஞ்சு போயிட்டு வந்தாச்சுங்க |
சரி காமிராக்காரர் KV ஆனந்த் டைரக்டரா அவதாரம் எடுத்திருக்கிற படம், அதுவும் அந்த 'சின்னசின்ன சிகரம் காட்டி'ங்கிற பாட்டு எடுத்தத பத்தி அவர் குடுத்த பேட்டி, அந்த போட்டோக்கள், எல்லாமே சேர்ந்து கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு கூடவே இருந்துச்சு. படன் அந்த அளவுக்கு இருந்துச்சா, இல்லையாங்கிற சமாச்சாரத்துக்கு நான் வரலைங்க.. விமர்சனம் செய்யிற அளவுக்கு நான் இன்னும் வரலை, அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம், அந்த் பாட்டை பத்தி மட்டும் பேசுவோம். |
புருஷங்காரன் போலீஸுக்கு போன் போட்டு இங்க ஒரு பொண்ண ரேப் பண்ணிட்டாங்க, அதுக்கு இவ்ளோ எடத்துல கீரல், இவ்ளோ எடத்துல பல்லு பதிஞ்சிருக்கு, அப்படின்னு சம்சாரத்த கலாய்ச்சுட்டு அப்படியே இந்த பாட்டுக்கு போகுது சீன். சூப்பரான லொகேஷன், கல்குவாரியில தண்ணி நிக்கும்போது எடுத்திருக்காங்க, காஸ்ட்யூம் கூட ரொம்ப ஆடம்பரமா இல்லாம அப்படியே கொஞ்சம் இதமான எலுமிச்சை/ஆலிவ் கலர்ல.. திப்பு'வும் சுனிதாவும் வைரமுத்துவோட, அதென்ன சொல்றது..??..ம்ம்.. காதல் ரசம் வழியும் வரிகளுக்கும், வித்யாசாகரோட மென்மையான இசைக்கும் உயிர் குடுத்து பாடியிருக்காங்க. பாட்டு எடுத்த விதத்துல தான் விஷயம். அப்படியே கொஞ்சம் வேகமா, கொஞ்சம் மெதுவா'ன்னு எல்லா காதல் பாட்டுகள் மாதிரி தான் எடுத்திருக்காங்க, ஆனா நடுவால இந்த குரூப்டான்ஸ் விஷயத்துல தான் நமக்கு 'போங்கடா'ன்னு ஆயிடுச்சு.. அப்படி என்னங்கரீங்களா??.. இவுங்க ரெண்டு பேரும் ஆடும் போது பின்னாடி 15 பேரை ஆட விட்டிருக்கலாம் அது தப்பில்லை, அது எல்லா படத்துலயும் நடக்கிறது தான், ஆனா இதுல தமாசு செய்ய்றேன்னு, பொம்பிளைகள போலீஸ் டிரஸ்ல ஆடவிட்டிருக்காங்க, அதுகூட விட்டராலாம், அதுக்கு தலைவியா ஒரு அம்மா, நல்லா தடியா, இவுங்கள புடிக்கிற மாதிரி கிட்ட வரதும், வந்து நல்லா வாய் நிறையா எதாவது அமுக்கிட்டி சாப்பிடறதும், அப்புறம் இவுங்கள புடிக்காம வயத்து புடிச்சுட்டு மறைவுக்கு போறதும் அப்புறம் மறுபடியும் வந்து, மறுபடியும் அதே.., சாப்பிடுறது, கலக்குறது, ஓடுறது.. இதுக்கு நடுவால இவுங்களோட காதல் பாட்டு.. யேய்!!!... சூப்பரான பாட்டு, சூப்பரான ஜோடி ஒரு 'வசீகரா' மாதிரி வர வேண்டிய பாட்ட இப்படி கக்கூஸ் ரேஞ்சுக்கு எடுக்க எப்படித்தான் இவுங்களுக்கு தோனுச்சோ.. அடப்போங்கப்பா. எனக்கு, எங்கூட ஹைஸ்கூல்ல படிச்ச 'தாந்தின்னி'ரங்கநாதன் தான் ஞாபகத்துக்கு வந்தான், அவன் தான் ஸ்கூல் இண்ட்ரவல்ல சாப்பிட கொண்டு வந்தத, யாருக்கும் தெரியாம வாஷ்ரூம்ல போயி சாப்பிட்டுட்டு வருவான், எப்படிரா அங்க போயி சாப்பிடரான்னு அப்ப ரொம்ப ஆச்சிரியபட்டேன்..!! இப்பவும்.. :-) |
ஆனா ப்ரித்விராஜ் தெரியும்ங்களா..?? மலையாள நடிகர், அவரோட 'வெள்ளித்திர' படம் ஏற்கனவே பார்த்திருக்கேன், அதுல ரஜினி ரசிகரா 'ஸ்டைல்ராஜ்'ன்னு பேருவச்சுகிட்டு வந்து கலக்குவாரு, அவர் தான் படத்துல வில்லன்.. சூப்பரா செஞ்சிருக்கார், அந்த ஒரு கேரக்டர உருவாக்கினதுக்காக 'ஆனந்த்'க்கு ஒரு 'ஜே' போடலாம்.. சும்மா இழைச்சு எடுத்திருக்காரு.. மூன்று முடிச்சு 'ரஜினி' மாதிரி ஒரு கேரக்டர்.. சரணோட 'இதயத்திருடன்' படத்துலயும் இதே மாதிரி நெகட்டிவ் ரோல் செய்ய்றாராம், பார்ப்போம், சமீபமா, இவரோட மழையாள படமெல்லால் ஊத்திகிச்சுனாங்க, தமிழ் ஒரு வேளை கைகுடுக்கலாம், சாத்தியம் நிறையாவே இருக்கு.. |
அந்த ஒரு பாட்டு எடுத்த விஷயத்துல நமக்கு ஏனோ படத்துல பெரிய ஈடுபாடு இல்லாம போச்சு..
கடல் தண்ணிய குடிதண்ணியா மாத்தறது, சின்ன வயசுல சொல்லாத காதல், கல்யாணத்த நிறுத்தறதுக்காக பொண்ணொட அம்மாவே பொண்ணை அவ நண்பன் கூட அனுப்பிச்சு வைக்கிறதுன்னு, இன்னும் படத்துல நிறையா இருக்குதுங்க.. ஆனாலும் அந்த பாட்டு மேட்டர் நமக்கு ஜீரணமே ஆகலைங்க... படத்துல ப்ரித்வியோட 'மதன்' கேரக்டர் அடிக்கடி சொல்ற மாதிரி..
|
------
# 87
Tuesday, May 10, 2005
Camera -Phone
'ஏன், அதுல பேசுனா மட்டும் காய்காசு நாலு தடவை கேக்காம, வியாபாரியே வந்து குடுத்திருவானா?'ன்னு எடக்கா பேசறாரு.
சரி அவுரு அந்த காலத்து ஆளு, நம்மளா முடிவு எடுக்கலாம்னா, அதுலயும் சிக்கல்.. வேறென்ன சில்லரை தட்டுபாடு தான். சரி எப்படியும் அய்யன சரிகட்டிரலாம், அதுக்குள்ள எந்த மாடல், என்ன விஷயம்னு முடிவு செஞ்சிரலாம்னு நம்ம சகா கிட்ட கேட்டா.. அவன் ஒரு மாடல் காமிச்சான் பாருங்க.. போடாங்க...
எல்லாருக்கும் என்னை பார்த்தா எளக்காராமாவே இருக்குதுங்க..
அப்படி என்ன மாடல்ங்கரீங்களா.. நீங்களே பாருங்க..
எல்லாருக்கும் நம்மள பார்த்தா எளக்காராமாவே இருக்கும் போல இருக்குதுங்க..!! :-(
--
# 86
Saturday, May 7, 2005
ஆல்பம்
Click on photo to en-large
"நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே..!"
-ன்னு பாடிருப்பாங்களா?? :-)
நன்றி :'வால்ரஸ்'
--
#85
Friday, May 6, 2005
பார்வைகள்
இந்த படத்துக்கு என்ன பாட்டு போடலாம்.. ம்ம்..
"உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்.."
இல்லை
"உன் பார்வை போலே என் பார்வை இல்லை.."
அடப்போங்கய்யா.. எதோ ஒரு பாட்டு, உங்களுக்கு புடிச்சத போட்டுக்கோங்க..
பாட்டுல என்னங்க இருக்கு, அந்த படம் சொல்ற விஷயத்துல தான் இருக்கு வித்தையே.. இப்படித்தான் ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் அவனவன் பார்வையில படுறத வச்சுகிட்டு ஒவ்வொன்னும் பேசிகிட்டு திரியறானுக.
--
என்னோட போன கல்யாணபத்திரிக்கை பதிவு பத்தி கருத்து சொன்னவங்க நிறையா பேரு, நான் சொந்தமா பதிவு எழுதறத விட எதாவது சுட்ட சமாச்சாரத்த பதிவு செய்யிறது தான் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. :-(
சரி, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்னு இந்த பதிவுலயும் 'சுட்ட' மேட்டரையே போட்டிருக்கேன்.
நன்றி : 'ஸ்ரீ'
#84